செய்திகள் :

`கலைஞர் டிவி சீரியலில் வந்த 'Blast-u Blast-u' பஞ்ச்' - 'ருத்ரா' தொடரை முடிக்கும் முடிவில் சேனல்?

post image

Blast-u Blast-u...

ஜனநாயகன் படத்தில் வெளியான பாடலில் இடம் பிடித்திருந்த, Blast-u Blast-u... வரிகள் வைரல். தவெக கூட்டத்தில் கூட விஜய் இந்த வார்த்தைகளை பேசி இருப்பார். இப்போது, கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில் அதே Blast-u Blast-u வசனம் இடம் பெற்றதால் தொடரை முடிக்கச் சொல்லி விட்டார்களாம் என்கிறார்கள்.

கலைஞர் டிவியில் இரவு 7.30 க்கு ஒளிபரப்பாகி வந்த சீரியல் 'ருத்ரா'... த்ரில்லர் டைப் கதை. கடந்த மாதம் தான் நூறு நாள்களைத் தாண்டியது. குறைந்த பட்சம் இன்னும் ஒரு வருடத்துக்காவது தொடர் போகும் எனச் சொன்னார்கள் சீரியல் யூனிட்டிலிருந்தவர்கள்.

இந்தச் சூழலில் திடீரென தற்போது தொடரை முடிக்கச் சொல்லி விட்டார்கள் என்கிற பேச்சு சின்னத்திரை வட்டாரத்தில் கேட்க, தொடர் சம்பந்தப்பட்ட சிலரிடம் பேசினோம்.

''அப்படிதான் சொல்றாங்க. நீங்க, தொடரில் ஹீரோயின் கணவரா நெகடிவ் கேரக்டரில் நடிக்கிறாரே அருண்கிட்ட கேளுங்க, டீடெய்லா சொல்வார்' எனச் சொல்ல, அருணிடமே பேசினோம்.்

விவசாய வேலைகளில் நடிகர் அருண்

''சீரியலின் கதையில நான் வில்லன். இப்ப நிஜமாகவே வில்லனாகிட்டேனு நினைக்கிறேன். கலைஞர் டிவி சீரியல்ல இதுக்கு முன்னாடி கூட நடிச்சிருக்கேன். இந்த முறை சேனல் வேற கண்ணோட்டத்துடன் பார்க்குதுன்னு நினைக்கேன்.

'ஜனநாயகன்' படத்துல நான் நடிச்சிருக்கேன். மத்தபடி நான் அதிகாரபூர்வமா தவெகவுல இன்னும் சேரலை. ஜனநாயகன்ல நடிக்கறதுக்கு முன்னாடியே பொதுவான விஷயங்களில் என் கருத்தை ஓபனாப் பேசியிருக்கேன். அது அரசியல் சார்ந்த விஷயம்னாலும், 'ஜனநாயகன்' படத்துல கமிட் ஆனப்ப, கொஞ்ச நாளைக்கு வீடியோ போடறதை நிறுத்திக்கங்கனு சொன்னாங்க. அதனால சரின்னு நானும் வீடியோ போடலை. ஆனா என் கருத்தை தைரியமா சொல்றதுல எனக்கு எந்தப் பயமும் எப்பவும் இருந்தது கிடையாது.

ஜனநாயகன்ல நடிச்சதுல இருந்து விஜய் சாருடைய அரசியல் நடவடிக்கை தொடர்பா எனக்குத் தோணுகிற கருத்தை சில இடங்கள்ல பேசியிருக்கேன்.

விசில் சின்னம் தொடர்பா ஒரு வீடியோ போட்டதும் அந்த வகையிலதான். என்னுடைய இந்த வீடியோக்கள் சேனல் சைடுல சிலரை அப்செட் செய்திருக்குனு நினைக்கிறேன். அதனால அவங்க சீரியல்ல இருந்து என்னை தூக்க நினைச்சிருக்காங்க.

TVK VIJAY

ஆனா மெயின் வில்லனான என்னைச் சுத்தியே கதை நகரும்கிறதால, என்ன செய்யறதுனு நினைச்சிருக்காங்க. ஆளை மாத்திடலாம்தான். ஆனா அப்படிச் செஞ்சா அவரை மட்டும் மாத்தினா விஜய்க்கு ஆதரவாப் பேசினதால மாத்திட்டாங்கனு பேசுவாங்கனு மொத்தமா சீரியலையே முடிச்சிடச் சொல்லிட்டாங்க. இன்னும் ரெண்டு வாரத்துல சீரியல் முடியப் போகுது. சீரியல்ல நடிச்சிட்டிருக்கிற ஆர்ட்டிஸ்டுகள்கிட்ட இதுபத்திச் சொல்லிட்டதா தெரியுது'' என்றவரிடம்,

'தொடரில் அங்கங்கே விஜய் பேசிய டயலாக் இடம் பெற்றதாகச் சொல்கிறார்களே' எனக் கேட்டோம்.

'அது திட்டமிட்டெல்லாம் செய்ததில்லை. சீனியர் ஆர்ட்டிஸ்டுகள் நடிக்கிற சீரியல்கள்ல டயலாக் பேசறப்ப சொந்தமா பேசறது வழக்கம்தான். கதையின் சுவாரஸ்யத்தைக் கூட்டத்தான் அப்படி செய்வாங்க. அந்த மாதிரிதான் ஒரு நாள் பிளாஸ்டு பிளாஸ்டுனு பேசினேன். விஜய் சார் பேசி வைரலானதுங்கிற அளவுல மட்டும்தான் யோசிச்சேனே தவிர, திமுகவுக்கு எதிரான டயலாக்னெல்லாம் எனக்குத் தோணலை... ஆனா சேனல் ஆட்கள் லேட்டா இதைக் கவனிச்சு அரசியலாப் பார்த்துட்டாங்க.

எனக்கு என்ன வருத்தம்னா... என் கேரக்டருக்கு வேற ஆர்ட்டிஸ்ட்டை போட்டுருக்கலாம். சீரியலையயே முடிச்சிருக்கத் தேவையில்லை. ஒரு சீரியல் ஒளிபரப்பாகிறப்ப ஆர்ட்டிஸ்ட், டெக்னீஷியன்னு பல பேருக்கு வேலை கிடைக்குதுங்க'' எனக் கொஞ்சம் கவலையுடனே முடித்தார் அருண்.

Serial Update: நேரம் மாறிய சீரியல், அதிருப்தியில் ஆர்ட்டிஸ்டுகள்? டு `கூமாப்பட்டி' காட்டில் மழை!

அதகளமான `ஆடுகளம்'?பிரைம் டைடமில் ஒளிபரப்பாகி வந்த 'ஆடுகளம்' சீரியல், மாலை நேர ஸ்லாட்டுக்கு மாற்றப்பட்டதில் அதில் நடித்த ஆர்ட்டிஸ்டுகள் சிலர் அதிருப்தியடைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.காயத்ரி ஜெயராமன், ... மேலும் பார்க்க