செய்திகள் :

இலக்கிய வட்டத்தில் சிறகடிக்கும் 11-ம் வகுப்பு மாணவி; ஏழாவது புத்தக வெளியீட்டை எதிர்நோக்கும் சூடாமணி!

post image

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த இளம் எழுத்தாளரான மு.சூடாமணி தன் குழந்தைப் பருவத்திலேயே புத்தகங்களை எழுதத் தொடங்கியவர். தற்போது ஆறு புத்தகங்கள் வரை எழுதியிருக்கும் இவருக்கு, தமிழக அரசின் சார்பில் 2025 ஆம் ஆண்டிற்கான சிறந்த பெண் குழந்தை விருது வழங்கப்பட்டிருக்கிறது. அவரை பொருநை புத்தகத் திருவிழாவில் சந்தித்தோம்.

நம்மிடம் பேசியவர், "எனக்கு கவிதைகள் எழுதவும், ஓவியம் வரையவும் ரொம்ப பிடிக்கும். இதுவரை ஆறு புத்தகங்கள் எழுதியுள்ளேன். என்னுடைய ஏழாவது புத்தகம் தற்போது அச்சில் உள்ளது. கம்பர், வள்ளுவர் பற்றி பேசுவது எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. என்னுடைய எழுத்து இந்தச் சமூகத்தை மாற்ற வேண்டும் என்பதே என்னுடைய எண்ணம். அதற்கு நான் அதிகாரமிக்க பதவிக்கு முதலில் செல்ல வேண்டும். அப்போது நம்முடைய குரல் மக்கள்வரை சென்று ஒலிக்கும். சமூக முன்னேற்றத்துக்காக வித்திட்ட தமிழ் பெண்கள் பற்றி எழுதியதாலும், சமூகம் மாற்றத்திற்காக தொடர்ந்து எழுதுவதாலும் தமிழக அரசு சிறந்த பெண் குழந்தை விருதை எனக்கு வழங்கியிருக்கிறது. சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் அவர்களின் கையால் சிறந்த பெண் குழந்தை விருது பெற்றது மிகவும் மகிழ்ச்சிக்குரிய தருணம். இந்த விருதை தந்த தமிழக அரசுக்கும், என்னை எப்போதும் ஊக்குவிக்கும் பெற்றோருக்கும் ஆசிரியர்களுக்கும், நெல்லை, தூத்துக்குடி தென்காசி அன்பர்களுக்கும், நண்பர்களுக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

எழுத்துப் பணி பற்றி?

என்னுடைய முதல் நூல் 'அம்மாவைத் தேடி' என்கின்ற 12 கதைகள் சேர்ந்த சிறுகதை தொகுப்பு. அப்புத்தகத்தை 10 வயதில் எழுதத் தொடங்கி என்னுடைய பதினோராவது வயதில் எழுதி முடித்தேன். என்னுடைய 12 வது வயதில் 'ஏன்? எப்போது? எப்படி?' என்ற நூல் 14 சிறுகதைகள் சேர்ந்த சிறுகதை தொகுப்பு. இந்நூலில் அறம், இயற்கை போன்ற கருத்துக்கள் கூறப்பட்டிருக்கும். என்னுடைய 13 வது வயதில் மிருகதேசம் என்கின்ற குறுநாவலை எழுதினேன்.

ஒருவேளை மனிதர்கள் மிருகங்கள் வாழ்கின்ற உலகத்திற்குள் சென்றால் எப்படி இருக்கும் என்ற கற்பனையில் எழுதிய நூல்தான் அது. 14வது வயதில் 'எம் மண்ணின் நட்சத்திரங்கள்' என்கிற நூல் என்னுடைய வயதில் உள்ள இளையோருக்கு தெரியாத 10 ஆளுமைகளைப் பற்றி கூறிய நூல். என்னுடைய ஐந்தாவது புத்தகம் 15வது வயதில் எழுதினேன். 40 கவிதைகள் சேர்ந்த கவிதை தொகுப்பு அது.

பிறகு என்னுடைய இலக்கிய ஆசான் நாறும்பூநாதன் மாமா இறப்பையொட்டி, அவருடைய ஆசைகளை நிறைவேற்றுவது போல் 'சமூகத்திற்காக வித்திட்ட தமிழ்ப் பெண்கள்' என்ற நூலானது இளைய தலைமுறைக்குத் தெரியாத 12 பெண்களைப் பற்றிய கட்டுரைத் தொகுப்பாக அதனை எழுதியுள்ளேன். என்னுடைய ஏழாவது புத்தகம் சுதந்திரப் போராட்ட வீரர்களை பற்றி எழுதியுள்ளேன்.

