செய்திகள் :

கோவில்பட்டி: `யார் யாரோடு கூட்டணி சேர்ந்தாலும் சரி, திமுக கூட்டணி வெற்றி பெறுவது உறுதி!' - வைகோ

post image

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “அ.தி.மு.க., பா.ஜ.க., கூட்டணியில் த.வெ.க இணைந்தால் தி.மு.கவுக்கு பாதிப்பா என்று கேட்கிறீர்கள். அத்தைக்கு மீசை முளைத்த பிறகுதான் சித்தப்பா என்று சொல்ல முடியும். யூகங்கள், விருப்பங்கள் செய்திகளாக வந்து கொண்டிருக்கின்றன. இதில் எந்த அளவிற்கு உண்மை இருக்கிறது? புதிதாக உருவாக்கப்பட்ட த.வெ.க., பா.ஜ.க மற்றும் அ.தி.மு.க கூட்டணிக்கு செல்லுமா என்று தெரியாது.

பிரதமர் நரேந்திர மோடி

ஆனால், ஒரு வாரத்திற்குள் நிலைமை தெரியும். யார் யாரோடு கூட்டணி வைக்கிறார் என்று. யார் யாரோடு கூட்டணி சேர்ந்தாலும் சரி, என்ன முயற்சி செய்தாலும் சரி, தி.மு.க கூட்டணி வெற்றி பெறுவது உறுதி. நான் வழக்கம் போல பிரசாரத்தில் ஈடுபடுவேன். 2029 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர், பிரதமர் நாற்காலியில் மோடி உட்கார வாய்ப்பே கிடையாது.

கோவில்பட்டி சட்டமன்றத் தேர்தலில் ம.தி.மு.க சார்பில் போட்டியிடப் போவதாக பரவலாகப் பேசப்பட்டு வந்தது.

சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஒரு சதவீதம்கூடக் கிடையாது. நடிகர் ரஜினிகாந்த், சூப்பர் ஸ்டார் மட்டுமல்ல ஒரு பண்பாளர். யாரையும் எப்போதும் புண்படுத்திப் பேச மாட்டார். ரொம்ப யோசனை செய்து அரசியல் நமக்கு சரிபட்டு வராது என்று முடிவெடுத்து விட்டார்.

வைகோ

கற்பனையாக புதுக்கட்சிக்காரர்கள் ஏதாவது சொல்ல வேண்டுமென அவரைப்பற்றி பேசுகின்றனர். தனியாக கேட்டால் புதிய கட்சி தொடங்கியவரைப் பற்றிச் சொல்வார். தலைமைத் தேர்தல் அதிகாரியை நீக்கம் செய்ய வேண்டுமென எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ள தீர்மானம் சரியான நடவடிக்கை. அது நடந்தால் மகிழ்ச்சி” என்றார்.     

கூட்டணிக்கு தனி ரூட் பிடித்த ஆனந்த்; கடுப்பான விஜய்! தவெக - NDA கூட்டணி(?) நிலவரம் என்ன?

தவெக - NDA இடையே தீவிரமாக கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியிருந்தது. ஆனால், கடந்த இரண்டு நாட்களாக நடந்த சம்பவங்களின் அடிப்படையில் தவெக - NDA வுக்கு செல்ல வாய்ப்பே இல்லை என அடித்து ... மேலும் பார்க்க

ட்ரம்பை நெருக்கும் அமெரிக்க எண்ணெய் நிறுவனங்கள்: தயாராக இருக்கும் அமெரிக்கா; ஒத்துவராத ஈரான்

ஈரான் போர் 17-வது நாளாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான் என எந்தப் பிரிவினரும் இந்தப் போரை முடிவை நோக்கி நகர்த்தவில்லை. ஈரான் மற்றும் மேற்கு ஆசிய நாடுகளில் போரும், தாக்குதலும் தொடர... மேலும் பார்க்க

"விஜய்யை NDA கூட்டணியில் இணைய சொல்லி பேச்சுவார்த்தை நடத்தினேனா?"- பவன் கல்யாண் விளக்கம்

2026 ஆம் ஆண்டிற்கான தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலில் திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, தவெக என்ற நான்குமுனை போட்டி நிலவுகிறது. இதில் அதிமுக தலைமையி... மேலும் பார்க்க

`முதலமைச்சராவதற்கு தான் விஜய் அரசியலுக்கு வந்துள்ளார்!"- கூட்டணி குறித்த கேள்விக்கு செங்கோட்டையன்

தவெக நிர்வாக குழு ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், “டெல்லி சிபிஐ விசாரணை தொடர்பாக தவெக தலைவர் விஜய் அவரது... மேலும் பார்க்க