செய்திகள் :

செம்பன் - சிறுகதை

post image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்

அந்தரத்தில் தொங்கும் தேன்கூடு போல நகரத்தின் பெருவெளியில் மிகப்பிரம்மாண்டமாக நிலத்தில் கட்டப்பட்டிருக்கும் கான்ங் கிரட்டு கூடுக்குள் அடைபட்டு கிடக்கின்ற மனிதர்களுக்கு மத்தியில், சாலையின் ஓரத்தில் புளிய மரத்து வரிசையின் இடையில் (அதாவது முப்பத்தி ஒன்னா நம்பர் மரத்துக்கும் முப்பத்திரெண்டா நம்பர் மரத்திக்கும்) தென்ன ஓலையால் வேயப்பட்டிருந்த குடிசையில் மகன் செம்பனும், தாய் ஜோதியும்,

குடிசையின் தன்மை இழந்து தார்பாயால் மூடப்பட்டிருந்தது. காற்றின் தாக்குதலால் இன்னும் ஓரிரு மாதங்களுக்குள் தென்ன ஓலை சருகுகளாய் உதிர்ந்து, மனித எழும்பு கூடு போல மூங்கில்கள் மட்டும் காட்சியளிக்கும் என்பதில் மாற்று இல்லை. குடிசையின் கொள்ளபுரத்தில் சில மாதங்களுக்கு முன் செம்பன் நட்டு வைத்த வாழைக்கன்றில் மரக்கொத்தியொன்று ஆழமாக துளையிட்டுக் கொண்டிருந்தது. காற்றின் வேகம் அந்த மரக்கொத்தயின் சிறகுகளை பிய்த்து எரிவது போல இருந்தாலும் அது துளையிடுவதை விடுவதாக இல்லை.

"அம்மாக்களி பயலாட்டம் படுத்துக்கிடக்கறானே தவிர கேட்கிறதுக்கு பதில் சொல்றானா பாரு, என்னடா ஆச்சு ஏன்டா இப்படி படுத்துருக்க சொல்லு"

கால் வெடவெடுத்து சாணி தரையில் எதுவும் விரிக்காமல் படுத்து கிடந்தான் செம்பன்.

முள்ளு ஒடச்சு, அடுப்பில சோறு ஆக்கி, வடிச்ச சட்டிய மூடியால வேகமா தட்டுனா ஜோதி. ரைஸ்மில்லுல வேல முடிஞ்சு வந்து சாயிந்திரம் ஆக்குற சோறு தான்; நைட்டும் காலையிலயும். மதியத்துக்கு சோறு கேள்விகுறிதான்.லாரில நெல்லு லோடு அதிகமாக வந்துச்சுனா; இவன மாதிரியே வந்து படுத்துக்குவ. அப்புறம் நைட்டுக்கும் கிடையாது காலைலெயும் கிடையாது சோறு! முள்ளு வெறகோட என்னைக்கி வாராளோ அன்னக்கி வேல கம்மீனு அர்த்தம் 

அன்றைக்கு வகுப்பறைகள் முழுதும் சலனம்;வளைவு ஓடுகள் வேயப்பட்டிருந்த நீண்டதொரு கட்டிடத்திற்குள் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை இருக்கிறது. பள்ளியின் பின்புறத்தில் மயில் கொன்றையின் மரம் படர்ந்துவிரிந்து நிழல் தந்து கொண்டிருந்தது.பள்ளியை சுற்றி மதில் சுவர்கள் உள்பூச்சு பூசாமல் இருந்தன. வாசல் கதவு தயாராக திறந்து கிடந்தது அன்றைக்கு வானமும் கூட திறந்து தான் கிடந்தது. சித்திரை மாதம் முடிந்து இத்தனை வெயில் சிந்துவது எதற்கு என்று தெரியவில்லை?.வீட்டு பாடங்களை கரும்பலகையில் எழுதிக் கொண்டிருந்தார் பொன்னுச்சாமி வாத்தியார்

எந்த சிந்தனையும் இன்றி ஒரு பித்து பிடித்தவனை போல,எந்த நொடியிலும் வாகனத்தைப்போல வேகம் எடுத்துஓடி விடுபவனாக அமர்ந்திருந்தான்செம்பன்

 ரயில் தண்டவாளத்தின் ஒரு துண்டு அந்த மயில் கொன்றை மரத்தின் ஒரு கிளையில் தொங்கிக் கொண்டிருந்தது.பள்ளியின் ஆரம்பமும் முடிவும் அந்த ஓசையில் உள்ளது.இல்லை இல்லை அது மணிமுத்து அண்ணன் கையில் உள்ளது.இன்றைக்கும் அவர் வருகையை எதிர்பார்த்துக் கொண்டிருந்தான் செம்பன்

"எல்லோரும் வீட்டுப்பாடம் எழுதிட்டீங்களா?"

