செய்திகள் :

பொறியாளருக்கு 7 லட்சம்; மூத்த துப்புரவு தொழிலாளிக்கு ரூ.2 லட்சம்! - தெலங்கானா அரசு அறிவிப்பு

post image

தெலங்கானா அரசு சமீபத்தில் தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களின் சம்பளத்தை வெகுவாக அதிகரித்து இருக்கிறது. தெலங்கானாவின் மின் துறையில் மூத்த பொறியாளராக இருக்கும் நபருக்கு மாதம் ரூ.7 லட்சம் சம்பளமாக வழங்கப்படுகிறது. இதே போன்று ஐதராபாத்தில் மூத்த துப்புரவு தொழிலாளியாக இருக்கும் ஒருவரின் சம்பளம் 2 லட்சத்தை தொட்டுள்ளது. 2014ம் ஆண்டு தெலங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டதில் இருந்து அடுத்தடுத்து வந்த தேர்தல் காரணமாக சம்பளம் அதிகரித்துக்கொண்டே சென்றது.

ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பும் மாநில அரசு ஊழியர்களின் சம்பளத்தை அதிகரித்துக்கொண்டே இருந்தது. இதனால் ஊழியர்களின் சம்பளம் கிடுகிடுவென அதிகரித்து இருக்கிறது. ஐதராபாத்தில் துப்புரவு தொழிலாளியாக பணிபுரிபவர்களின் சராசரி சம்பளம் ரூ.70 ஆயிரமாக இருக்கிறது.

முதல்வர் ரேவந்த் ரெட்டி

புதிதாக வேலைக்கு சேருபவர்களுக்கு ரூ.28 ஆயிரமும், மூத்த துப்புரவு தொழிலாளிக்கு ரூ.2 லட்சமும் சம்பளமாக வழங்கப்படுகிறது. தெலங்கானா அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு மாதமும் சம்பளமாக ரூ.6 ஆயிரம் கோடியை வழங்கிக்கொண்டிருக்கிறது.

இந்த அளவுக்கு சம்பளமாக வழங்கப்பட்டாலும், மாநில அரசின் வருவாயும் கணிமாக அதிகரிப்பதால் நிலையை அரசு சமாளித்து வருகிறது. மாநில அரசு மொத்த உருவாயில் 45 சதவீதத்தை ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியத்திற்காக செலவிடுகிறது. தெலங்கானாவின் வளர்ச்சி விகிதம் 10 சதவீதமாக இருக்கிறது. அதோடு தெலங்கானா மக்களின் சராசரி வருமானம் மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் அதிகமாக இருக்கிறது. கடந்த ஆண்டு பட்ஜெட்டில் வருவாய் ரூ.2.30 லட்சம் கோடியாக இருந்தது. செலவு ரூ.2.27 லட்சம் கோடியாக இருந்தது. பட்ஜெட்டில் கல்விக்கு மட்டும் அதிகபட்சமாக ரூ.23 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

ரூ.40,000 கோடி மோசடி: அனில் அம்பானியின் ரூ.3,700 கோடி வீட்டை பறிமுதல் செய்த அமலாக்கப்பிரிவு!

தொழிலதிபர் அனில் அம்பானி ரிலையன்ஸ் மொபைல் போனுக்காக ரூ.40 ஆயிரம் கோடி கடன் வாங்கிவிட்டு, அதனை திரும்ப செலுத்தவில்லை. இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள வங்கிகளில் இருந்து இக்கடனை வாங்கிவிட்டு திரும்ப ... மேலும் பார்க்க

மீனாட்சி உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய சிறப்பு சர்வதேச கருத்தரங்கம்!

சென்னையின் முதன்மையான பல்கலைக்கழகமாக திகழும் மீனாட்சி உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், 16 பிப்ரவரி 2026 அன்று, தொற்று நோய் மற்றும் வைரஸ் பயில் துறையை களமாக கொண்டு ஒரு சிறப்பு சர்வதேச கருத்தரங்கம... மேலும் பார்க்க

நீதித்துறையில் ஊழல்... NCERT பாடத்தில் சர்ச்சை : `திட்டமிட்ட தாக்குதல்' என சாடும் தலைமை நீதிபதி

8-ஆம் வகுப்பு NCERT பாடப்புத்தகத்தில், "நீதித்துறை ஊழல்" என்ற பெயரில் புதிய பாடம் ஒன்று சேர்க்கப்பட்டுள்ளது. இது நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் மத்தியில் கடுமையான கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ... மேலும் பார்க்க

சல்லடை, கூடைகளுடன் அஸ்தியில் தங்கத்தை தேடும் பொதுமக்கள் - கோதாவரி ஆற்றில் நடக்கும் தங்க வேட்டை

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஓடும் கோதாவரி ஆறு, பைதன் என்ற இடம் வழியாக செல்கிறது. இந்த பைதன் என்ற இடத்தில் பிரபல ஏகநாத் மகாராஜாவின் சமாதி இருக்கிறது. இந்த கோதாவரி ஆற்றில் ஒவ்வொரு ஆண்டும் பொதுமக்கள் தங்க வே... மேலும் பார்க்க

Vedan: `இந்திய அரசியலமைப்பின் சாட்சியாக..!' - ராப் பாடகர் வேடன் திருமணம் | வைரலாகும் படங்கள்

கேரள மாநிலத்தின் பிரபல ராப் இசைக்கலைஞர் வேடன் என்ற ஹிரண் தாஸ் முரளி, தனது நீண்டகாலத் தோழியும் எழுத்தாளருமான நவமி லதாவைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் திருச்சூர் திரூரில் உள்ள இல்லத்தில்... மேலும் பார்க்க

இரட்டை சகோதரிகளுக்கு இரட்டை சகோதரர்களுடன் திருமணம்; மணமக்களை அடையாளம் காண திண்டாடிய சுவாரஸ்யம்!

தெலங்கானாவில் இரட்டை சகோதரர்களுக்கு இரட்டை சகோதரிகளுடன் நடந்த திருமண வீடியோ சமூக வலைத்தளப் பக்கங்களில் வைரலாகி இருக்கிறது.அங்குள்ள காமாரெட்டி மாவட்டத்தில் தெமிகலன் என்ற இடத்தைச் சேர்ந்தவர்கள் கீர்த்தன... மேலும் பார்க்க