செய்திகள் :

கரூர்: ஆசிரியர் வீட்டில் 32 பவுன் நகை திருட்டு; காவல் நிலையம் அருகிலேயே அதிர்ச்சி சம்பவம்

post image

கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள காவிரி நகர் பகுதியில் தர்மராஜ் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர், குளத்துப்பாளையம் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் இவர் கடந்த 19-ம் தேதி தனது உறவினரைப் பார்ப்பதற்காக குடும்பத்துடன் பெங்களூருக்குச் சென்றுள்ளார். அதன்பிறகு, இன்று அதிகாலை சுமார் 4 மணியளவில் குடும்பத்துடன் வீடு திரும்பியபோது, வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

தொடர்ந்து, வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 32 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

robbery
robbery

இதையடுத்து, வீட்டிற்கு எதிரே உள்ள தான்தோன்றிமலை காவல் நிலையத்தில் உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார், கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தடயவியல் துறை அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு, கொள்ளையர்களின் தடயங்கள் ஏதேனும் கிடைக்கிறதா என்பது குறித்தும் ஆய்வு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தான்தோன்றிமலை காவல் நிலையத்திலிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் உள்ள வீட்டிலேயே இந்தக் கொள்ளைச் சம்பவம் நடந்திருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ராணிப்பேட்டை: பெண் குழந்தை மாயம் - ஒரு மாதமாகியும் துப்பு கிடைக்காமல் போலீஸ் திணறல்!

ராணிப்பேட்டை மாவட்டம், லாலாபேட்டையைச் சேர்ந்த நாடோடி சமூக தம்பதி சேகர் - பிரேமா. இவர்கள் குப்பைகளில் இருந்து பழைய பொருள்கள் மற்றும் பாட்டில்களை சேகரித்து காயலான் கடையில் விற்று அதில் கிடைக்கும் வருவாய... மேலும் பார்க்க

Finance with Harish: Cyber Bullying-ஆல் இறந்தாரா? `முதலமைச்சரை தெரியும்' என மிரட்டல்? | Full Detail

செபி என்பது பங்குச்சந்தை சரியாக இயங்குகிறதா, ஏதேனும் மோசடிகள், குளறுபடிகள் நடக்கிறதா என்பதை மட்டும் கண்காணிக்கும் அமைப்பு அல்ல.அதைச் சார்ந்து இயங்குபவர்களும் சரியானவர்களா, பொதுவெளியில் சரியான அறிவுரைக... மேலும் பார்க்க

"என்மீது மனைவி போட்டது பொய் வழக்கு" - காணொளி வெளியிட்டுவிட்டு 1700 அடி பள்ளத்தில் குதித்த இளைஞர்

குஜராத் மாநிலம் பாவ்நகரைச் சேர்ந்தவர் விஷ்வராஜ்சிங் கோலி(24). தபால் துறையில் பணியாற்றும் கோலிக்குக் கடந்த பிப்ரவரி மாதம்தான் திருமணம் நடந்தது. ஆனால் அவர்களது திருமணம் சில மாதங்களில் பிரச்னையில் முடிந்... மேலும் பார்க்க

பெண் எஸ்.ஐ மீது தாக்குதல்; நண்பனுடன் கைதான முன்னாள் ராணுவ வீரர்; கண்ணமங்கலத்தில் நடந்தது என்ன?

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த கண்ணமங்கலம் - வேலூர் இடையிலான வல்லம் டோல்கேட் அருகாமையில் நேற்று இரவு காரை நிறுத்திவிட்டு, அதில் பயணித்த 2 பேர் மது குடித்திருக்கின்றனர். போதை தலைக்கேறியதும் சாலையில... மேலும் பார்க்க

நர்ஸ் வேடத்தில் வீட்டிற்கே சென்று மயக்க ஊசி; நகைக்காக நடந்த கொடூரம்; ஈரோட்டில் திக் திக் சம்பவம்

ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகில் உள்ள கொளாநல்லியைச் சேர்ந்தவர் 60 வயதான வள்ளியம்மாள். வீட்டில் தனியாக வசித்து வரும் நிலையில், கடந்த 15‌ ம் தேதி மாலை வள்ளியம்மாள் வீட்டிற்குச் சென்ற இரண்டு நபர்கள் தங்கள... மேலும் பார்க்க

சென்னை: பெண்கள் விடுதிக்குள் புகுந்த எலக்டிரிஷியன் - தூங்கிக் கொண்டிருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை

சென்னை, வேளச்சேரி பகுதியிலுள்ள பெண்கள் விடுதியில் 27 வயது பெண் ஒருவர் தங்கி, படித்துவருகிறார். இவர் 17.10.2026-ம் தேதி இரவு விடுதியில் உள்ள அறையில் தோழியுடன் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது, 18-ம் த... மேலும் பார்க்க