செய்திகள் :

தாய் கிழவி : "சினிமாவை ஒரு படி முன்னே எடுத்துச் சென்றிருக்கும் படைப்பு"- ஜோதிகா பாராட்டு

post image

சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள ‘தாய் கிழவி’ படத்தில் ராதிகா சரத்குமார், பால சரவணன், சிங்கம்புலி, முனீஸ்காந்த், முத்துக்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்திருக்கிறார். நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்திருக்கிறார்.

இப்படம் நாளை (பிப்.27) வெளியாக இருக்கிறது. இந்நிலையில் ‘தாய் கிழவி’ படத்தைப் பாராட்டி நடிகை ஜோதிகா தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார்.

‘தாய் கிழவி' படத்தில்
‘தாய் கிழவி' படத்தில்

``பெண்மையின் வலிமையை இவ்வளவு அழகாகத் திரையில் காண்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. மனதிற்கு இதமாகவும், புத்துணர்ச்சியாகவும் இருப்பதோடு மட்டுமல்லாமல், இது ஒரு மிக முக்கியமான முற்போக்கான திரைப்படம்.

இது உண்மையிலேயே உங்கள் முதல் படமா?

இயக்குநர் சிவகுமார் முருகேசன் அவர்களுக்கு - இது உண்மையிலேயே உங்கள் முதல் படமா? சமூகத்திற்கு எவ்வளவு முக்கியமான ஒரு கருத்தைச் சொல்லியிருக்கிறீர்கள்!

குறிப்பாக நகைச்சுவையோடு சொல்லியிருப்பது சிறப்பு. ஒரு பெண்ணாக உங்கள் கதையைப் பார்க்கும்போது மிகவும் பெருமையாக உணர்ந்தேன். உங்கள் சிந்தனை ஓட்டம் உங்கள் நற்பண்பைப் பிரதிபலிக்கிறது.

சிவகார்த்திகேயன்- சிவகுமார் முருகேசன்
சிவகார்த்திகேயன்- சிவகுமார் முருகேசன்

சிவகார்த்திகேயனுக்கு எனது பாராட்டுகள்

சிவகார்த்திகேயன் அவர்களுக்கு - ராதிகா மேடம் போன்ற ஒரு மகா கலைஞருக்கு, அவர் தகுதிக்கேற்ற ஒரு மேடையை அமைத்துக் கொடுத்ததற்கு நன்றி.

வயதுத் தடையைத் தாண்டி, ஒரு பெண்ணின் தூயத் திறமையை மையமாக வைத்துப் படம் எடுத்ததற்காக ஒட்டுமொத்த நடிகையர் சமூகத்தின் சார்பாகவும் உங்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு பெண் மையத் திரைப்படத்திற்குத் துணையாக நின்றதற்கு எனது பாராட்டுகள்.

உங்கள் நடிப்பு என்னை வியக்க வைக்கிறது!

ராதிகா சரத்குமார் அவர்களுக்கு - உங்கள் நடிப்பு என்னை வியக்க வைக்கிறது! மிகுந்த ஊக்கம் அளிக்கிறது. இந்த கதாபாத்திரத்திற்காக நீங்கள் உடல் ரீதியாக எவ்வளவு கடினமாக உழைத்திருப்பீர்கள் என்பதை என்னால் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை.

'தாய் கிழவி' கதாபாத்திரம் வலிமையானது மற்றும் புத்திசாலித்தனமானது மட்டுமல்ல, மிகவும் க்யூட்டான ஒன்றும்கூட. திரைக்குப் பின்னால் இருக்கும் உங்கள் நிஜமான குணாதிசயத்தின் பிரதிபலிப்புதான் இந்த கதாபாத்திரம்.

ராதிகா
ராதிகா

பெருமைப்பட வேண்டிய தருணம்

உங்கள் உடல்மொழி, ஸ்டைல், வெகுளித்தனம், குரல் மாற்றம், சிரிப்பு மற்றும் வசன உச்சரிப்பு என அனைத்திலும் இதயத்தை வென்றிருக்கிறீர்கள். நடிப்பில் உங்களைத் தனித்துக் காட்டும் அந்தச் சிறு சிறு அசைவுகள் அற்புதம்.

என்னைப் பொறுத்தவரை, 'தாய் கிழவி' என்பது ஒரு பெண் மைய பொழுதுபோக்குத் திரைப்படம் மட்டுமல்ல; இது சமூகத்தையும் சினிமாவையும் ஒரு படி முன்னே எடுத்துச் சென்றிருக்கும் படைப்பு.

'தாய் கிழவி' படக்குழுவினர் அனைவரும் பெருமைப்பட வேண்டிய தருணம் இது" என்று நெகிழ்ச்சியாகப் பாராட்டி பதிவிட்டிருக்கிறார்.

ராஜூமுருகன் தயாரிப்பில் இயக்குநர் மணிரத்னம் பாராட்டிய குறும்படம் இது! - `லிட்டில் விங்ஸ்' சுவாரஸ்யம்

இயக்குநர்கள் மணிரத்னம், ராஜூமுருகன் ஆகியோரின் உதவியாளரான நவீன் இயக்கியிருக்கும் 'லிட்டில் விங்ஸ்' என்ற குறும்படத்தை ட்ரீம் வாரியர் சார்பில் எஸ்.ஆர்.பிரபு வெளியிடுகிறார். பல்வேறு சர்வதேச விழாக்களில் இந... மேலும் பார்க்க

"ஒவ்வொரு வீட்டிலும் ஐயா நல்லகண்ணு போன்ற ஒரு பிள்ளை பிறக்க வேண்டும்" - நடிகர் ஆரி உருக்கம்

தமிழ் திரையுலகில் எந்தவித சினிமா பின்புலமும் இல்லாமல், சாதித்த நடிகர்களில் ஆரியும் ஒருவர். இவர் 'நெடுஞ்சாலை, தரணி, மாயா, முப்பரிமாணம், நாகேஷ் திரையரங்கம், நெஞ்சுக்கு நீதி போன்ற பல படங்களில் நடித்துள்ள... மேலும் பார்க்க

நாக்க முக்கா: 'மாடு செத்தா மனுஷன் தின்னான்' எப்படி வந்திச்சு தெரியுமா? | வரித்துணையே 4

முன்னணி பாடலாசிரியர்கள் எழுதிய ஹிட் பாடல்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களிடமே அந்தப் பாடல்கள் உருவான விதம் குறித்தும், அந்த வரிகளின் உண்மைக் கதைகளையும் அவர்களின் வாய்மொழியாகவே கேட்டுப் பகிரும் தொடர் இந்த ... மேலும் பார்க்க