"எழுதிட்டோம் சார்"

"டேய் செம்பா,அங்க என்னத்த வேடிக்கை பார்த்துக்கிட்டு இருக்க?"

சார்; "கேட்ட யாரு முதல்ல போய் தொடுராங்களோ! அவர்களுக்கு மம்மி டாடி மிட்டாய் வாங்கி தரேன்னு சந்துரு சொன்னான் சார்;

அதான் சார் கேட்டைமுதல்ல போய் தொடரதுக்கு பாத்துக்கிட்டே உட்கார்ந்து இருக்கான் சார்"

வசந்தி சொல்லி முடித்துவிட்டு உட்காருவதற்குள் வகுப்பறை வெடித்து சிரித்தன.

பெல் அடித்து மறுகணமே எண்ணியது போல முதலாவதாக சென்று கேட்டை தொட்டு விட்டான். சந்துருவும் சொன்ன மாதிரியே மம்மி டாடி மிட்டாயை வாங்கி கொடுத்து டேய் கருவா பையா பரவால்ல தொட்டுட்ட!வியப்போடு கேட்டு தட்டிக் கொடுத்தான்.

சிறுதீனி சாப்பிடுவதில் விருப்பம் உள்ளவன் செம்பன் யாராவது தின்பண்டம் வாங்கித் தருகிறேன் இதை செய் அதை செய் என்று சொன்னால் உடனே செய்யக்கூடியவனாக இருந்தான்.

இவனை இப்படி சிறு தீனிக்கு அடிமையாக்கியது வேறு யாருமில்லை அவன் இரண்டாம் வகுப்பு படிக்கும் பொழுது கௌசல்யா என்னும் வகுப்பாசிரியர் தான்,

தகப்பனில்லாத பிள்ளைனு தினமும் ஏதாவது வாங்கி வந்து தருவாங்க, செம்பனும் மறுக்காமெ வாங்கி சாப்பிடுவான். கருப்பா இருந்தாலும் அழக இருப்பான் கௌசல்யா டீச்சருக்கு அவனை ரொம்ப பிடிக்கும் அதனாலேயே அவனை பக்கத்திலேயே உட்கார வைத்துக்கொண்டு பாடம் நடத்துவாங்க.

பணி நிறைவு விழாவிற்கு முன்பாக தனது வகுப்பு பிள்ளைகளுக்கு ஏதாவது வாங்கித் தர வேண்டும் என்று எண்ணிய டீச்சர் உங்களுக்கு என்ன வேண்டும் சொல்லுங்க நான் வாங்கி தரேன் என்று கேட்க எனக்கு ஒரு பை நிறைய தீனி வாங்கி கொடுங்க டீச்சர் என்றான் செம்பன் "டேய் பைத்தியக்காரா நான் அத கேக்கல வேற ஏதாவது வேணுமா?" "வேணுங்கிறவங்க சொல்லுங்க நான் வாங்கி தரேன்னு சொல்றேன்" "அதான் டீச்சர் என்ன வேணும்னு தெரியலையே"

ஒருமுறை எல்லா பிள்ளைகளையும் நோட்டமிட்ட ஆசிரியர் யார் யாருக்கு என்ன வேண்டும் என்று யூகித்துக் கொண்டார்.பிறகு எல்லா பொருள்களையும் வாங்கி வைத்து பணி நிறைவு விழாவில் எல்லோருக்கும் தனித்தனியாக கொடுத்து மகிழ்ந்தார்.

பள்ளிக்கு போவதும் வருவதும் அந்த கடலை மண்டி வழியாகத்தான் அன்றைக்கும் அவன் அந்த மம்மி டாடி மிட்டாயை சாப்பிட்டு கொண்டே நடந்து போய்க் கொண்டிருந்தான். மாட்டு வண்டியில் ஏற்றி வந்த கடலை மூட்டைகளை பிரித்து ஒரு பெரும் குவியலாக ஒரு மலைபோல ஒவ்வொரு மண்டிக்கடை முன்பாகவும் குவித்து வைத்திருப்பார்கள்.

