செய்திகள் :

கத்தார் கேஸ் ஆலையில் பயங்கர வெடிவிபத்து; 12 இந்தியர்கள் உட்பட 13 பேர் உயிரிழப்பு; என்ன நடந்தது?

post image

கத்தாரில் உள்ள ஒரு மாபெரும் எரிவாயு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில், 12 இந்தியர்கள் உட்பட 13 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 66 பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கத்தாரின் முக்கிய எரிசக்தி மையமான 'ராஸ் லஃப்பான்' (Ras Laffan) தொழிற்துறை நகரில் உள்ள பர்சான் கேஸ் சப்ளை ஆலையில்தான் இந்தத் துயரமான சம்பவம் நடந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை இரவு நேரத்தில், வழக்கம்போல ஆலை இயங்கிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.  

கடந்த மார்ச் மாதம் ஏற்பட்ட சில பிரச்னைகள் காரணமாக, இந்த ஆலையின் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தன. அதன்பின்னர், மீண்டும் பணிகளைத் தொடங்குவதற்கான ஆரம்பகட்ட வேலைகள் நடந்து கொண்டிருந்தபோதுதான் எதிர்பாராத விதமாக இந்த வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் உயிரிழந்த 13 பேரில் 12 பேர் இந்தியர்கள் என்பதையும், ஒருவர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர் என்பதையும் கத்தார் நாட்டின் எரிசக்தித் துறை அமைச்சர் உறுதிப்படுத்தியுள்ளார்.

விபத்து நடந்த இடத்திற்கு விரைந்த மீட்புக்குழுவினர் தீயை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். காயமடைந்த 66 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், தற்போது அவர்களுடைய உயிருக்கு ஆபத்து இல்லை என்றும் கத்தார் அரசு தெரிவித்துள்ளது.

இந்த விபத்து எந்தவொரு சதிவேலையோ அல்லது திட்டமிட்ட தாக்குதலோ அல்ல என்றும், முற்றிலும் எதிர்பாராமல் நடந்த ஒரு தொழில்நுட்பக் கோளாறு என்றும் அந்நாட்டு அரசு விளக்கம் அளித்துள்ளது.

வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த இந்தியத் தொழிலாளர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்த செய்தி அவர்களது குடும்பத்தினரிடையே பெரும் மீளாத் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

கத்தாரில் உள்ள இந்தியத் தூதரகம் அந்நாட்டு அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து வரும் அதிகாரிகள், உயிரிழந்தவர்களின் உடல்களை விரைவில் தாயகம் கொண்டு வருவதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

"அவர்களுக்கு அடிமைகள்தாம் தேவை" - உத்தவ் கட்சியிலிருந்து விலகியது குறித்து MPக்கள் சொல்வது என்ன?

மகாராஷ்டிராவில் முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவில் இருந்து 6 எம்.பி.க்கள் துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவிற்குத் தாவுவதாக அறிவித்திருந்தனர். இதற்காக அவர்கள் முதலி... மேலும் பார்க்க

மேற்கு வங்கம்: கட்சித் தலைவர் பதவியிலிருந்து மம்தா பானர்ஜி நீக்கம்!? - TMC பரபரப்பு நகர்வு

2026 தேர்தல் எதிரொலிமேற்கு வங்கத்தில் மூன்று முறை முதல்வராக இருந்தவர் மம்தா பானர்ஜி. தன் வலுவான குரலாலும், உறுதியான நடவடிக்கைகளாலும் இந்தியா முழுவதும் கவனம் பெற்றவர். எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி... மேலும் பார்க்க

அயோத்தி ராமர் கோயில் நிதி மோசடிப் புகார்: யோகி ஆதித்யநாத் அரசுக்கு நெருக்கடி! - என்ன நடக்கிறது?

அயோத்தி கோயில் விவகாரம்உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரமாண்டமாகக் கட்டப்பட்டுள்ள ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா கோவில், கடந்த 2024-ம் ஆண்டு ஜனவரி 22-ம் தேதி அன்று முறைப்படி திறக்கப்பட்டது. ... மேலும் பார்க்க

சட்டமன்றக் கூட்டம்: இன்று எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு முதல்வர் விஜய் பதிலளிப்பாரா? | Live Update

முதல்வரின் பதில்கள் இன்று!முதல்வர் விஜய்சட்டமன்றத்தின் மூன்றாம் நாள் கூட்டம் இன்று நடைபெறவிருக்கிறது. நேற்றைய சட்டமன்றக் கூட்டத்தில் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக எழுந்த சலசலப்பில் அதிமுக பொதுச் செயலா... மேலும் பார்க்க

பிரிட்டன்: ஸ்டார்மர் அதிரடி ராஜினாமா... அடுத்த பிரதமராகப் போகிறாரா ஆண்டி பர்ன்ஹாம்? யார் இவர்?!

பிரிட்டன் அரசியலில் அடுத்தடுத்து அரங்கேறும் அதிரடி மாற்றங்களுக்கு மத்தியில், லேபர் கட்சியின் கீர் ஸ்டார்மர் தன் பதவியை ராஜினாமா செய்வதாக நேற்று (திங்கள்கிழமை) அறிவித்தார்.பிரிட்டன் அரசியலில் பெரும் தி... மேலும் பார்க்க