செய்திகள் :

சிங்கக்கிழவி செங்கம்மா - சிறுகதை

post image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்

ஊரே கூடி நின்று வேடிக்கை பார்த்தது. அரை டிரவுசர் குழந்தைகள் முதல் தடியூன்றிய  வயதானவர்கள் வரை அனைவரும் அங்கே ஆஜர்.எட்டுமணி ட்ரிப்  டவுன் பஸ் ஊருக்குள் வந்து ரவுண்டானாவில் திரும்பி நின்றது. அதிலிருந்து இறங்கிய டிரைவர் நாகராஜுவும் கண்டக்டர் பாபுவும் பக்கத்தில் இருந்த அரசு அலுவலகம் சென்று பாத்ரூம் போய்விட்டு வந்து முன்னாடி இருந்த டீக்கடை பெஞ்ச்சில் தம்மடிக்க  உட்கார்ந்தனர்.

என்ன பாபு  டீக்கடையில் ஒருத்தரையங் காணோமே என்ற நாகராஜுவிடம் , ஆமாம் ராஜு பஸ் ஸ்டாண்ட் திண்ணையில் கூட யாருமில்லை. தினமும் பஸ் திரும்புமுன்னாலேயே முண்டியடிச்சி ஏறும்  கூட்டத்தை இன்னைக்கு காணோம்.

இந்த ஊருக்கே என்னவோ ஆன மாதிரி இருக்கு என்று பாபு சொல்லிக் கொண்டிருந்தபோது அழுத பையனை இழுத்துக் கொண்டு சமுத்திரகனி (பஸ் ஸ்டாண்ட் கீரை வியாபாரி) வந்தாள். அழுவாதேன்னு சொன்னா கேளுடா கேளுடா என்று பையனை அடித்துக் கொண்டே அவளும் அழுதாள்.

ஏன் என்னாச்சு கனியக்கா பையனைப் போட்டு இப்படி அடிக்கிற. ஊரும் ஒருமாதிரி தெரியுது எனக் கேட்ட பாபுவிடம் என்னத்த சொல்றது வானம் இடிஞ்சு விழுந்து பூமி பொளந்த மாதிரி ஊர் ஒண்ணும் செய்ய முடியாம நிக்குது. செங்கம்மா கிழவி செத்துப்போச்சு. மணியகார ஆபீஸூக்கு தகவல் போயிருக்கு. அவங்க வந்த பின்னதான் எதுவுந்தெரியும். அங்கே யாரும் அழக் கூடாதுங்கறது  இவனுக்குத் தெரியாம எட்டணாக்காசுக்கு  கிழவிய  எழுப்பச்சொல்றான்.

எல்லாரும் என்னையத்திட்றாங்க.  அதான் இழுத்துட்டு வந்தேனென்றாள்.   

என்னது செங்கம்மா கிழவி செத்துப் போச்சா.. சிங்கக்கிழவி  சாய்ஞ்சிருச்சா  என்னக்கா சொல்றீங்க முந்தா நாள் காலையில் கூட வெத்தலைக்கு சுண்ணாம்பு எடுத்துட்டு வந்தர்ரேன் வண்டிய எடுத்தராதேன்னு மிரட்டிட்டு போச்சே. சொல்லும்போதே பாபுவின் வாயிலிருந்த சிகரெட் நழுவி   கீழே விழுந்தது. கண்களில் நீர் பொங்கி வழிந்தது.

கால்கள் இரண்டும் தடுமாறின.      பாபு பாபு  என்னாச்சு பாபு முதல்லே நீ உட்காரு என்று ஆசுவாசப்படுத்திய டிரைவர் டீக்கடையில் இருந்து குடிக்கக் தண்ணி எடுத்துக் கொடுத்தார். யாரு அந்தக் கிழவி உனக்கு சொந்தமா எனக் கேட்டார். எனக்கு மட்டுமில்ல ராஜு இந்த ஊருக்கு டவுன் மார்க்கெட்டுக்கு பஸ் டெப்போவுக்கு கலெக்டர் ஆபீஸுக்குஎல்லோருக்குமசொந்தம். எனக்குத் தெரிஞ்சவரைக்கும் சொல்றேன். கேட்ட பின்னாடி கிழவி உனக்கும் சொந்தமின்னு நீ சொல்லுவே. 

