செய்திகள் :

கரூர்: 'சஷ்டி நாளில் கிடா வெட்ட முடிவு செய்துள்ளார்கள்; தடுக்க வேண்டும்!'- எஸ்.பி அலுவலகத்தில் மனு

post image

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள கடவூர் தாலுக்கா தே.இடையப்பட்டி, காமராஜ் நகர் ஊர்பொதுமக்கள் கோவில் திருவிழா ஒற்றுமையாக நடத்த கோரியும் , கந்த கரூர் அருகே சஷ்டி நாளில் கிடாவெட்டு நடத்த எதிர்ப்பு தெரிவித்தும் கரூர் எஸ்.பி அலுவகத்தில் இன்று மாலை கோரிக்கை மனு அளிக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த ஊர் முக்கியஸ்தர் நாகமணி தெரிவிக்கையில், "கடவூர் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த 18 கிராம பொதுமக்கள் தே.இடையப்பட்டி காமராஜ் நகர் பகுதியில் சுமார் 200 குடிபாடுகள் கொண்ட தெய்வமான ஸ்ரீ மதுரை வீரன் சுவாமி மற்றும் ஸ்ரீ முருகன் மற்றும் ஸ்ரீ அக்னி பாப்பாத்தி அம்மனை ஒவ்வொரு ஆடி மாதமும் திருவிழா கொண்டாடி வருகின்றோம். ஒவ்வொரு ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை ஒன்று கூடி, விமர்சையாக அம்மனுக்கு நேர்த்திக்கடன் மற்றும் பொங்கல் வைத்து, கிடாவெட்டு நடத்துவது காலங்கலமாக வழக்கமாக தொடர்ந்து வருகிறார்கள்.

manu

கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருவிழா செலவுத் தொகை சம்பந்தமாக தனிப்பட்ட சிலர் கணக்கு கேட்டது தொடர்பாக ஏற்பட்ட கருத்து முரண்பாட்டால், கோயில் நிர்வாக குழுவிற்கும் குடிபாட்டு மக்களுக்கும் இடையே கருத்து ஒற்றுமை ஏற்படாமல் திருவிழா நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு , கோயில் திருவிழாவை தனிப்பட்ட முறையில் நடத்துவதற்காக ஏற்பாடுகள் செய்து வந்ததால், இன்று கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் கோயில் திருவிழாவை ஒற்றுமையாக நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை மனு அளிக்க வந்திருக்கிறோம்" என்றார்.

தனிநபர்கள் சிலர் திருவிழா ஏற்பாடுகளை செய்து, கந்த சஷ்டி விரதம் மேற்கொள்ளும் ஞாயிற்றுக்கிழமை நாளில் கிடாவெட்டு நடத்த இருப்பதை தடுத்து நிறுத்திட வேண்டும் எனவும் ஊர் பொதுமக்கள் கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், கரூர் மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்கள் அமைதியான முறையில் திருவிழா நடத்துவதற்கு பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படும் என உறுதி அளித்ததால் மக்கள் நம்பிக்கையுடன் திரும்பி சென்றனர்.

அமெரிக்கா முழுவதும் விமான சேவை முடக்கம்: 6,600 விமானங்கள் ரத்து, 8,600 தாமதம்! என்ன நடந்தது?

அமெரிக்காவில் விமானப் போக்குவரத்தைக் கட்டுப்படுத்தும் Federal Aviation Administration (FAA), நவம்பர் 13-ஆம் தேதி நாடு முழுவதும் விமானங்கள் புறப்படுவதற்குத் தற்காலிகத் தடை விதித்தது. விமானப் போக்குவரத்... மேலும் பார்க்க

Agilisium: 'பாராட்டுகிறோம்!'- ஹைதராபாத் செல்லவிருந்த நிறுவனத்தைத் தடுத்த தமிழக அரசு; நெகிழ்ந்த CEO

முன்னணி டேட்டா அனலிடிக்ஸ் மற்றும் ஏஐ நிறுவனமான 'அஜிலிசியம்' (Agilisium) நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் சிஇஓ ராஜ் பாபு, தமிழக அரசின் செயல்பாட்டைப் பாராட்டி தனது லிங்க்ட்இன் பக்கத்தில் நெகிழ்ச்சியான பதிவ... மேலும் பார்க்க

"டெல்லிக்குச் சென்றபோது இந்தி தெரியாமல் சிரமப்பட்டேன்" வருத்தப்பட்ட அமைச்சர் ராஜேஷ்குமார்!

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த குழந்தைகள் தினவிழா மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதாப் தலைமையில் நடைபெற்றது. கனிமவளத் துறையின் இயக்குநரும், குமரி மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான ப... மேலும் பார்க்க

"என்னுடன் விவாதம் நடத்தினால் மோடி பிரதமராக இருக்கமாட்டார்" - போனை பதிவு செய்வதாக கூறும் ராகுல்

எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இன்ஸ்டாகிராமில் என்னிடம் கேளுங்கள் என்ற ஆன்லைன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதில் பொதுமக்கள் மற்றும் அவரது கட்சியினர் கேட்ட கேள்விகளுக்கு ராகுல் காந்தி பதிலளித்தார... மேலும் பார்க்க