செய்திகள் :

"என்னைச் சுட வந்தவரைச் சுட்டுக்கொன்றேன்" - நேர்காணலில் மாஜி பாஜக எம்பி பிரிஜ் பூஷன் ஒப்புதல்

post image

இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பின் தலைவராக இருந்தவர் பிரிஜ்பூஷன் சிங். பா.ஜ.க. முன்னாள் எம்.பியான இவர் இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பின் தலைவராக இருந்தபோது வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இதற்காக மல்யுத்த வீராங்கனைகள் இணைந்து போராட்டமும் நடத்தினர். ஆனாலும் இறுதிவரை பிரிஜ்பூஷன் சிங் தனது பதவியை ராஜினாமா செய்யவே இல்லை. அவர் தனது பதவிக்காலம் முடிந்த பிறகுதான் பதவி விலகினார். பிரிஜ்பூஷனிடம் பத்திரிகையாளர் ஒருவர் நேர்காணல் நடத்தினார்.

அப்போது உத்தரப்பிரதேசத்தில் நிலவும் கேங்க்வார் குறித்தும், இதில் நீங்கள் யாரையாவது கொலை செய்து இருக்கிறீர்களா என்றும் நிருபர் கேட்டதற்கு, ''என்னுடைய நண்பரை ஒருவர் துப்பாக்கியால் சுட்டார். துப்பாக்கியால் சுட்ட நபர் தனது துப்பாக்கியை என்னை நோக்கித் திரும்பியவுடன், நான் அவரைத் திருப்பிச் சுட்டேன்.

பிரிஜ்பூஷன் சிங்
பிரிஜ்பூஷன் சிங்

நீங்கள் அதை தற்காப்பு அல்லது பழிவாங்கல் என்று கூறலாம். ஆனால் நான் ஒருவரைக் கொன்றுவிட்டேன்" என்று பிரிஜ் பூஷண் சிங் கூறினார்.

உடனே கொலைக்காக தண்டனை அனுபவித்தீர்களா அல்லது வருத்தம் தெரிவித்தீர்களா என்று கேட்டதற்கு, எதையும் செய்யவில்லை என்றார். அதோடு, "ஒருவர் உங்களைத் தாக்கினால் நீங்கள் திரும்பத் தாக்கக்கூடாதா? தன்னை அறைந்தால் தானும் அதே வழியில் பதிலடி கொடுப்பேன். கொலைக்காக நான் வருத்தப்படவில்லை" என்றும் தெரிவித்தார்.

பிரிஜ்பூஷன் சிங்கின் இந்த ஒப்புதல் வாக்குமூலம் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பிரிஜ்பூஷன் சிங் கடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட பா.ஜ.கவிடம் சீட் கேட்டார். ஆனால் அவருக்குப் பதில் அவரது மகன் தேர்தலில் போட்டியிட பா.ஜ.க வாய்ப்பு கொடுத்தது.

VIT CHENNAI : “எனக்கு ரோல்மாடல் என்னுடைய அம்மா தான்' - Vibrance 2026-ல் நடிகை ச்ரிலீலா

வி.ஐ.டி சென்னையில் `வைப்ரன்ஸ் 2026' என்ற சர்வதேச மாணவ மாணவியர் கலைத் திருவிழாவின் நிறைவு விழா 21.02.2026 அன்று மாலை நடைபெற்றது. விழாவுக்கு விஐடி நிறுவனர் மற்றும் வேந்தர் முனைவர் கோ.விசுவநாதன் தலைமை த... மேலும் பார்க்க

"பசும்பால் புத்திசாலியாக்கும்; எருமைப் பால் சோம்பேறியாக்கும்" - ராஜஸ்தான் பாஜக அமைச்சர் பேச்சு

ராஜஸ்தான் மாநிலம் கோடாவில் நடந்த பசு பாதுகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பாஜக-வைச் சேர்ந்த அம்மாநில கல்வி அமைச்சர் மதன் திலாவர், ''பசும்பால் புத்திசாலித்தனத்தை அதிகரிக்கிறது. அதேசமயம் எருமைப்... மேலும் பார்க்க

அமெரிக்காவின் அழுத்தம்; போதைப்பொருள் கடத்தல் மன்னன் மெக்சிக்கோவில் சுட்டுக்கொலை - வெடித்த கலவரம்

மெக்சிக்கோ போதைப் பொருள் கடத்தலுக்கு மிகவும் பெயர் பெற்றது. அங்கு போதைப்பொருள் கடத்தலில் நெமேசியோ ஒசேகுரா ரூபன் செர்வாண்டஸ் என்று அழைக்கப்படும் எல் மென்ச்சோ என்பவன் தான் போதை பொருள் கடத்தலில் கொடிகட்ட... மேலும் பார்க்க

அஜித் பவார் : `காரணத்தை அறிய அனைவரும் விரும்புகிறார்கள்' - விமான விபத்து குறித்து சி.பி.ஐ விசாரணை

மகாராஷ்டிராவில் துணை முதல்வராக இருந்த அஜித் பவார் கடந்த மாதம் 28ம் தேதி பாராமதியில் நடந்த விமான விபத்தில் மரணம் அடைந்தார். அவரது மரணம் குறித்து சந்தேகம் கிளப்பிய சரத் பவார் பேரன் ரோஹித் பவார், விமான வ... மேலும் பார்க்க

கைவிட்ட தாய்... அரவணைத்த பொம்மை; இதயங்களை வென்ற குட்டிக் குரங்கு உணர்த்தும் வாழ்க்கை பாடம்!

ஜப்பானின் சிபா மாகாணத்தில் உள்ள இச்சிகாவா நகர மிருகக்காட்சிசாலையில் கடந்த 2025-ம் ஆண்டு ஜூலை மாதம் 'பஞ்ச்' என்ற ஜப்பானிய மக்காக் குரங்கு குட்டி பிறந்தது. பொதுவாக குரங்கு குட்டிகள் பிறந்தவுடன் தனது தாய... மேலும் பார்க்க

AI மாநாடு: `காங்கிரஸ் நடத்திய போராட்டத்தில் சதி' - ராகுல் காந்திக்கு எதிராக கருப்புகொடி காட்டிய பாஜக

எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மீது மும்பை அருகில் உள்ள பீவாண்டியில் ஆர்.எஸ்.எஸ்-க்கு எதிராக பேசியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கு இன்று பீவாண்டி கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இதில் ர... மேலும் பார்க்க