சரஸ்வதி கடலை மண்டி கடையில் எல்லோரும் கணக்கு வழக்கு பார்த்துக் கொண்டிருந்தார்கள் கடலை குவியலை யாரும் கண்காணிக்கவில்லை மெதுவாக நடந்து இரு கைகளையும் சேர்த்து ஒரு குவியல் கடலையை அள்ளி அவனது காக்கி கால் சட்டையின் வலது பக்கம் சேமித்தான். மீண்டும் அதே போல ஒரு குவியலை அள்ளி இடது பக்கம் சேமித்தான் அவன் மனது முழு திருப்தியை அடையவில்லை போல, சட்டையின் கீழ் பட்டனை அவிழ்த்து அதை நன்கு இழுத்து ஒரு முடி போட்டுக் கொண்டான் (ரவுடியை போல) மீண்டும் ஒரு குவியல் அள்ளி தனது சட்டைக்குள் நிரப்பிக் கொண்டிருந்தான் அப்பொழுது கணக்கு எழுதிக் கொண்டிருந்த கணக்குப்பிள்ளை

"டேய் யாருடா அது... கடலையை அள்ளுரது

போடுற எல்லாத்தையும்" என்று விரட்டியதும் செம்பன் ஓட துவங்கினான் சரஸ்வதி மண்டி கடையில் இருந்து நான்கு கடை தள்ளி ஆஞ்சநேயர் மண்டி கடை இருந்தது அங்கே வேலை செய்கின்ற கூலியாள் அவனை இடைமறித்து நிப்பாட்ட பார்த்தான் அப்பொழுது அவன் தப்பிப்பதற்காக மாட்டு வண்டியின் அருகாமையில் ஒலிந்து ஓட முற்பட்ட பொழுது மாடு பின்னங்களில் அவனை எட்டி உதைத்தது. அதில் சுருண்டு விழுந்தான் செம்பன்.

"அய்யய்யோ தூக்குப்பா தூக்கு "

 என்று எல்லோரும் கத்திய பொழுது அந்த இடைமறித்த வேலையாள் தூக்கி "ஏண்டா இப்படி பண்றீங்க" என்று கண்டிப்பது போல கண்டித்து எல்லா கடலைகளையும் சேர்த்து மீண்டும் ஒரு குவியலை அள்ளி கையில் திணித்தான்.

வலது கால் தொடையில் மாடு மிதித்த தடத்தை தொட்டுப் பார்த்தான் சிவந்து கிடந்தது.அழுகை நிப்பாட்ட முடியவில்லை அத்தனை அழுகையும் அந்த மண்டி கடை வாசலில் சிந்தி கிடந்தது.

ஒரு கோபம் கொண்டவன் என்ன செய்வான் அவன் வெறுப்பை அங்கே காட்ட வேண்டும் அல்லவா காட்டத் துவங்கினான் வேலையாள் கொடுத்த குவியலை அந்த கடை வாசலின் முன்பாக தூக்கி எறிந்தான் பின் வலது கால்சட்டையில் வைத்த குவியலில் இருந்து கடலைகளை சிதறவிட்டு கொண்டே நடந்தான் அப்பொழுது நினைத்துக் கொண்டான் தனக்கான கடலைகளை கீழே போட்டுக் கொண்டு வருகிறேனென்று. இடது கால் சட்டையில் வைத்த குவியலில் கை வைத்தான் அதையும் எடுத்து கீழே சிதற விட்டுக் கொண்டே நடந்தான் அப்பொழுது அவன் சிந்தனையில் அம்மாவின் நினைப்பு ஓடிக்கொண்டிருந்தது ஒருவேளை அந்த குவியல் அம்மாவுக்கானது இப்பொழுது சட்டையினுள் குவியலை தொடங்கினான்

அந்த குவியல் பள்ளி கேட்டு வாசலில் கடை போட்டு இருக்கும் முத்தாள்கிளவிக்கானது. அந்த ஒரு குவியலை நன்கு வேகவைத்து நான்கு குவியலாக்கி அவள் பள்ளி மாணவர்களுக்கு விற்று விடுவாள்.இவன் கொடுக்கின்ற அந்த ஒரு குவியலுக்கு அந்த தரக்கடையில் எதை வேண்டுமானாலும் எடுத்து சாப்பிடலாம்.

எல்லா குவியலும் கரைந்த பிறகு மீண்டும் அவனது தொடையை பார்த்து விம்மி அழுது கண்ணீரை துடைத்துக் கொண்டான். எல்லாம் முடிந்ததும் திரும்பிப் பார்த்தான்.இறப்புக்கு சொல்லுகிற வாகனத்திலிருந்து உதிர்கின்ற அல்லது உதிர்த்து விடுகின்ற மலர்களைப் போல அவன் கண்ணுக்கு பட்டது. 

மண்டிக் கடைகளை தாண்டியதும் அரச மரத்தடியில் விநாயகர் ஒருவர் அமர்ந்திருந்தார் அவர் அருகாமையில் போய் அமர்ந்து காயத்துக்கு தனது உமிழ்நீரால் ஒத்தனம் கொடுத்துக் கொண்டிருந்தான்.அப்பொழுது அவர் தட்டில் திருநீரை விட குறைவாக சில்லறை காசுகள் கிடந்தன.