செங்கம்மா பாட்டிக்கு அஞ்சு மக்கமாரு. ரெண்டு பசங்க மூணு பொண்ணுக. புருசன் வேற கல்யாணம் பண்ணி அவளுக்கும் ஒரு  பையனைக் குடுத்துட்டு செத்தும் போய்ட்டாரு. அந்த சம்சாரமும் போயிடுச்சு. இது போதாதென்று மார்க்கெட்லே அனாதையாக கிடந்த ஒரு பையனையும் கூட்டிட்டு வந்து வளர்த்துச்சு. காய்கறி மார்க்கெட்லே காய் கறிகளை விலை பேசி மடை மாற்றிவிடும்வேலை. இந்தம்மா நேர்மைக்கு அங்கே ரொம்ப நல்லபேர்.

காலையிலே போய்ட்டு மத்தியானம் வந்துடும். ஆறுபேரையும் இந்தம்மா தான் வளர்த்தி வேலை கல்யாணம் எல்லாம் ஏற்பாடும் பண்ணி வெச்சது.இப்ப அவங்களே எல்லாம் பேரன் பேத்தி எடுத்தாச்சு. ஆனா யாருமே இந்தம்மாவைப் பார்த்துக்க மாட்டாங்க. நேத்து வரைக்கும் சுயமா சம்பாரிச்சுத்தான் வாழ்க்கையை நடத்திச்சு. பஸ் ஸ்டேண்ட்ல உட்கார்ந்துட்டு எல்லாரையும் சகட்டுமேனிக்கு திட்டும்.எனக்குகூட சிலசமயம் கோபம் வரும்.

 ஆனால் அந்தக்கிழவி கோபம் சரி தான்னு போகப் போகப் புரிஞ்சிட்டேன். யாருக்கும் பயப்படாது. பொய் பேசாது.இந்த ஊருக்கு சொகுசு பஸ் விட்ட நேரம் அப்பவும் நான்தான்   கண்டக்டர். டிக்கெட் கொடுத்தவுடன் வழக்கமாக தரும் சில்லறை கொடுத்தது. இந்த பஸ்ஸுக்கு டபுள் சார்ஜ் கொடுக்கணும் பாட்டி  என்றேன். எதுக்கு ரெட்டிப்பு காசு? இது புது பஸ்.சொகுசு பஸ். அதனால்தான் அதிக காசு. நான் உங்கிட்ட புதுசு சொகுசு எல்லாம் கேட்டனா  பாட்டி இது கவர்ன்மென்ட் போட்ட ரூல்ஸ். 

உன் கவர்மென்ட தூக்கி குப்பையிலே போடு. நான் பழைய டிக்கெட் காசு தான் தருவேன். சரிசரி நீ கொடுக்கிறத  கொடு. மிச்சத்தை நான் போட்டு கட்டிக்கிறேன். நேரமாச்சு. வண்டியை எடுக்கணும். நீ யார்ரா என் டிக்கெட்டுக்கு காசு கொடுக்கறதுக்கு. பெத்தா பொறப்பா. நீ டிக்கெட்டை  மாத்திக் கொடு. முடியாது பாட்டி. நீ வேணுமின்னா  இறங்கி கம்மி டிக்கெட் பஸ்லே வா இறங்கு. பாட்டிக்கு வந்துச்சு பாரு கோபம். என்னாங்கடி  என்னாங்கடா வாயைப் பொளந்து  பார்த்துட்டு இருக்கீங்க. யாரும் எதுவும் தட்டிக்கேட்க மாட்டீங்களா.

