செய்திகள் :

கல்லூரி மாணவர்களுக்கு 1 வருடம் இலவச Gemini — Google-ன் புதிய AI சலுகை: யார்... எப்படி பெறலாம்?

post image

கல்லூரி மாணவர்களின் படிப்பை AI மூலம் எளிதாக்கும் வகையில், Google தனது Gemini AI plans-ல் சிறப்பு student offer-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவில் தகுதியுள்ள கல்லூரி மாணவர்கள் Google AI Plus subscription-ஐ 12 மாதங்களுக்கு இலவசமாக பெற முடியும். மேலும், Google AI Pro-வும் மாணவர்களுக்கு சிறப்பு விலையில் வழங்கப்படுகிறது.

யார் இந்த offer-ஐ பெறலாம்? எப்படி?

Degree அல்லது certificate வழங்கும் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் தற்போது படிக்கும் மாணவர்கள் இந்த offer-க்கு தகுதியானவர்கள். முக்கியமாக, மாணவர்கள் தங்களுடைய student status-ஐ verify செய்ய வேண்டும்.

மாணவர்கள் முதலில் Google-ன் Student Offer page-க்கு சென்று தங்களுடைய personal Google Account மூலம் sign in செய்ய வேண்டும். அங்கு விருப்பமான plan-ஐ தேர்வு செய்து “Get student offer” என்பதை க்ளிக் செய்ய வேண்டும்.

அதன்பிறகு eligibility verification வரும். Google, மாணவர் உண்மையில் தகுதியுள்ள கல்வி நிறுவனத்தில் படிக்கிறாரா என்பதை SheerID என்ற verification service மூலம் சரிபார்க்கிறது. தேவையான student details-ஐ வழங்கி verification முடிந்ததும், தகுதி இருந்தால் offer-ஐ claim செய்யலாம்.

மாணவர்களுக்கு என்னவெல்லாம் கிடைக்கும்

Google AI Plus மூலம் அதிக usage limits கொண்ட Gemini, AI image/video/music tools, 400GB Google One storage, NotebookLM மற்றும் AI-powered study features போன்றவை கிடைக்கும்.

மேலும், Gemini-ல் Study Notebooks, interactive lessons, quizzes, flashcards போன்ற புதிய learning tools அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மாணவர்கள் தங்களுடைய பாடக்குறிப்புகள் அல்லது course materials-ஐ upload செய்து, புரிந்துகொள்ள வேண்டிய பகுதிகளை கண்டறிந்து படிப்பதற்கான திட்டத்தையும் உருவாக்க முடியும்.

AI இனி வெறும் பதில் சொல்லும் கருவி மட்டுமல்ல; மாணவர்களின் படிப்புக்கு ஒரு personal study assistant-ஆக மாறுகிறதா? Google-ன் இந்த முயற்சி அதற்கான அடுத்த கட்டமாக பார்க்கப்படுகிறது.

Claude-ன் கண்ணுக்குத் தெரியாத Watermark: “AI எழுதியதை இனி மறைக்க முடியாதா?”

Anthropic நிறுவனம் தனது Claude AI மூலம் உருவாக்கப்படும் text-ல் மனிதர்களால் எளிதில் கண்டறிய முடியாத “Invisible Watermark” ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆகஸ்ட் 2, 2026 முதல் Claude models-ல் இந்த water... மேலும் பார்க்க

LED TV பழுதைச் சரிசெய்ய புதிய கருவி: "7 வினாடிகளில் பிரச்னையைக் கண்டறியும்"- அசத்திய கரூர் இளைஞர்கள்

கரூர் மாவட்டம், வெள்ளியணை கிராமத்தைச் சேர்ந்தவர் வேலுச்சாமி. டி.வி மெக்கானிக்கான இவரது மகன்கள் சுரேஷ், பிரசாந்த் இருவரும் பொறியியல் பட்டப்படிப்பு முடித்துவிட்டு, ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரு... மேலும் பார்க்க

இனி டீனேஜர்களுக்குத் தனி ChatGPT! – ‘Quiet Hours’, ‘Study Mode’ என புதிய பாதுகாப்பு அம்சங்கள்!

AI பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், டீனேஜர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ‘ChatGPT for Teens’ என்ற புதிய அனுபவத்தை OpenAI அறிமுகப்படுத்தியுள்ளது.13 முதல் 17 வயதுக்குட்பட்டவர்களுக்க... மேலும் பார்க்க

`உங்களை நினைத்துப் பெருமைப்படுகிறேன்' - காரைக்குடி அரசுப் பள்ளி மாணவர்களைப் பாராட்டிய நாசா விஞ்ஞானி!

13 அரசுப் பள்ளி மாணவர்கள் இணைந்து உருவாக்கிய VIGO செயற்கைக்கோள், கடந்த பிப்ரவரி 13-ஆம் தேதி காலை 9.45 மணியளவில் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. பூமியிலிருந்து சுமார் 22 கிலோமீட்டர் உயரத்தை நோக்கிப் ப... மேலும் பார்க்க

Makkal Bus: என்ன பஸ்... என்ன ரூட்? - மதுரை மக்களுக்காக கல்லூரி மாணவர் உருவாக்கிய அசத்தல் `செயலி'

மதுரை மாவட்டம், வில்லாபுரம் மீனாட்சி நகர்ப் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ராகுல்ராஜ் ஜெயராமன். மதுரை மக்களுக்காக பிரத்யேக நகர்ப்புற பேருந்து செயலி ஒன்றை உருவாக்கியுள்ளார். இவர் மதுரையில் உள்ள அரசு உதவிபெறு... மேலும் பார்க்க

ஆகாயத் தாமரையிலிருந்து பேப்பர்... ஐ.நா சபை வரை அசத்தும் தமிழ்ப் பெண் சுஷ்மிதா கிருஷ்ணன்!

சுஷ்மிதா கிருஷ்ணன்நம் நாட்டை விட்டுப் போகும் போது, ஆங்கிலேயர், நிலத்தில் பார்த்தீனியத்தையும், நீரில் ஆகாயத் தாமரையையும் விட்டுச் சென்றதாக ஒரு சொல்வழக்கு உள்ளது. காரணம், இவை இரண்டும் மிக விரைவாகப் பரவக... மேலும் பார்க்க