காசு எடுத்து தனது பாக்கெட்டில் போட்டுக் கொள்ளலாம் என்று நினைத்தவன் "அய்யோ சாமி கண்ண குத்துமே" என்று நினைத்தான். பிறகு இவரிடம் தான் எந்த ஆயுதமும் இல்லையே இவர் ஏன் கண்ணை குத்தப் போகிறார் என்று நினைத்துக் கொண்டானோ என்னவோ சில சில்லறைகளை அள்ளி தனது பாக்கெட்டில் வைத்துக் கொண்டான்.

இவற்றையெல்லாம் சுசுகியில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஜெகன்; செம்பன் அந்த இடத்தை விட்டு நகரும் வரை காத்திருந்தான். 

"ஏய் என்னடா, சாமி காசெல்லாம் திருடிட்ட

இரு, உங்க அம்மாடெயும் டீச்சர்டெயும் 

சொல்லி வைக்கிறேன்" என்று ஜெகன் 

அவனை மிரட்டினான். சிறிது நேரத்திற்கு முன்பு மது அருந்தியதில் போதை தலைக்கு ஏறியது சற்று கூடுதலாக அவனை திட்டவும் செய்தான் இனி இதுபோல செய்யாதே இதெல்லாம் தவறு என்று சொல்லிவிட்டு ஏறு வண்டியில் நான் வீட்டில் கொண்டு போய் விடுகிறேன் என்றான்.

"இல்லை மாமா நான் நடந்தே போகிறேன்" என்று மறுத்த செம்பனை மீண்டும் விரட்ட ஆரம்பித்தான் வேறு வழி இல்லாமல் அவன் வாகனத்தில் ஏறிக்கொண்டான் சற்று தொலைவு சென்றதும்,முன்பு ஒரு முறை படத்திற்கு போகலாம் என்று கூட்டிச்சென்ற ஜெகன் படம் போட்டதும் பாலியல் ரீதியாக தன்னை தொந்தரவு செய்தது நினைவுக்கு வந்தது.

"மாமா நிறுத்துங்க எங்க போறீங்க நான் இறங்கிக்கிறேன்"

வீட்டிற்கு செல்லும் பாதையை தவிர்த்து அவன் வேறு பக்கமாக போய்க் கொண்டிருந்தான் அவன் கண்கள் ஈரமாவதை காற்று துடைத்துக் கொண்டிருந்தது. 

அந்த பெருநகரத்தை தாண்டி அவன் போய்க்கொண்டிருந்தான் புதர்களும் சீம கருவேலை முள்ளுகளும் நிறைந்திருந்த ஒரு ஒத்தையடி பாதைக்குள் வாகனத்தை விட்டான். போதையின் உச்சத்திலிருந்தான் ஜெகன், செம்பன் கால்கள் இங்கு தொடங்கிய நடுக்கம் தான் வீடு வரை இருந்தது.

சீமக்கருவேல மரங்கள் நிறைந்த இடத்தில் ஒரு வேப்பமரம் எப்படி தனக்கான நீரை எடுத்து உயிர் வாழ முடியும் அப்படி வாழ முடியாத பட்டுப்போன மரத்தில் அணில் குஞ்சொன்று தனது வாலை ஆகாயம் தொடும்படி நீட்டி நிறுத்தி வைத்து. ஜெகன் அசைவுகளை பார்த்துக் கொண்டிருந்தது.

- மணவை கார்னிகன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

கோபத்தின் நாள் - சிறுகதை

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

சிங்கக்கிழவி செங்கம்மா - சிறுகதை

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

இலக்கிய வட்டத்தில் சிறகடிக்கும் 11-ம் வகுப்பு மாணவி; ஏழாவது புத்தக வெளியீட்டை எதிர்நோக்கும் சூடாமணி!

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த இளம் எழுத்தாளரான மு.சூடாமணி தன் குழந்தைப் பருவத்திலேயே புத்தகங்களை எழுதத் தொடங்கியவர். தற்போது ஆறு புத்தகங்கள் வரை எழுதியிருக்கும் இவருக்கு, தமிழக அரசின் சார்பில் 202... மேலும் பார்க்க

`மொழிபெயர்ப்பின் நிறம் ஆர்.சிவக்குமார்' - ஆகுதி பதிப்பகத்தின் ஒரு நாள் கருத்தரங்கு

எழுத்தாளர் அகரமுதல்வனின் ஆகுதி பதிப்பகம் வருடந்தோறும் படைப்பாளர்களையும், அவர்களுடைய படைப்புகளையும் கொண்டாடுவதற்கான நிகழ்வுகளை ஒருங்கிணைக்கும். அப்படி இந்தாண்டிற்கான ஒரு நாள் கருத்தரங்கு நிகழ்வில் மொழி... மேலும் பார்க்க

முட்டாள் என்ற சொல்லுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்! - முரண்பாடும் விளக்கமும்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

கோபுரங்கள் சாய்வதில்லை! - ஒரு தாயின் பாடம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் /விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தி... மேலும் பார்க்க