செய்திகள் :

தாய் கிழவி: "இது ரஜினிகாந்த் நடிக்க வேண்டிய படம்; ஆனால்" - ராதிகா

post image

சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள ‘தாய் கிழவி’ படத்தில் ராதிகா சரத்குமார், பால சரவணன், சிங்கம்புலி, முனீஸ்காந்த், முத்துக்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்திருக்கிறார். நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்திருக்கிறார்.

இப்படத்தின் டிரெயிலர் வெளியீட்டு விழா நேற்று (பிப்.24) நடைபெற்றிருக்கிறது.

தாய் கிழவி
தாய் கிழவி

இதில் கலந்துகொண்டு பேசிய ராதிகா, "இந்தப் படத்தைச் சில நாட்களுக்கு முன்பு கமல் சார் பார்க்கும்போது அவருடன் சேர்ந்து நானும் பார்த்தேன். படத்தைப் பார்த்து ரசித்து சிரித்தேன்.

இந்தப் படத்தைப் பார்த்தபோது ரஜினிகாந்த் நடிக்க வேண்டிய படம் இது என்று எனக்குத் தோன்றியது. அவர் இந்த வேஷம் போட்டு நடிக்க மாட்டார். அதனால் அக்கதாபாத்திரத்தை பெண்ணாக மாற்றி நடிக்க வைத்திருக்கிறார்கள்.

இந்தப் படத்திற்கு மேக்கப் போடும்போது எனக்கு கோபம்தான் வந்தது. நான்கரை மணிநேரம் மேக்கப் போடுவார்கள். அந்தச் சமயத்தில்தான் கமல்ஹாசனுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று நினைத்தேன்.

ஒரு கதாபாத்திரத்திற்கு மேக்கப் போடுவது நமக்கு கடினமாக இருக்கிறதென்றால் அவர் எவ்வளவு கதாபாத்திரங்களுக்கு மேக்கப் போட்டிருப்பார். சலிக்காமல் அதைச் செய்திருக்கிறார்.

ராதிகா
ராதிகா

அவ்வை சண்முகி படத்திற்கு அவர் மேக்கப் போட்டது பற்றி என்னிடம் சொல்லியிருக்கிறார். 3 மணி நேரத்திற்கு மேல் முகத்தில் இருந்து அந்த மேக்கப் கொட்டும் அதையெல்லாம் பிடித்துக்கொண்டு நடிப்பேன் என்று கமல் சார் சொல்லியிருக்கிறார்.

இந்தக் கதாபாத்திரத்தை ஏற்றுக்கொண்டதற்கு அவர்தான் இன்ஸ்பிரேஷன். அவர் எப்போதும் சொல்லுவார், ராதிகா நீ தெரியக்கூடாது, அந்தக் கதாபாத்திரம்தான் தெரிய வேண்டும் என்று சொன்னார். அந்த வார்த்தை என் மனதில் ஒட்டிக்கொண்டது" என்று பேசியிருக்கிறார்.

தாய் கிழவி: 'நான் சினிமாவுக்கு வந்தபோது நிறைய பேர் என்னை அவமானப்படுத்தினாங்க.! - ராதிகா எமோஷனல்

சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள ‘தாய் கிழவி’ படத்தில் ராதிகா சரத்குமார், பால சரவணன், சிங்கம்புலி, முனீஸ்காந்த், முத்துக்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்திருக்... மேலும் பார்க்க

Samantha: "அவரால்தான் நான் இப்போது ஒரு சிறந்த மனிதராக உணர்கிறேன்" - மனம் திறந்த நடிகை சமந்தா

தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி கதாநாயகியான சமந்தா, இயக்குநர் ராஜ் நிதிமோருவைச் சமீபத்தில் திருமணம் செய்துகொண்டார். 2021-ம் ஆண்டு 'தி ஃபேமிலி மேன் 2' படப்பிடிப்பின்போது தொடங்கிய இவர்களது நட்பு, பல ஆ... மேலும் பார்க்க

`இயல்பாகவே அம்மாவோட ஜீன் என்னிடம் இருக்கு; அம்மா மாதிரி வர முடியும்னு.!' - குஷ்பு மகள் அவந்திகா

தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் குஷ்பு. 2000-ல் இயக்குநர் சுந்தர் சி-யை காதல் மணம் புரிந்தது அனைவரும் அறிந்த வரலாறு. இந்தத் தம்பதிக்கு அவந்திகா, அனந்திகா என இரண்டு மகள்கள் இருந்தாலும், ... மேலும் பார்க்க

தாய் கிழவி: "நான் யாருக்கும் போட்டியாகவோ, காலி பண்ணவோ வரல. என்னை விட்ருங்க!" - சிவகார்த்திகேயன்

சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள ‘தாய் கிழவி’ படத்தில் ராதிகா சரத்குமார், பால சரவணன், சிங்கம்புலி, முனீஸ்காந்த், முத்துக்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்திருக்... மேலும் பார்க்க

Pa Ranjith: 'வேட்டுவம்', 'சார்பட்டா 2', 'பிர்சா முண்டா' - பா.ரஞ்சித் லைன் அப் அப்டேட்ஸ்!

பா. ரஞ்சித் இப்போது 'வேட்டுவம்' படத்தின் படப்பிடிப்பை முடித்திருக்கிறார். கடந்த 2024-ம் ஆண்டு இவருடைய இயக்கத்தில் 'தங்கலான்' திரைப்படம் திரைக்கு வந்திருந்தது. அப்படத்தை முடித்த கையோடு 'வேட்டுவம்' படத்... மேலும் பார்க்க