RCB vs LSG: "க்ருணால் பாண்டியா பந்தை எப்படி வீசுவார் என்று எனக்கே தெரியாது" - ரஜ...
RCB VS LSG: "நாங்க பேட்டிங்ல சொதப்பிட்டோம், ஆனா நாங்க மீண்டு வருவோம்" - நிக்கோலஸ் பூரன்
ஐபிஎல் 2026 தொடரின் நேற்றைய (ஏப்ரல் 15) ஆட்டத்தில் ஆர்சிபி அணிக்கு எதிராக லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் தோல்வியைத் தழுவியது.
இந்தப் போட்டியில் லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் பேட்டிங் செய்தபோது, பந்து கையில் பலமாகத் தாக்கியதில் காயமடைந்து, பாதியிலேயே வெளியேறினார்.
இது அந்த அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்தது. அவருக்குப் பதிலாக போட்டிக்குப் பின் பேசிய தற்காலிக கேப்டன் நிக்கோலஸ் பூரன், அணியின் சவால்கள் மற்றும் தனது சொந்த ஃபார்ம் குறித்துப் பேசினார்.

தோல்விக்குப் பிறகு பேசிய நிக்கோலஸ் பூரன், "நிச்சயமாக இது எங்களுக்கு ஒரு கடினமான சீசன். குறிப்பாக பேட்டிங்கில் நாங்கள் எதிர்பார்த்ததைவிட மிகவும் பின்தங்கியிருக்கிறோம்.
இந்த ஆடுகளத்தில் 175 ரன்கள் எடுத்திருந்தால் அது ஒரு சவாலான இலக்காக இருந்திருக்கும். ஆனால், இந்த சீசன் முழுவதுமே நாங்கள் பேட்டிங்கில் தடுமாறி வருகிறோம்.
டி20 கிரிக்கெட் என்பது ஒரு கடினமான விளையாட்டு. இதில் தொடர்ந்து சீராக செயல்படுவது எளிதான காரியமல்ல. ஆனாலும், எங்கள் வீரர்கள் கடினமாக உழைத்து வருகிறார்கள்.
நாங்கள் இன்னும் தயாராக வேண்டும். பொறுமையாக இருந்து, சரியான வாய்ப்பு வரும்போது அதைப் பிடித்து அணியை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

என்னுடைய பேட்டிங்கைப் பொறுத்தவரை, நான் பந்துகளை நன்றாகவே எதிர்கொள்கிறேன். துரதிர்ஷ்டவசமாக இந்தத் தொடரில் முடிவுகள் எனக்குச் சாதகமாக அமையவில்லை.
ஆனால் இது ஒன்றும் எனக்குப் புதிதல்ல, நான் ஏற்கெனவே இப்படிப்பட்ட சூழல்களைச் சந்தித்திருக்கிறேன்; இதிலிருந்து எப்படி மீண்டு வர வேண்டும் என்று எனக்குத் தெரியும். நிச்சயமாக நான் வலுவாகத் திரும்புவேன்," என்று மிகுந்த நம்பிக்கையுடன் பேசினார்.




















