செய்திகள் :

CSK vs KKR: சென்னை மற்றும் கொல்கத்தா வீரர்கள் கையில் கருப்புப் பட்டை அணிந்து விளையாடியது ஏன்?

post image

ஐபிஎல் 2026, நேற்று (ஏப்ரல்.14) நடந்த சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியது.

மைதானத்தில் பவுண்டரிகளும் சிக்ஸர்களும் பறந்தாலும், ரசிகர்கள் அனைவரின் கவனமும் வீரர்களின் கையில் கட்டப்பட்டிருந்த அந்த 'கருப்புப் பட்டை' மீதுதான் இருந்தது.

இதற்குப் பின்னால் இந்திய கிரிக்கெட்டின் ஒரு சகாப்தமே அடங்கியிருக்கிறது.

CSK vs KKR match

இந்திய கிரிக்கெட் வரலாற்றின் மிக முக்கியமான வீரர்களில் ஒருவரான சி.டி. கோபிநாத் அவர்களின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

சி.டி. கோபிநாத் மார்ச் 1, 1930 அன்று சென்னையில் பிறந்தார். 1952-ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்தியா தனது முதல் டெஸ்ட் வெற்றியைப் பதிவு செய்தபோது, அந்தப் புகழ்பெற்ற அணியில் இடம் பெற்றிருந்த வீரர்களில் உயிருடன் இருந்த கடைசி நபர் இவர்தான்.

அந்த வரலாற்று வெற்றி சென்னை மண்ணில் நிகழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு கிரிக்கெட்டில் தமிழக அணியின் வளர்ச்சிக்கு இவர் ஆற்றிய பங்கு மிக முக்கியமானது. தமிழக அணியின் கேப்டனாகப் பணியாற்றிய இவர், தனது முதல்தர கிரிக்கெட் வாழ்க்கையில் 60 போட்டிகளில் விளையாடி 4,259 ரன்களைக் குவித்துள்ளார்.

குறிப்பாக, 1954-55 சீசனில் மெட்ராஸ் அணி தனது முதல் ரஞ்சி கோப்பையை வென்றபோது, இறுதிப் போட்டியில் சதம் விளாசி அந்த வரலாற்று வெற்றிக்கு முக்கியக் காரணமாகத் திகழ்ந்தார்.

CSK vs kkr match

இவர், ஒரு சிறந்த பேட்ஸ்மேனாக மட்டுமல்லாமல், இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழுத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். கிரிக்கெட் நிர்வாகத்திலும் வீரர்களைத் தேர்வு செய்வதிலும் இவர் ஆற்றிய பணி இந்திய கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தது.

அவர் கடந்த ஏப்ரல் 9, 2026 அன்று தனது 96-வது வயதில் காலமானார். இந்திய கிரிக்கெட்டின் ஆரம்பகால வெற்றிகளுக்குச் சாட்சியாக இருந்த ஒரு ஜாம்பவானை கௌரவிக்கும் வகையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் வீரர்கள் கருப்புப் பட்டை அணிந்து விளையாடினர்.

இதன் மூலம், கிரிக்கெட் உலகிற்கு அவர் ஆற்றிய ஈடுஇணையற்ற சேவைகளுக்கு பிசிசிஐ மற்றும் ஐபிஎல் நிர்வாகம் தங்களின் மனமார்ந்த அஞ்சலியைத் தெரிவித்துக் கொண்டன.

IPL: கேன்வாஸ் ஷுவில் பயிற்சி; சைக்கிளில் பயணம்; மும்பை அணியில் அசத்தும் அஸ்வனி குமார் - யார் இவர்?

'எப்போதெல்லாம் விளையாட வாய்ப்பு கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்று நினைப்பேன்' என உத்வேகமாக பேசிய மும்பை அணியின் இளம் வீரரான அஸ்வனி குமார் குஜராத் அணிக்கு எதிரான நேற்றைய (ஏப்... மேலும் பார்க்க

GT vs MI: "ஹர்திக் பாயுடன் இணைந்துதான் திட்டமிட்டேன்" - மும்பையின் கம்பேக் வெற்றி குறித்து அஸ்வனி

ஐபிஎல் தொடரின் நேற்றைய (ஏப்ரல்20) ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், மும்பை அணியும் மோதின.இதில் 99 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணியை வீழ்த்தி மும்பை அணி வெற்றி பெற்றிருக்கிறது. இதன் மூலம் புள்ளி... மேலும் பார்க்க

GT vs MI: "மைதானத்தில் நான் கொடுத்த எனர்ஜி எனக்கே தலைசுற்றலை ஏற்படுத்தியது, ஆனால்.!"- ஹர்திக்

ஐபிஎல் தொடரில் நேற்று (ஏப்ரல்20)நடைபெற்ற போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 99 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருந்து 7வது இடத்திற்கு மு... மேலும் பார்க்க

GT vs MI: 'OG is Back டி' - கம்பேக் கொடுத்த மும்பை இந்தியன்ஸ்; வீழ்ந்த குஜராத் டைட்டன்ஸ்!

"மூழ்காத ஷிப்பே மும்பை ஷிப்பா" எனப் பாட வைக்குமளவு தனது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது மும்பை அணி.ரபடாவின் பீரங்கித் தாக்குதலில் தொடங்கி, திலக் வர்மாவினை கதாநாயகனாக்கிய குஜராத்தின் திக்திக்... மேலும் பார்க்க

CSK: சென்னை அணிக்குப் பின்னடைவு? - ஆயுஷ் மாத்ரேவுக்கு பதில் யாரை களமிறக்கப் போகிறது சிஎஸ்கே?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த முறை ரசிகர்கள் எதிர்பார்த்த ஆட்டத்தை வெளிபடுத்தவில்லை. சுமாரான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகிறது. பேட்டிங், பவுலிங் என அனைத்திலும் சொதப்பி வருகிறது. இதுவரை ஆறு போட்டிகளி... மேலும் பார்க்க

Dhoni: தோனி எப்போது களமிறங்குவார்? - சிஎஸ்கே பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹஸ்ஸி விளக்கம்

காயத்தில் இருந்து குணமடைந்து பயிற்சியை தொடங்கியுள்ள தோனி எப்போது கம்பேக் கொடுப்பார்? என்று சிஎஸ்கே ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் சிஎஸ்கே அணியின் பேட்டிங் பய... மேலும் பார்க்க