பாட்டி இன்னைக்கு மட்டும் விடுங்க நேரமாச்சு. நாளைக்கு ரிப்போர்ட் பண்ணிக்கலாம்-இது மற்ற பயணிகள். நாளைக்கு எல்லாம் ஒரு புண்ணாக்கும் கிடையாது. இன்னைக்கு விட்டுட்டா இதே தொடர்ச்சியாயிடும். நாம படுற பாட்டுக்கு இந்தபஸ் வேணுமா. ஐயோ பாட்டி  கொஞ்சம் கீழெ இறங்கு. டயத்துக்கு வண்டி எடுக்கலைன்னா நாங்கள் மேலிடத்துக்கு பதில் சொல்லணும். சரி நான் இறங்கறேன். நீ வண்டிய எடு. அப்புறம் நான் ரைட் விசில் கொடுத்தும் டிரைவர் வண்டிய எடுக்கலே. ஏன் என்னாச்சு-இது நாகராஜு டிரைவர். பார்த்தா பஸ் முன்னாடி கிழவி காலை நீட்டிப் படுத்திருக்குது.

எவ்வளவு  சொல்லியும் கேட்காம டெப்போவிலிருந்து மேனேஜர் கலெக்டர் ஆபீஸ் ஆட்கள் பிரஸ் காரங்க எல்லாம் வந்து பெரிய களேபரமே ஆயிடுச்சு. ஊர்க்காரங்களும் பாட்டி பக்கம் சேர்ந்துட்டாங்க. அப்புறமென்ன ஷெட்டிலிருந்து ஸ்பேர் பஸ் வந்தது. அத்தனை பவரா இந்தப்பாட்டிக்கு- டிரைவர் இன்னுங்கேளு.

இங்கிருக்கிற இந்த ஆபீஸ்  ஸ்டாப்ஸ் கிட்ட ஒரு நாள் யாரோ ஒருத்தன் வந்துகாசு கேட்டு மிரட்டி இருக்கான். அவங்க பயந்துட்டாங்க.அப்ப அங்கே வேகமா வந்த நம்ம செங்கம்மா பாட்டி அவனைப் பளாரென்று கன்னத்தில் மாற்றி மாற்றிஅறைந்தது. அங்கிருந்தவங்களுக்கு ஒரே ஆச்சர்யம் சந்தோஷம். அதை நீடிக்க விடவில்லை பாட்டி. ஏண்டா நாயே நீ தின்ன சோத்துக்கு நான் ஏண்டா காசு தரணும்.

பக்கத்தில் உக்கார்ந்து சாப்பிட்டதாலே டீக்கடையிலே நான் குடுப்பேன்னு சொல்லிட்டு வந்தியாமே. காசில்லேன்னு எங்கிட்ட கேட்டிருந்தா கொடுத்திருப்பேன். மொல்லமாரித்தனமா பண்றே. முதல்லே போயி நீ தின்னதுக்கு காசு குடுத்திரு. இல்லைன்னா தோலை உறிச்சி தொங்கவிட்டுறுவேன்னு கோபமாக சொல்லிட்டு ஆபீஸ்காரவங்க பக்கம் திரும்பி உங்க வீரமும் அதிகாரமெல்லாம்  எங்க மாதிரி பொது சனங்க கிட்டதான். அநியாயத்து மேல கிடையாது. என்ன  படிச்சுஎன்ன பிரயோசனம்.

போய் வேலையை பாருங்க என்று மிரட்டி விட்டுச்சென்றது. இதை விட முக்கியமானது  பாட்டியோட உயில் தான். தான் செத்துட்டா  மக்கள் மருமக்களோ ஊர்ச்சனமோ யாரும் அழக்கூடாது எவ்விதமான சடங்குகளோ செலவுகளோ செய்யக்கூடாது. மணியகாரர் மூலம் பெரியாஸ்பத்திரிக்கு உடல் தானம் செய்யனுமின்னு மார்க்கெட் ஆட்கள்கிட்ட எழுதிக்கொடுத்திருக்கு. அதுதான் ஊரே திரண்டு இருந்தாலும் ஒண்ணுமே செய்யாம இருக்குது.