பள்ளிக்குச் சென்று வந்த பிறகு நான் புத்தகம் வாசிப்பது என்பது என் வாழ்வில் இயல்பான ஒன்றாக மாறிவிட்டது. வாசிப்பு எனக்கு மன நிம்மதியைத் தருகிறது. எனவே எப்போதும் வாசித்துக் கொண்டே இருப்பேன். தினமும் வாசித்துவிடுவேன்" என்றார்.

சூடாமணியின் தந்தையிடம் பேசிய போது, "எங்கள் வீட்டில் எப்போதும் அனைவரும் புத்தகம் வாசிப்போம். அதைக் கண்டு ஆர்வத்தில் சூடாமணியும் மூன்றாம் வகுப்பிலேயே புத்தகம் வாசிக்கத் தொடங்கி விட்டாள். இதற்கு பள்ளிக்கூடத்தின் பங்கும், சமூகத்தினுடைய பங்கும் மிக முக்கியமானது. சூடாமணி விருது பெற்றபோது எங்களை விட இந்த சமூகம் மிகச் சிறப்பாக கொண்டாடியது. நெல்லை எழுத்தாளர்கள் அனைவரும் இதனை அவர்கள் வெற்றியாகப் பார்க்கிறார்கள்.

ஒரு பெற்றோருக்கு இதைவிட வேறென்ன வேண்டும். தினமும் ஒரு பக்கமாவது வாசிக்காமல் உறங்க மாட்டாள். பிடித்த புத்தகமெனில் இரண்டு, மூன்று மணிநேரமாவது வாசிப்பாள். திடீரென்று பேசிக் கொண்டிருக்கையில் புத்தகங்கள் பற்றியும் பேசுவாள். அவளுடைய எழுத்தும் செயலும் இந்த சமூகத்திற்கு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். அவளுடைய இலக்கிய ஆசான் நாறும்பூநாதன் ஐயா சொன்னதைப் போல் பத்து பேராவது அவளுடைய எழுத்தால் மனம் மாற வேண்டும். இளைஞர்கள் ஒன்றாக இணைந்து பணியாற்றுகின்ற போது இந்த சமூகம் நிச்சயம் மாறும் என்ற நம்பிக்கை இருக்கிறது" என்றார்.

`மொழிபெயர்ப்பின் நிறம் ஆர்.சிவக்குமார்' - ஆகுதி பதிப்பகத்தின் ஒரு நாள் கருத்தரங்கு

எழுத்தாளர் அகரமுதல்வனின் ஆகுதி பதிப்பகம் வருடந்தோறும் படைப்பாளர்களையும், அவர்களுடைய படைப்புகளையும் கொண்டாடுவதற்கான நிகழ்வுகளை ஒருங்கிணைக்கும். அப்படி இந்தாண்டிற்கான ஒரு நாள் கருத்தரங்கு நிகழ்வில் மொழி... மேலும் பார்க்க

முட்டாள் என்ற சொல்லுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்! - முரண்பாடும் விளக்கமும்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

கோபுரங்கள் சாய்வதில்லை! - ஒரு தாயின் பாடம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் /விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தி... மேலும் பார்க்க

அறிவுத் தூதுவர்களுக்கு ஒரு சல்யூட்! : உன்னதமான மனிதர்களை கெளரவிக்கும் புதுக்கோட்டை வாசகர் பேரவை

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

திருநெல்வேலி: கல்லூரி மாணவரால் கண்டெடுக்கப்பட்ட பழைமைவாய்ந்த புதைப்பொருள்கள்!

திருநெல்வேலியில் உள்ள மானூரில் மன்னர் காலக் கல்வெட்டுகள் பலவும் கிடைக்கின்றன. இதனால் ஆய்வாளர்கள் அங்கு அடிக்கடி சென்று கள ஆய்வு செய்து வருகின்றனர். சமீபத்தில் மேற்கு செழியநல்லூரில் 450 ஆண்டுகள் பழைமைய... மேலும் பார்க்க

டெல்லி: திருச்சி இளைஞரின் கவிதை புத்தகம் வெளியீடு - மத்திய அமைச்சர்கள், நடிகை ஹூமா குரேஷி பங்கேற்பு!

டெல்லி பாரத் மண்டபத்தில் நடைபெற்ற சர்வதேச விருதுகள் வழங்கும் விழாவில், தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர் எழுதிய சுய முன்னேற்றம் குறித்த கவிதை புத்தகம் கோலாகலமாக வெளியிடப்பட்டது.புத்தகத்தின் பெயர்: என்கிரேட்ட... மேலும் பார்க்க