செய்திகள் :

`மேடை ஏறலாம், வசனம் பேசலாம்... ஆனால்.!' - விஜய்க்கு வானதி சீனிவாசன் சவால்

post image

கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், “திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிமன்றம் உத்தரவிட்டும் மாநில அரசு அதை நிறைவேற்றாமல் இருக்கிறது. எந்த முகாந்திரமும் இல்லாமல் திமுகவினர் அதை தடுத்து நிறுத்தியுள்ளனர்.

வானதி சீனிவாசன்

சட்டம் ஒழுங்கு பிரச்னை என்று பொய்யான காரணங்களை கூறுகிறார்கள். தமிழர்களின் அடையாளங்களை அழிக்கிற விதமாக திராவிட மாடல் திமுக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

திமுக-வினரின் நோக்கமே இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்த வேண்டும், இந்து கோயில்களுக்கு உரிய மரியாதை கொடுக்கக் கூடாது என்பது தான். அது அவர்களின் ரத்தத்தில் ஊறியுள்ளது. ஆன்மிக நம்பிக்கையை எந்த அரசியல் சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது.

முதல்வர் ஸ்டாலின்

ஊழல்வாதிகளை மிரட்டி தேசிய ஜனநாயக கூட்டணி அமைக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் கூறுகிறார். இவ்வளவு பேசும் முதலமைச்சர் அவரது அமைச்சரவையில் உள்ள கே.என் நேரு மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது ஊழலாக தெரியவில்லையா.

முதலமைச்சர் தன் அருகில் இருப்பவர்களை பார்த்துவிட்டு பேசினால் நியாயமாக இருக்கும். ஊழல் வழக்கிற்காக பதவியில் இருந்த அமைச்சரை வீட்டிற்கு அனுப்பிய பெருமைக்குரியவர் முதலமைச்சர் ஸ்டாலின் தான். அவருக்கு எங்களை பேசுவதற்கு எந்த அருகதையும் கிடையாது.

விஜய்

விஜய் என்னதான் புது புது வார்த்தைகளால் பேசினாலும், அல்டிமேட்டாக திமுகவை வீழ்த்தப் போவது தேஜகூ தான். மேடை ஏறலாம், வசனம் பேசலாம், கூட்டத்தையும் காட்டலாம். ஆனால் திமுகவை வீழ்த்தும் சக்தி எங்களுக்கு தான் இருக்கிறது” என்றார்.

"ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.10,000" - 3ம் கட்ட வாக்குறுதியை வெளியிட்டு எடப்பாடி பழனிசாமி அதிரடி

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கிகொண்டிருக்கிறது. இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், பேரணி, பிரசாரம், பொதுக்கூட்டம், தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் என அரசியல் களம் அனல் பறக்கிறது.இது ஒருபுறம் இருக்... மேலும் பார்க்க

நெல்லை: “திமுக ஆட்சியில் எதிர்க்கட்சிகளின் குரல்வளை நெரிக்கப்படுகிறது” - நயினார் நாகேந்திரன்

நெல்லையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன், “திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற முடியாத சூழல் குறித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தும்கூட முருக பக்தர்கள் மத்தியில் ஒரு மன வர... மேலும் பார்க்க

`விதிமுறைகளை மீறிய தவெக-வினர்; குற்றச்சாட்டு உண்மைக்குப் புறம்பானது!’ - வேலூர் மாவட்டக் காவல்துறை

வேலூர் அகரம்சேரியில், த.வெ.க நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டம் நேற்று நடைபெற்றது. த.வெ.க தலைவர் விஜய் பங்கேற்று முப்பத்தைந்து நிமிடங்கள் பேசினார். அதற்கு முன்னதாக, காவல்துறையினர் அனுமதி கொடுப்பதில் காலத... மேலும் பார்க்க