செய்திகள் :

CSK vs KKR: "அங்குதான் நாங்கள் பின்னடைவைச் சந்தித்தோம்" - தோல்வி குறித்து கொல்கத்தா கேப்டன் ரஹானே

post image

ஐபிஎல் தொடரின் நேற்றைய (ஏப்ரல்.14) ஆட்டத்தில் சென்னை அணியும் கொல்கத்தா அணியும் மோதின.

இதில் கொல்கத்தாவை 32 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தனது இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது சென்னை அணி.

போட்டிக்குப் பிறகு தோல்வி குறித்து பேசிய கேப்டன் ரஹானே, "பேட்டிங்கில் எங்களுக்குச் சரியான வேகம் கிடைக்கவில்லை.

பந்துவீச்சைப் பொறுத்தவரை நாங்கள் சிறப்பாகத்தான் செயல்பட்டோம்.

csk vs kkr match
csk vs kkr match

சிஎஸ்கே அணி பவர்பிளே ஓவர்களில் 70 ரன்களுக்கு மேல் குவித்த போதிலும், அவர்களை 192 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியது எங்கள் பந்துவீச்சாளர்களின் சிறந்த உழைப்பு.

ஆனால் பேட்டிங்கில் பவர்பிளே ஓவர்களில் நாங்கள் வெறும் 36 அல்லது 37 ரன்கள் மட்டுமே எடுத்தோம். அங்குதான் நாங்கள் பின்னடைவைச் சந்தித்தோம்.

இந்தப் போட்டியில் அதுதான் மிகவும் முக்கியமானது. மிடில் ஓவர்களில் சுழற்பந்து வீச்சாளர்களை எதிர்கொண்டு ரன் குவிப்பது சவாலாக இருந்தது.

ஒரு பேட்டர் ஆட்டத்தின் இறுதிவரை நின்று விளையாடி இருந்தால் வெற்றி வாய்ப்பு இருந்திருக்கும்.

தொடர்ந்து போட்டிகளில் தோற்பது கடினமாக இருக்கிறது. ஆனால் ஒரு அணியாக நாங்கள் பாசிடிவ்வாக இருப்பது அவசியம்.

கொல்கத்தா அணியின் கேப்டன் ரஹானே
கொல்கத்தா அணியின் கேப்டன் ரஹானே

இனி வரும் போட்டிகளில் அணியின் காம்பினேஷன் குறித்து ஆலோசித்து மாற்றங்களைச் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

முடிவுகள் நமக்கு சாதகமாக வராதபோது மாற்றங்கள் குறித்து சிந்திப்பதைத் தவிர வேறு வழியில்லை. தோல்வியில் இருந்து மீண்டு வர எங்களை நாங்களே நம்ப வேண்டும்" என்று பேசியிருக்கிறார்.

CSK vs KKR: "முதலில் 210, 220 ரன்கள் எடுக்க நினைத்தோம்; ஆனால்" - வெற்றி குறித்து கேப்டன் ருதுராஜ்

ஐபிஎல் தொடரின் நேற்றைய (ஏப்ரல்.14) ஆட்டத்தில் சென்னை அணியும் கொல்கத்தா அணியும் மோதின.இதில் சென்னை அணி, கொல்கத்தாவை 32 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தனது இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது. ம... மேலும் பார்க்க

`முடிவெடுக்கும் பிசிசிஐ' - சச்சின் சாதனையைத் தகர்க்க வரும் வைபவ் சூர்யவன்ஷி!

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் அவ்வப்போது சில அதிசயங்கள் நடக்கும். 1989-ல் 16 வயதில் சச்சின் டெண்டுல்கர் களமிறங்கியபோது ஒட்டுமொத்த உலகமே வியந்தது. இப்போது, சரியாக 37 ஆண்டுகளுக்குப் பிறகு, அதே போன்றதொரு ... மேலும் பார்க்க

SRH Vs RR: `அதிரடி சரவெடி...' 4 விக்கெட்டுகள் வீழ்த்தி கவனம் ஈர்த்த இளம் வீரர் சகிப் ஹுசைனின் கதை!

ஐபிஎல் 2026 தொடரின் நேற்றைய (ஏப்ரல்.13) ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. இதில் 57 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற்றது... மேலும் பார்க்க

Tim David: ஆர்சிபி வீரர் டிம் டேவிட்டுக்கு அபராதம் விதித்த ஐபிஎல் நிர்வாகம்; காரணம் என்ன?

ஆர்சிபி வீரர் டிம் டேவிட்டிற்கு ஐபிஎல் நிர்வாகம் அபராதம் விதித்திருக்கிறது.ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் (ஏப்ரல்.12) மும்பை வான்கடே மைதானத்தில் பெங்களூரு அணியும், மும்பை அணியும் மோதின. இதில் 18 ரன்க... மேலும் பார்க்க

SRH Vs RR: "இந்தத் தோல்வியைப் பற்றி ஃபீல் பண்ண எங்களுக்கு நேரம் இல்லை!" - கேப்டன் ரியான் பராக்

ஐபிஎல் 2026 தொடரின் நேற்றைய (ஏப்ரல்.13) ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. இதில் 57 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற்றது... மேலும் பார்க்க

SRH Vs RR: "இந்த வெற்றிக்கு எங்களின் பந்துவீச்சாளர்கள் தான் காரணம், ஏனென்றால்.!"- இஷான் கிஷன்

ஐபிஎல் 2026 தொடரின் நேற்றைய (ஏப்ரல்.13) ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 57 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் போட்டிக்கு பிறகு அணியின் வெற்றி... மேலும் பார்க்க