செய்திகள் :

கரூர்: வங்கி மேலாளரை மிரட்டி பணம் பறிப்பு; திமுக பிரமுகரைக் கைதுசெய்த போலீஸார்!

post image

திருச்சி, அகிலாண்டபுரம் தாயுமானவர் தெருவை சேர்ந்தவர் ஜெயராமன். இவரது மகன் சிவா (வயது: 33). இவர், குளித்தலை காவல் நிலையம் அருகில் செயல்பட்டு வரும் தனியார் வங்கியின் கிளையில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இந்த வங்கியில் கடந்த சில மாதங்களுக்கு முன் ஒரு பெண் ஒருவர் நகை அடகு வைத்து பணம் பெற்ற வகையில் வங்கிக்கும், அந்த பெண்ணுக்கும் பிரச்னை இருந்து வந்துள்ளது. இது குறித்து ஏற்கனவே காவல் நிலையத்தில் புகார் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து தகவல் அறிந்த இரும்பூதிப்பட்டி காலனியை சேர்ந்த தி.மு.க பிரமுகரான பிச்சை (எ) பிச்சைமுத்து (வயது: 55) என்பவர் தனியார் வங்கியின் கிளை மேலாளர் சிவாவை அணுகி அந்தப் பெண்ணுக்கும், வங்கிக்கும் ஏற்பட்ட பிரச்னையை தான் தீர்த்து வைப்பதாக கூறியுள்ளார்.

pichai

அதற்காக, வங்கி மேலாளரிடம் ஏற்கனவே ரூ.10 ஆயிரம் பெற்றதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, வங்கி மேலாளரை மிரட்டி மேலும் பணம் கேட்ட பொழுது வங்கி மேலாளர் சிவா குளித்தலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை பெற்றுக் கொண்ட குளித்தலை இன்ஸ்பெக்டர் கருணாகரன் வழக்கு பதிவு செய்து மோசடியில் ஈடுபட்ட தி.மு.க பிரமுகர் பிச்சைமுத்து மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து, அவரை கைதுசெய்தார். தனியார் வங்கி மேலாளரிடம் மிரட்டி பணம் கேட்ட தி.மு.க பிரமுகர் கைதாகியுள்ள சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

பெண் எரித்துக் கொலை; நான்கு மனைவிகளுடன் வாழ்க்கை - முன்னாள் காவலர் கைதான அதிர்ச்சி பின்னணி!

திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் அருகே உள்ள வட்டமலைக்கரை அணை பகுதியில் பெண் ஒருவர் உடல் கருகிய நிலையில் கடந்த 5-ஆம் தேதி பிணமாக கிடந்தார். அங்கு கால்நடைகளை மேய்க்கச் சென்றவர்கள் கொடுத்த தகவலின் அடிப்ப... மேலும் பார்க்க

திருப்பதி: `இது பட்டு இல்ல பாலிஸ்டர்' ரூ.54 கோடி மோசடி - சோதனையில் அதிர்ச்சி

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பட்டு துப்பட்டா வழங்கியதில் மோசடி நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் திருப்பதி தேவஸ்தனம் போர்டு தலைவர் பி.ஆர்.நாயுடு, கோயிலுக்கு வழங்கப்படும் பட்டு துப்... மேலும் பார்க்க

குமரி: தனியார் ரிசார்ட்டில் பிறந்தநாள் விழா பெயரில் 'போதை கூடுகை'- 7 பேரை கைதுசெய்த குமரி போலீஸ்!

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே மருங்கூர் பேரூராட்சிக்கு உட்பட்ட இடத்தில் ஆற்றின் கரை ஓரமாக தனியாருக்கு சொந்தமான ரிசார்ட் இயங்கி வருகிறது. இங்கு தடை செய்யப்பட்ட உயர் ரக போதை பொருட்கள் பயன்படு... மேலும் பார்க்க

25 பேர் பலியான கோவா நைட் கிளப் தீ விபத்து; டெல்லி மருத்துவமனையில் உரிமையாளர் ஒருவர் கைது

சுற்றுலாவிற்கு மிகவும் புகழ்பெற்ற கோவாவில் கடந்த வாரம் ‘Birch by Romeo Lane’ என்ற நைட்க்ளப்பில் திடீரென இரவில் தீப்பிடித்ததில், சுற்றுலா பயணிகள் உட்பட 25 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இத்தீவிபத்து தொடர... மேலும் பார்க்க

தண்ணீரா? ஆசிட்டா? முகமூடி கொள்ளையனை விரட்டிய 70 வயது மூதாட்டி - வைரல் வீடியோ

சிவகாசி பழனியாண்டவர்புரம் காலனியில் வசிப்பவர் மகேஸ்வரி (70). இவர் தனது வீட்டில் தனியாக வசித்து வருகிறார். அதிகாலை 5 மணியளவில் தனது வீட்டின் முன்பக்கக் கதவைத் திறந்து வாசல் பகுதியைத் தண்ணீர் தெளித்துச்... மேலும் பார்க்க

`அவனுடன் இருப்பது போன்று என்னுடனும்.!’ - பெண்ணுக்கு தொல்லை; நண்பனை வெட்டி போர்வெல்லில் போட்ட வாலிபர்

குஜராத் மாநிலம் மேற்கு கட்ச் பகுதியில் நாகத்ரனா எனும் பகுதியின் அருகில் உள்ள முரு என்ற கிராமத்தை சேர்ந்த ரமேஷ்(20) என்ற வாலிபரை கடந்த சில நாட்களாக காணவில்லை. இதையடுத்து ரமேஷ் சகோதரர் இது குறித்து போலீ... மேலும் பார்க்க