செய்திகள் :

காங்கிரஸ்: "ஆட்சியில் பங்கு; தலைமை தான் முடிவெடுக்கும்!" - காங்கிரஸ் கமிட்டி பார்வையாளர் சாஹிர் சனதி

post image

திருச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகமான அருணாச்சலம் மன்றத்தில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பார்வையாளரும், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவரும், கர்நாடக காங்கிரஸ் கட்சி செயலாளருமான சாஹிர் சனதி, திருச்சி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளை சந்தித்து உரையாடினார்.

அப்போது, அவருடன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில நிர்வாகிகள், எம்.எல்.ஏ கார்த்திக் தங்கபாலு, திருச்சி தெற்கு மாவட்ட தலைவர் கோவிந்தராஜன், தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் கட்சி தலைவர் விச்சு, கள்ளிக்குடி முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் சுந்தரம் மற்றும் நிர்வாகிகள், காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் உடன் இருந்தனர். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர்,

thahir sanathi

"தற்போது முதற்கட்டமாக காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளை சந்தித்து வருகிறேன். தெற்கு மாவட்டத்திற்கு தலைவரை தேர்ந்தெடுக்க வந்திருக்கிறேன். கட்சியில் அனைத்து சமுதாயத்தினருக்கும் பாகுபாடு இன்றி பொறுப்புகள் வழங்கப்படும். மேலும், கட்சியை வளப்படுத்துவதற்கு என்னென்ன முயற்சிகள் செய்ய வேண்டுமோ அவற்றையெல்லாம் ஒவ்வொன்றாக செய்ய இருக்கிறோம்.

பீகார் தேர்தல் தோல்வி குறித்து கேள்வி எழுப்புகிறீர்கள். வாக்கு திருட்டு மூலமாக பா.ஜ.க கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. அதேபோல், தமிழகத்தில் கூட்டணியில் ஆட்சியில் பங்கு குறித்து கேள்வி எழுப்புகிறீர்கள். ஆனால், நான் பொறுப்பாளராக வந்திருப்பதால், இதுகுறித்து தலைமை மேலிடம் தான் கூற வேண்டும்" என்றார்.

திருப்பரங்குன்றம்: ``நீதிமன்ற உத்தரவை இந்து விரோத திமுக அரசு செயல்படுத்த வேண்டும்" - அண்ணாமலை

வருடந்தோறும் கார்த்திகை தீபம் தினத்தன்று திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றப்படும் உச்சிப் பிள்ளையார் கோயிலின் தீபத் தூணில் நேற்று (டிசம்பர் 3) தீபம் ஏற்றப்பட்டது.ஆனால், இந்து தமிழர் கட்சியின் ராம ர... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம்: "நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றாதது ஏன்?" - அமைச்சர் ரகுபதி விளக்கம்!

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்ற வேண்டுமென எழுந்த கோரிக்கையும் அதைத்தொடர்ந்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அளித்த தீர்ப்பும் பேசுபொருளாகியிருக்கிறது. இந்த சூழலில் தமிழ்நாடு அரசு நீத... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம்: ``தேவையில்லாத பதற்றத்தை உண்டாக்க திமுக கபட நாடகம்" - எடப்பாடி பழனிசாமி கண்டனம்

வருடந்தோறும் கார்த்திகை தீபம் தினத்தன்று திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றப்படும் உச்சிப் பிள்ளையார் கோயிலின் தீபத் தூணில் நேற்று (டிசம்பர் 3) தீபம் ஏற்றப்பட்டது.ஆனால், இந்து தமிழர் கட்சியின் ராம ர... மேலும் பார்க்க

'இவர்கள் சிக்கந்தர் தர்காவையே தரைமட்டமாக்கி விடுவார்கள்!' - கொதிக்கும் பெ.சண்முகம் | பேட்டி

திருப்பரங்குன்றத்தில் நேற்று பதட்டமான சூழல் நிலவிய நிலையில், மனுதாரர் கேட்ட இடத்திலேயே தீபம் ஏற்ற மதுரை உயர்நீதிமன்றம் மீண்டும் உத்தரவிட்டுள்ளது. பரபரப்பான இந்த சூழலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிய... மேலும் பார்க்க

Madurai, Coimbatore Metro: நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய தயாநிதி மாறன்!

சென்னையைத் தொடர்ந்து கோவை மற்றும் மதுரை மாநகரங்களில் மெட்ரோ போக்குவரத்து வசதியை அமைக்க தமிழ்நாடு அரசு வகுத்த திட்டத்தை சமீபத்தில் திருப்பி அனுப்பியது மத்திய அரசு. Metro திட்டம் நிராகரிப்பு: மத்திய அரச... மேலும் பார்க்க

திண்டுக்கல்: `கோயில் தீபம் விவகாரம்'- ஒரே சமூகத்தினரிடையே பிரச்னை; 144 தடை உத்தரவு- என்ன நடந்தது?

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டி அருகே உள்ள பெருமாள் கோயில் பட்டியில் வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த இந்து மக்கள் மற்றும் கிறிஸ்துவ மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதியில் மண்டு கருப்பணசாமி கோயில... மேலும் பார்க்க