செய்திகள் :

Vedan: `இந்திய அரசியலமைப்பின் சாட்சியாக..!' - ராப் பாடகர் வேடன் திருமணம் | வைரலாகும் படங்கள்

post image

கேரள மாநிலத்தின் பிரபல ராப் இசைக்கலைஞர் வேடன் என்ற ஹிரண் தாஸ் முரளி, தனது நீண்டகாலத் தோழியும் எழுத்தாளருமான நவமி லதாவைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் திருச்சூர் திரூரில் உள்ள இல்லத்தில், நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் மிகவும் எளிமையான முறையில் நடைபெற்றது. சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் நடைபெற்ற இந்தத் திருமணத்தைப் பதிவு செய்ய, செம்புக்காவு துணைப் பதிவாளர் நேரில் சென்றிருந்தார்.

நீண்டகால நட்பிற்குப் பிறகு இல்லற வாழ்வில் இணைந்துள்ள இந்தத் தம்பதியினர், மதச் சடங்குகளைத் தவிர்த்து இந்திய அரசியலமைப்பின் சாட்சியாகக் கொண்டு மோதிரம் மாற்றித் தங்கள் திருமணத்தை உறுதி செய்தனர்.

இது தொடர்பாக ஊடகங்களிடம் பேசிய வேடன், ``அரசியலமைப்பின் மீது நம்பிக்கை வைத்து நாங்கள் எடுத்துள்ள இந்த முடிவு, எங்கள் எதிர்காலக் குழந்தைகளுக்குச் சிறந்த வழிகாட்டியாக அமையும்," எனத் தெரிவித்தார்.

சமீபத்தில் 'மஞ்சும்மல் பாய்ஸ்' திரைப்படத்தின் ‘கூதந்த்ரம்’ பாடலுக்காகக் கேரள மாநில அரசின் சிறந்த பாடலாசிரியருக்கான விருதை வென்றிருந்தார் வேடன். இந்த விருதைப் பெற திருவனந்தபுரம் சென்றபோதும், நவமி அவருடனே இருந்தார். 2025- ஆண்டு வேடன் எழுதிப் பாடியிருந்த மௌனலோவா பாடல் பெரும் வரவேற்பைப் பெற்றது. அப்போதே, 'இந்தப் பாடலை நவமிக்காகவே எழுதினேன்' எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடதக்கது. இந்தத் தம்பதியினருக்குச் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் வாழ்த்துகளைக் குவித்து வருகின்றனர்.

நீதித்துறையில் ஊழல்... NCERT பாடத்தில் சர்ச்சை : `திட்டமிட்ட தாக்குதல்' என சாடும் தலைமை நீதிபதி

8-ஆம் வகுப்பு NCERT பாடப்புத்தகத்தில், "நீதித்துறை ஊழல்" என்ற பெயரில் புதிய பாடம் ஒன்று சேர்க்கப்பட்டுள்ளது. இது நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் மத்தியில் கடுமையான கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ... மேலும் பார்க்க

சல்லடை, கூடைகளுடன் அஸ்தியில் தங்கத்தை தேடும் பொதுமக்கள் - கோதாவரி ஆற்றில் நடக்கும் தங்க வேட்டை

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஓடும் கோதாவரி ஆறு, பைதன் என்ற இடம் வழியாக செல்கிறது. இந்த பைதன் என்ற இடத்தில் பிரபல ஏகநாத் மகாராஜாவின் சமாதி இருக்கிறது. இந்த கோதாவரி ஆற்றில் ஒவ்வொரு ஆண்டும் பொதுமக்கள் தங்க வே... மேலும் பார்க்க

இரட்டை சகோதரிகளுக்கு இரட்டை சகோதரர்களுடன் திருமணம்; மணமக்களை அடையாளம் காண திண்டாடிய சுவாரஸ்யம்!

தெலங்கானாவில் இரட்டை சகோதரர்களுக்கு இரட்டை சகோதரிகளுடன் நடந்த திருமண வீடியோ சமூக வலைத்தளப் பக்கங்களில் வைரலாகி இருக்கிறது.அங்குள்ள காமாரெட்டி மாவட்டத்தில் தெமிகலன் என்ற இடத்தைச் சேர்ந்தவர்கள் கீர்த்தன... மேலும் பார்க்க

விஐடி துணை தலைவர் சங்கர் விசுவநாதனுக்கு `கவுரவ டாக்டர்' பட்டம்! - வழங்கியது தாய்லாந்து பல்கலைக்கழகம்

விஐடி துணைத் தலைவர் சங்கர் விசுவநாதன் அவர்களுக்கு தாய்லாந்தின் பாங்காங் நகரில் உள்ள ராஜமங்கலா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் க்ருங்தெப் (RMUTK) “கவுரவ டாக்டர்” பட்டம் வழங்கியுள்ளது.தாய்லாந்து நாட்டின் பிரி... மேலும் பார்க்க

கலப்பட பால் குடித்த 4 பேர் உயிரிழப்பு... சிகிச்சையில் பலர் - ஆந்திராவில் அதிர்ச்சி!

ஆந்திர மாநிலம், ராஜமுந்திரி, கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களுக்கு முன்பு பொதுமக்களுக்கு திடீரென குமட்டல், வாந்தி போன்ற பிரச்னைகள் ஏற்பட்டது. அதோடு சிறுநீர் வெளியேறுவதும் வெகுவாக குறைந்தத... மேலும் பார்க்க

"என்னைச் சுட வந்தவரைச் சுட்டுக்கொன்றேன்" - நேர்காணலில் மாஜி பாஜக எம்பி பிரிஜ் பூஷன் ஒப்புதல்

இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பின் தலைவராக இருந்தவர் பிரிஜ்பூஷன் சிங். பா.ஜ.க. முன்னாள் எம்.பியான இவர் இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பின் தலைவராக இருந்தபோது வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் குற்... மேலும் பார்க்க