பஸ்ஸுக்கு வெயிட் பண்ணும்போது இங்கிருக்கிற பள்ளிக்கூடத்துக்கு அழுது கொண்டே போகும் குழந்தைகளை சமாதானப்படுத்தி டீக்கடையில்  மிட்டாய் பிஸ்கெட் எல்லாம் வாங்கி கொடுக்கும். சிலசமயம் காசும் கொடுக்கும். அதுதான் இந்தப் பையன் அழுகிறான். இப்படிபாட்டி செய்தது எத்தனையோ இருக்கு. அது செங்கம்மா கிழவியில்லே. சிங்கக்கிழவி. அதான் தாங்க முடியாமல் அழுதுட்டேன்  என்று பாபு சொல்லி முடிக்கும்போது  டிரைவர் நாகராஜு கண்களிலிருந்தும் நீர் திரண்டு கீழே விழுந்தது.

பாட்டி நாகராஜுவுக்கும் சொந்தமானாள். பெரியாஸ்பத்திரி ஆம்புலன்ஸ் இன்னும் பிற அரசு வாகனங்கள் சைரன் அடித்துக் கொண்டு ஊருக்குள்  நுழைந்தன. அனைத்து மக்களும் வியந்து( பெருமையுடன் கூட) பார்க்க சகலவிதமான. மரியாதைகளுடன் இதுவரைக்கும் பேசிக் கொண்டிருந்தபடியே பெற்ற மக்கள் சொந்தக்காரங்க ஊர்மக்கள் யாருடைய உதவியையும் எதிர்பார்க்காமல்  இதோ தனது இறுதிப் பயணத்தில் கம்பீரமாக செங்கம்மா பாட்டி.

-நீலவேணி தேவராஜன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

இலக்கிய வட்டத்தில் சிறகடிக்கும் 11-ம் வகுப்பு மாணவி; ஏழாவது புத்தக வெளியீட்டை எதிர்நோக்கும் சூடாமணி!

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த இளம் எழுத்தாளரான மு.சூடாமணி தன் குழந்தைப் பருவத்திலேயே புத்தகங்களை எழுதத் தொடங்கியவர். தற்போது ஆறு புத்தகங்கள் வரை எழுதியிருக்கும் இவருக்கு, தமிழக அரசின் சார்பில் 202... மேலும் பார்க்க

`மொழிபெயர்ப்பின் நிறம் ஆர்.சிவக்குமார்' - ஆகுதி பதிப்பகத்தின் ஒரு நாள் கருத்தரங்கு

எழுத்தாளர் அகரமுதல்வனின் ஆகுதி பதிப்பகம் வருடந்தோறும் படைப்பாளர்களையும், அவர்களுடைய படைப்புகளையும் கொண்டாடுவதற்கான நிகழ்வுகளை ஒருங்கிணைக்கும். அப்படி இந்தாண்டிற்கான ஒரு நாள் கருத்தரங்கு நிகழ்வில் மொழி... மேலும் பார்க்க

முட்டாள் என்ற சொல்லுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்! - முரண்பாடும் விளக்கமும்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

கோபுரங்கள் சாய்வதில்லை! - ஒரு தாயின் பாடம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் /விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தி... மேலும் பார்க்க

அறிவுத் தூதுவர்களுக்கு ஒரு சல்யூட்! : உன்னதமான மனிதர்களை கெளரவிக்கும் புதுக்கோட்டை வாசகர் பேரவை

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

திருநெல்வேலி: கல்லூரி மாணவரால் கண்டெடுக்கப்பட்ட பழைமைவாய்ந்த புதைப்பொருள்கள்!

திருநெல்வேலியில் உள்ள மானூரில் மன்னர் காலக் கல்வெட்டுகள் பலவும் கிடைக்கின்றன. இதனால் ஆய்வாளர்கள் அங்கு அடிக்கடி சென்று கள ஆய்வு செய்து வருகின்றனர். சமீபத்தில் மேற்கு செழியநல்லூரில் 450 ஆண்டுகள் பழைமைய... மேலும் பார்க்க