செய்திகள் :

`தாய் கிழவி’க்கு எம்.ஆர்.ராதா இன்ஸ்பிரேஷன்! - ராதிகா எமோஷனல்

post image

`தாய் கிழவி’ படத்துக்கான விகடன் பேட்டியில், நடிப்பு அனுபவத்திற்கான இன்ஸ்பிரேஷன் குறித்து ராதிகா... “இந்தக் கதையில் வரும் பவுனுத்தாய்க்கு பாரதிராஜா சார் அம்மாவைத்தான் மனதில் வைத்திருந்தேன். அவர்களை ரொம்ப வருஷங்களா தெரியும். அதில் கொஞ்சம் எங்க அப்பா எம்.ஆர்.ராதாவை மிக்ஸ் பண்ணினேன். தெனாவட்டாகப் பேசுவது, அலட்சியமாகக் கிண்டல் அடிப்பது என்று அவரையும் கொண்டுவந்து உள்ளே வச்சிருக்கேன்.” என்று பேசியிருந்தார்.

mr radha & radhika
mr radha & radhika

ராதிகாவும் தந்தை எம்.ஆர்.ராதா போலத்தான். மனத்தில் பட்டதைத் துணிந்து சொல்லுவார். எதற்கும் பயப்படமாட்டார். தமிழ்த் திரையுலகில் எம்.ஆர்.ராதா என்ற பெயருக்குப் பின்னால் ஒரு மாபெரும் ஆளுமையும், அஞ்சாத துணிச்சலும் ஒளிந்திருக்கிறது. அதே நெருப்பைத் தன்னுள் ஏந்தி, இன்று வரை ஒரு `சிங்கப் பெண்ணாக' வலம் வருபவர் ராதிகா.

மேடை நாடகமாக இருந்தாலும் சரி, வாழ்க்கையாக இருந்தாலும் சரி, எதற்கும் அஞ்சாதவர் எம்.ஆர்.ராதா. சமூக அவலங்களை முகத்திற்கு நேராகச் சுட்டிக்காட்டிய `கலகக்காரர்'. ராதிகாவும் அப்படியே. அரசியல் மேடைகளாகட்டும் அல்லது சினிமா சங்க விவகாரங்களாகட்டும், எதற்கும் பயப்படாமல் தன் கருத்தைப் பதிவு செய்துள்ளார்.

எம்.ஆர்.ராதா வெறும் நடிகர் மட்டுமல்ல, அவர் ஒரு சிந்தனையாளர். பகுத்தறிவுப் பாதையில் மிகத் தெளிவான பார்வை கொண்டவர். அதேபோல், ராதிகா ஒரு சிறந்த தொழில்முனைவோர் (Entrepreneur). சினிமா வாய்ப்புகள் குறைந்தபோது முடங்கிப் போய்விடாமல், சின்னத்திரையில் ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர். சந்தை எதை எதிர்பார்க்கிறது, காலத்திற்கு ஏற்ப தன்னை எப்படி மாற்றிக்கொள்ள வேண்டும் என்ற அந்த சமயோஜிதம் இருவருக்கும் பொதுவானது.

Radhika
Radhika - A Reporter's Diary

நடிப்பைப் பொறுத்தவரை இருவரும் இயல்பான கலைஞர்கள். எம்.ஆர்.ராதா வில்லத்தனத்திலும் நையாண்டி, தனித்துவமான குரல் வளம், உடல் மொழி மூலம் ரசிகர்களைத் தன்வசப்படுத்துவார். ராதிகா, எமோஷனல் அல்லது அதட்டலான காட்சிகளாகட்டும், அதில் எதார்த்தம் இருக்கும். `கிழக்கே போகும் ரயில்’ படத்தில் தொடங்கிய அந்தத் துடிப்பு, இன்று வரை அவரிடம் குறையவே இல்லை.

எம்.ஆர்.ராதா ஒரு சகாப்தம் என்றால், அந்தச் சகாப்தத்தின் நீட்சிதான் ராதிகா!

'The Wedding of VIROSH' - டும் டும் டும் அறிவிப்பை வெளியிட்ட விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா!

நடிகர்கள் விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா காதல் பற்றி அவர்கள் ஓபனாக சொல்லவில்லை என்றாலும், அது ஊரறிந்த ரகசியம். கடந்த அக்டோபர் மாதம் சத்தமே இல்லாமல், ஐதராபாத்தில் விஜய் தேவரகொண்டாவின் வீட்டில் இருவ... மேலும் பார்க்க

1980 டு 2026: ரஜினியின் அதே குணம், கமலுடன் கைகோக்கும் அதே பலம்!

``கமலைப் போலவே ரஜினியிடமும் டெலிபோனிலேயே பேசி, பத்திரிகைக்கு விஷயம் வாங்கி விடலாம். சில நடிகர்களைப்போல `நேரே வாங்க, பேசலாம்’ என்று நம்மை அலைக்கழிக்க மாட்டார்.இவரிடம் நான் கவனித்த பாராட்ட வேண்டிய ஒரு க... மேலும் பார்க்க

நிகழ மறுத்த அற்புதம்! : மிகவும் வருத்தத்தை ஏற்படுத்திய `காந்தா’ திரைப்படம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

தயாரிப்பாளர் சங்க விவகாரம்: ராஜேஸ்வரியின் புகார்! - போலீஸ் நடவடிக்கைக்கு பரிந்துரைத்த மகளிர் ஆணையம்

’தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து தன்னை நீக்கியதுடன், அங்கு பல பேர் முன்னிலையில் மன்னிப்பு கேட்க வைத்தார்கள்' என மாநில மகளிர் ஆணையத்தில் புகார் அளித்திருந்த தயாரிப்பாளர் ராஜேஸ்வரி மனு ... மேலும் பார்க்க

`அன்று திரையில் பார்த்த இடம் இன்று.!' - சினிமா ஸ்பாட்களுக்கு டைம் ட்ராவல் செய்யும் ஜெயகார்த்திக்!

சோசியல் மீடியாவில் `கோவூர் மீம்ஸ்’ ஜெயகார்த்திக் என்பவர் அன்றும் இன்றும் எனும் தலைப்பில் சினிமாவில் ஒரு படத்தின் காட்சியில் வந்த முக்கிய இடம் இன்று எப்படி இருக்கிறது என நாஸ்டாலஜியா பதிவிட்டு வருகிறார்... மேலும் பார்க்க