செய்திகள் :

"கலை, வாழ்வியல் பற்றி பேசினோம்; அரசியல் பேசவில்லை"- ரஜினியுடான சந்திப்பு குறித்து வைரமுத்து

post image

ரஜினிகாந்தின் `ஜெயிலர் 2' படம் வரும் அக்டோபர் 15ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் கவிஞர் வைரமுத்து ரஜினிகாந்தை நேரில் சந்திருக்கிறார்.

இந்தச் சந்திப்பு குறித்து தனது எக்ஸ் தளத்திலும் பகிர்ந்திருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், " ரஜினிகாந்த் அவர்களை எப்போது சந்தித்தாலும் இன்னிசை பாடும் இதயம். எதிராளிக்கு இன்பம் கடத்தும் மின்சார மனிதர் அவர். 'பார்த்து நாளாயிற்று; பார்க்க வந்தேன்; ஜெயிலர் 2 வெற்றிபெற வாழ்த்துகிறேன்” என்றேன்.

ஜெயிலர் 2
ஜெயிலர் 2

கலை பேசினோம்; வாழ்வியல் பேசினோம்; ஒரு வார்த்தைகூட அரசியல் பேசவில்லை. எப்போது வெளிவரும் சுயசரிதை என்றேன். 'வேலை நடக்கிறது; விரைவில் வெளிவரும்' என்றார். உங்கள் சுயசரிதை எதிர்பார்க்கப்படுகிறது என்றேன். 'ஏன்?' என்றார்.

பலபேருக்கு வரலாறு இருக்கிறது; உங்களுக்கு வசீகரமும் இருக்கிறது என்றேன். நான் சொன்னதை மீண்டும் மீண்டும் சொல்லிப் பார்த்துக்கொண்டார்.'முதலில் தமிழ் ஆங்கிலம் இரண்டிலும் வெளிவரலாம்' என்றார்.

ரஜினிகாந்த் 50 - கவிதையால் வாழ்த்திய வைரமுத்து!
ரஜினிகாந்த் 50 - கவிதையால் வாழ்த்திய வைரமுத்து!

வந்தால் அதிகம் விற்பனையாகும் புத்தகங்களுள் ஒன்றாய் விளங்கும் என்றேன். பசுந்தேநீர் பருகக் கொடுத்தார். அதிலிருந்த துளசிமணம் வீடு வரும்வரை வீசியது நாசியில்" என்று ரஜினிகாந்தை சந்தித்தது குறித்து நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Jailer 2 Exclusive: "ரஜினி சார் பார்க்க சொன்ன Web Series அதான்" - மிர்னா மேனன் பகிரும் தகவல்

'ஜெயிலர்' படத்தின் முதல் பாகத்தில் நடிகை மிர்னா மேனன் கவனம் ஈர்த்து நல்ல பாராட்டுகளையும் பெற்றிருந்தார். இப்போது 'ஜெயிலர் 2' ரிலீஸுக்காகவும் அவர் உற்சாகமாக இருக்கிறார். இந்த நேரத்தில் 'ஜெயிலர் 2'வுக்க... மேலும் பார்க்க

Kushboo: "உங்க வீட்டுப் பெண்களின் புகைப்படங்களை AI மூலம் தவறாக மாற்றிப் பாருங்கள்" - குஷ்பு காட்டம்

நடிகை குஷ்பூ நேற்றைய தினம், தென்னிந்தியத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டார். குஷ்பு அந்தக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், ஏ.... மேலும் பார்க்க

"இந்தக் கார்த்திக் சுப்புராஜைத்தான் தேடிக்கொண்டிருந்தேன்" - டோரதி படக்குழுவைப் பாராட்டிய ரஜினிகாந்த்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான 'டோரதி' படத்தைப் பார்த்த நடிகர் ரஜினிகாந்த், படக்குழுவை வரவழைத்து, தனது வாழ்த்தைத் தெரிவித்திருக்கிறார். Dorothy | டோரதி ரிஷிகாந்த், சனந்த், கீர்த்தி சுரேஷ் ஆ... மேலும் பார்க்க

Baththa: "அட்லீ சார் 'ராக்கா' படத்தில் நடிக்கிறீயாடானு கேட்டார்" - 'பத்தா' சபரி பேட்டி

விஜய் சேதுபதியின் 'பத்தா' படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. பாலாஜி தரணிதரன் இயக்கியிருக்கும் இந்தப் படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்திருக்கிறார். இந்தப் படத்தில் கதையின் மையக் கதாபாத்திரத்த... மேலும் பார்க்க

'புருஷன்' கோவா படப்பிடிப்பில் விஷால் காயம்; என்ன நடந்தது? இப்போது எப்படி இருக்கிறார் விஷால்?

விஷால் இயக்கி நடித்த 'மகுடம்' படத்திற்குப் பின், 'புருஷன்' படத்தில் நடித்து வருகிறார். கோவாவில் நடந்த இதன் படப்பிடிப்பில் சண்டைக்காட்சியின்போது விஷாலின் முதுகுப் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனால் செப்... மேலும் பார்க்க

சதுரங்க வேட்டை: ஏய்ப்பெனும் கலை!| ஆதி தாமிரா | `சினி'ஸ்கோப் 31

`சினி'ஸ்கோப் 31சதுரங்கவேட்டைசிறிய அளவு திருட்டான பிக்பாக்கெட்டை நாம் பார்த்திருக்கிறோம், பர்ஸைப் பறிகொடுத்திருக்கிறோம். பெரிய அளவு திருட்டான வங்கிக் கொள்ளைகளைப் பற்றிப் படிக்கிறோம், கேள்விப்படுகிறோம்.... மேலும் பார்க்க