விஜய் ஆண்டனி ஏன் செருப்பு அணிவதில்லை?- எமோஷனலாக விளக்கம் அளித்த மனைவி
கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரம்: `இதே எடப்பாடியாராக இருந்திருந்தால்...'- அதிமுக பா.வளர்மதி பேச்சு
தவெக கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் மாவட்ட ஆட்சியருக்கு குறுஞ்செய்தி அனுப்பியதாக வெடித்திருக்கும் விவகாரம், பெரும் சர்ச்சையாகி இருக்கும் நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக மகளிர் அணி சார்பில் அதைக் கண்டித்து கள்ளக்குறிச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அதிமுக மகளிர் அணிச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பா.வளர்மதி,
"கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவருக்கு, இந்த தொகுதியில் இருக்கிற பொறுப்புமிக்க சட்டமன்ற உறுப்பினர் குறுஞ்செய்தி அனுப்பி இருக்கிறார். அந்தக் குறுஞ்செய்தி என்பது ஆபாசமான குறுஞ்செய்தி.

அந்தக் குறுஞ்செய்தி அனுப்பி இருக்கக்கூடிய எம்எல்ஏ இதுவரை தான் அனுப்பியது தவறு என்றும் சொல்லவில்லை பொறுப்பேற்கவும் இல்லை. ஆனால் இதைக் கண்டித்து, தமிழ்நாட்டில் பல அமைப்புகள் கண்டனம் தெரிவித்தார்கள். இதை எல்லாம் தமிழ்நாட்டின் முதலமைச்சர் பார்த்திருப்பார். ஆனால் இதுவரைக்கும் அவர் கண்டிக்கவில்லை.
அவரை மகாபலிபுரத்திற்கு கூப்பிட்டு பட்டு வேட்டி கொடுத்து அனுப்புகிறார். நீ கலெக்டருக்கு மட்டுமில்ல காலேஜ் பொண்ணுங்களுக்கும் குறுஞ்செய்தி அனுப்பு என்று சொல்லி பட்டு வேட்டி கொடுத்து அனுப்புகிறார் முதலமைச்சர்.
எங்கள் அண்ணன் எடப்பாடியாராக இருந்திருந்தால், ஒரு எம்எல்ஏ இப்படி செய்திருந்தால் சவுக்கை எடுத்து, எம்ஜிஆர் நம்ம வீட்டுப் பிள்ளை படத்தில் நம்பியாரை வெளுத்து வாங்குவது போல் வெளுத்து வாங்கியிருப்பார்" என பேசியுள்ளார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb













