பணி மாறுதலுக்கு பணம் வாங்கும் முறை ஒழிக்கப்படும்; திருப்பூரில் விஜய் அறிவித்த வா...
SRH Vs RR: "இந்தத் தோல்வியைப் பற்றி ஃபீல் பண்ண எங்களுக்கு நேரம் இல்லை!" - கேப்டன் ரியான் பராக்
ஐபிஎல் 2026 தொடரின் நேற்றைய (ஏப்ரல்.13) ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின.
இதில் 57 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் ஹைதராபாத் அணியின் இளம் அறிமுக பந்துவீச்சாளர்களான பிரஃபுல் ஹிங்கேவும், சகிப் ஹுசைனும் தலா நான்கு விக்கெட்டுகளைக் கைப்பற்றி தங்கள் திறமையை நிரூபித்து, அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றி இருந்தனர்.

இந்நிலையில் தோல்விக்குப் பிறகு பேசிய அணியின் கேப்டன் ரியான் பராக், " உண்மையைச் சொல்லப்போனால், இந்தத் தோல்வியைப் பற்றி ஃபீல் பண்ணிக்கொண்டிருப்பதற்கு எங்களுக்கு அதிக நேரமில்லை.
நாங்கள் (நேற்றைய ஆட்டத்தில்) அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தோம். எதிரணியினர் பந்துவீசிய விதம் பாராட்டுக்குரியது. எங்களுடைய சில தவறான கணக்கீடுகளே தோல்விக்குக் காரணம், ஆனால் இதை ஒரு சிறு பின்னடைவாக மட்டுமே கருதுகிறோம். இதைப் பற்றி அதிகமாக யோசிக்க மாட்டோம்.
பிட்ச் நன்றாகத் தான் இருந்தது. நாங்கள் இன்னும் சிறப்பாக பேட்டிங் செய்திருக்கலாம்.
சில விஷயங்களைச் சற்று மாற்றியிருக்கலாம். ஜடேஜா பந்துவீசாதது அந்த நொடியில் எடுத்த முடிவு. இஷான் கிஷன் நன்றாக பேட்டிங் செய்து கொண்டிருந்ததால், நான் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை.
இது ஒரு சிறு தடுமாற்றம் தான். நாங்கள் அடுத்த போட்டியில் சிறப்பாகச் செயல்படுவோம்" என்று பேசியிருக்கிறார்.

தொடர்ந்து ஹைதராபாத் அணியின் இளம் அறிமுக பந்துவீச்சாளர்கள் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், "உள்நாட்டுப் போட்டிகளில் நான் அவர்களை அவ்வளவாகப் பார்த்ததில்லை. ஆனால் பீகார் மற்றும் அசாம் அணிகளுக்கு இடையிலான போட்டியில் சகிப்புடன் (Sakib) ஒருமுறை விளையாடியிருக்கிறேன்.
பிரஃபுல் ஹிங்கேவும், சகிப் ஹுசைனும் இருவரும் அற்புதமாக பந்துவீசினார்கள். சொந்த ஊர் ரசிகர்கள் அவர்களுக்கு ஆதரவாகக் குரல் எழுப்பியபோது அவர்கள் மீது இருந்த அழுத்தத்தை என்னால் உணர முடிந்தது. முதல் நான்கு, ஐந்து ஓவர்களை அவர்கள் வீசிய விதம் மிகவும் சிறப்பாக இருந்தது" என்றிருக்கிறார்.


















