செய்திகள் :

கவனம் பெற்ற பாண்டி மெரினா; மேற்கொள்ளப்பட்ட தூய்மைப் பணிகள்... அகற்றப்பட்ட குப்பைகள்!

post image

புதுச்சேரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தவறாமல் செல்லும் இடங்களில் பாண்டி மெரினாவும் ஒன்று. கடற்கரையின் அழகை ரசிக்கவும், மாலை நேரங்களில் குடும்பத்துடன் நேரத்தை செலவிடவும் இங்கு பலரும் வந்து செல்கின்றனர்.

ஆனால், இந்த அழகுக்கு மாறாக, கடற்கரையின் பின்புறப் பகுதியில், பிளாஸ்டிக் பைகள், உணவுக் கழிவுகள் உள்ளிட்ட குப்பைகள் ஆங்காங்கே கிடந்ததால், அந்தப் பகுதியில் சுகாதார சீர்கேடு நிலவியது. அதுமட்டுமன்றி, தொடர்ந்து குப்பைகள் தேங்கினால் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக இருந்த நிலையில், குப்பைகள் நீரில் கலக்காமல் இருக்க தடுப்புகள் இருந்தன. இருப்பினும் அதிகப்படியான குப்பைகள் சுற்றுச்சூழலை மாசுப்படுத்தி வந்தன.

இது குறித்து சமூக வலைதளங்களில் வெளியான தகவல்களைத் தொடர்ந்து, அந்தப் பகுதிக்கு நேரில் சென்று விசாரித்து, ''பாண்டி மெரினா பின்னால் குவியும் குப்பைகள்... மாங்குரோவ் காடுகளை நோக்கி நகரும் கழிவுகள்!'' என்ற தலைப்பில் நம்முடைய விகடன் இணையதளத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

இந்த நிலையில், தற்போது பாண்டி மெரினா பகுதியில் தேங்கியிருந்த குப்பைகள் அகற்றப்பட்டு, தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. முன்பு குப்பைகள் காணப்பட்ட இடங்கள் தற்போது சுத்தமாகக் காட்சியளிக்கின்றன. மீண்டும் மெரினா பழைய பொலிவை பெற தொடங்கியுள்ளது .

குப்பைகள் அகற்றப்பட்டிருப்பது நிச்சயம் வரவேற்க வேண்டிய விஷயம். ஆனால், கடற்கரைப் பகுதிகளில் தூய்மை என்பது ஒருநாள் மட்டும் மேற்கொள்ளப்படும் பணியாக இல்லாமல், தொடர்ந்து கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

குப்பைகள் மீண்டும் அதே இடத்தில் தேங்காமல் இருக்க முறையான கண்காணிப்பு தேவை. அதேபோல், கடற்கரைக்கு வரும் பொதுமக்களும் தாங்கள் கொண்டு வரும் பொருள்களை அங்கேயே விட்டுச் செல்லாமல், குப்பைகளை உரிய இடத்தில் போடுவதும் முக்கியம்.

காட்டு யானையுடன் ஏற்பட்ட மோதல்; மேட்டுப்பாளையம் ’பாகுபலி’ யானை காயம்!

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை பகுதிகளில் ‘பாகுபலி’ என அழைக்கப்படும் ஒற்றை ஆண் காட்டுயானை பிரபலமாக இருந்து வருகிறது. ஆஜானுபாகுவான உடல், நீண்ட தந்தம் காரணமாக பாகுபலி என்ற பெயர் பெற்றுள... மேலும் பார்க்க

Man Eater: சிறுத்தையே சிக்கினாலும்... 20 நாளாகப் போக்கு காட்டும் கூடலூர் ஆட்கொல்லிப் புலி | Photos

ஆட்கொல்லி புலியை தேடும் வனத்துறைஆட்கொல்லி புலியை தேடும் வனத்துறைஆட்கொல்லி புலியை தேடும் வனத்துறைஆட்கொல்லி புலியை தேடும் வனத்துறைஆட்கொல்லி புலியை தேடும் வனத்துறைஆட்கொல்லி புலியை தேடும் வனத்துறைஆட்கொல்ல... மேலும் பார்க்க

நள்ளிரவில் தகரக் கொட்டகையை நொறுக்கிய காட்டு யானை; தப்பியோடி உயிர் பிழைத்த தொழிலாளர்கள்

கோவை பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட துடியலூர் அடுத்த கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் நேற்று நள்ளிரவு 1 மணி அளவில் அடர்ந்த வனப்பகுதியை விட்டு வெளியேறிய ஒற்றை ஆண் காட்டு யானை உணவு தேடி குட... மேலும் பார்க்க

Orangutans: ஒடிசாவில் கைவிடப்பட்ட 5 ஒராங்குட்டான் குட்டிகள்; கடத்தல் கும்பல்களின் கொடூரப் பின்னணி

இரக்கமற்ற கடத்தல் சம்பவங்களில் ஒடிசாவைச் சேர்ந்த வனவிலங்கு கடத்தல் கும்பல்கள் ஈடுபட்டு வருகின்றன. யானை தந்தங்கள், எறும்பு தின்னிகளின் செதில்கள் புலி, சிறுத்தை தோல்கள், அரிய வகை ஆமைகள் மற்றும் ஒடிசாவின... மேலும் பார்க்க

Nepal Flood: நேபாள வெள்ளத்தில் கம்பீரமாக நின்ற ஒரே வீடு; எப்படி தப்பியது?

கடந்த 26-ம் தேதி, நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் பல நூறு பேர் உயிரிழந்துள்ளனர். இன்னும் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் தேடப்பட்டு வருகின்றனர்.இந்த வெள்ளம் மனிதர்களின் உயிர்களை மட்டுமே குறி வைக்கவில்லை. வாக... மேலும் பார்க்க

Man Eater: 130 கண்காணிப்பு கேமிராக்கள், 13 கூண்டுகள்; 11-வது நாளாகப் போக்கு காட்டும் ஆட்கொல்லி புலி

மனித - வனவிலங்கு எதிர்கொள்ளல்கள் அதிகம் நிகழும் நீலகிரி மாவட்டத்தின் கூடலூர் பகுதியில் 2 நபர்களை புலி தாக்கி கொன்றதுடன் அவர்களின் உடல் பாகங்களையும் தின்றுள்ளது. மனிதர்களை வேட்டையாடி பழகிய அந்தப் புலிய... மேலும் பார்க்க