செய்திகள் :

கருப்புக் கண்ணாடி கார்... முகம்பார்க்க முடியாத இருள்.! – ஈரான் அதிபருக்கு நேர்ந்த விசித்திரம்!

post image

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளின் கூட்டு வான்வழித் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவரான அயதுல்லா அலி கமேனி கடந்த பிப்ரவரி 28 அன்று கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து, மொஜ்தபா காமேனி உச்சத் தலைவராகப் பொறுப்பேற்றார். ஆனால் அவர் பொறுப்பேற்று பல மாதங்கள் ஆகியும், அவர் பொதுவெளியில் தோன்றாமலும், அவரது குரல் பதிவு வெளியாகாமலும் இருக்கிறது. முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அவர் கொல்லப்பட்டிருக்க 90% வாய்ப்புள்ளதாகக் கூறியிருந்தாலும், இஸ்ரேல் அவர் உயிருடன் இருப்பதாகவே நம்புகிறது.

மொஜ்தபா காமேனி
மொஜ்தபா காமேனி

இந்த நிலையில், ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன், புதிய உச்சத் தலைவர் மொஜ்தபா காமேனியுடன் இரண்டரை மணி நேரம் சுமுகமான சூழலில் ஆலோசனை நடத்தியதாகத் தெரிவித்திருக்கிறார். ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன் இந்தச் சந்திப்புக்கு அனுமதி பெற அவர் பலமுறை கோரிக்கை விடுத்து, இறுதியில் ராஜினாமா செய்வதாக எச்சரித்த பின்னரே அனுமதி வழங்கப்பட்டதாக தெரிகிறது.

இது தொடர்பாக 'Iran International' வெளியிட்டுள்ள செய்தியின்படி, கடந்த மே 31 அன்று, அதிபர் பெஷெஷ்கியன் உச்சத் தலைவரின் அலுவலகத்திற்குத் தனது அதிகாரப்பூர்வ ராஜினாமா கடிதத்தை அனுப்பினார். நாட்டின் நிர்வாகத்தில் புரட்சிகரக் காவல் படையினரின் (IRGC) ஆதிக்கம் எல்லை மீறிவிட்டதாகவும், அதிபர் மற்றும் அமைச்சரவை புறக்கணிக்கப்படுவதாகவும் அதில் குற்றம்சாட்டியிருந்தார். அதைத் தொடர்ந்தே, இந்த சந்திப்பு நிகழ்ந்திருக்கிறது. அதிகாரப்பூர்வ இல்லத்திற்குப் பதிலாக டெஹ்ரானில் உள்ள ஒரு ரகசிய இடத்திற்கு அதிபரின் பாதுகாப்புக் குழுவினர் அவரை அழைத்துச் சென்றனர்.

ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்
ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்

அங்கு அவர் கருப்பு கண்ணாடி பொருத்தப்பட்ட ஒரு காரின் பின்னிருக்கையில் அமர வைக்கப்பட்டார். அங்கு ஏற்கனவே அமர்ந்திருந்த மொஜ்தபா காமேனியுடன் சில நிமிடங்கள் மட்டுமே இருட்டில் பேச அனுமதி வழங்கப்பட்டது. போதிய வெளிச்சமின்மை மற்றும் கைகுலுக்க விதிக்கப்பட்ட தடையால், அருகில் இருந்த நபர் உண்மையிலேயே மொஜ்தபா காமேனிதானா அல்லது அவரது குரல் தானா என்ற சந்தேகம் அதிபருக்கு எழுந்ததாகக் கூறப்படுகிறது.

காமேனியின் குடும்ப உறவினரான முகமது பாகர் கர்ராசியின் கூற்றுப்படி, பெஷெஷ்கியன் இதுவரை 28 முறை ராஜினாமா செய்ய முயன்றதாகவும், அடுத்தமுறை ராஜினாமா செய்தால் ஏற்றுக்கொள்ளப்படும் என மொஜ்தபா எச்சரித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

'கைது வேண்டாம்' ; சொல்லியும் கேட்காத முதல்வர் முதல் பி.கே வெற்றி, குஷியில் சீமான் வரை! | கழுகார்

கேட்காத முதல்வர்!'கைது வேண்டாம்' எடுத்துக்கூறிய அதிகாரிகள்...தஞ்சை ஆர்ப்பாட்டத்தில் நடிகை குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தை உடனடியாக முதல்வர் கவனத்துக்கு எடுத்துச் சென்றிருக்கிறார்கள் அதிகாரிகள். ஆரம்... மேலும் பார்க்க

வேளாண் பட்ஜெட்: முதல்வரின் ஆலோசனையும் - விவசாயிகளின் எதிர்பார்ப்பும்!

கடந்த மாதம் திருநெல்வேலியில் நடைபெற்ற விவசாயிகள் கருத்துக்கேட்புக் கூட்டத்தில் பேசிய வேளாண் அமைச்சர் ஆர்.வினோத், விவசாயிகளின் குரலுக்கு பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்படும் என உறுதி அளித்தார். குற... மேலும் பார்க்க

TN Budget: ``நம்பிக்கையூட்டும் நிதிநிலை அறிக்கை" - திருமாவளவன் புகழாரம்!

தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த பட்ஜெட் நம்பிக்கையளிப்பதாக திருமாவளவன் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், `` தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றிருக்கும் பல்வேற... மேலும் பார்க்க

மீனாட்சியம்மன் கோயில் கோயில் நில விவகாரம்; ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கைது

மதுரை மாநகர் கோரிப்பாளையம் ஹக்கிம் அஜ்மல்கான் சாலையில் அசோதா விலாஸ் பங்களா மற்றும் அதனுடன் இணைந்த தோட்டம், மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் மற்றும் அழகர் கோயிலுக்கு சேவை செய்வதற்காக கடந்த 1930 ஆம் ஆண்டு ... மேலும் பார்க்க