செய்திகள் :

காதலனை திருமணம் செய்ய `சப் இன்ஸ்பெக்டர்' கெட்டப்பில் சுற்றிய பெண்... போலீஸில் சிக்கியது எப்படி?

post image

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பெண் ஒருவர் சப் இன்ஸ்பெக்டர் எனக்கூறி நகரில் பைக்கில் வலம்வந்தார். அவர் மீது சந்தேகம் அடைந்த போலீஸ் அதிகாரிகள் அவர் குறித்து விசாரிக்கத் தொடங்கினர். அதில் சில இளைஞர்கள் அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வாட்ஸ் அப் ஸ்டேட்டாக வைத்ததுடன், ஃபேஸ்புக்கிலும் பதிவேற்றம் செய்தனர். அந்த போட்டோக்களைப் பார்த்ததும் அவர் போலி என்பதை போலீஸார் கண்டறிந்தனர். இதையடுத்து. சப் இன்ஸ்பெக்டர் சீருடையில் பைக்கில் சுற்றிக்கொண்டிருந்த பெண்ணை பிடித்து விசாரித்தனர். அதில் அவர் பெயர் அபி பிரபா (34) எனவும், தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், "தேனி மாவட்டத்தைச் சேர்ந்த அபி பிரபா(34), ரயில் பயணத்தின்போது நாகர்கோவில் பள்ளிவிளை பகுதியைச் சேர்ந்த சிவா(24) என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் நட்பு காதலாக மலர்ந்துள்ளது.

போலீஸார்

தனக்கு 24 வயது ஆவதாக கூறி 24 வயதான சிவாவை காதலித்து வந்துள்ளார் 34 வயது ஆன அபி பிரபா. இதற்கிடையே தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி சிவாவை வற்புறுத்தியுள்ளார் அபி பிரபா. அதற்கு, அரசு பணியில் இருக்கும் பெண்தான் வேண்டும் என பெற்றோர் வலியுறுத்துவதாக சிவா தெரிவித்ததுடன் ஒரு திட்டமும் வகுத்துக்கொடுத்துள்ளார். அதன் படி, அபி பிரபாவுக்கு போலீஸ் எஸ்.ஐ-க்கான சீருடைகளை தைத்துக்கொடுத்ததுடன் எஸ்.ஐ-யாக நடிக்கும்படி ஐடியா கொடுத்துள்ளார்.

நாகர்கோவிலுக்கு எஸ்.ஐ கெட்டப்பில் வந்த அபி பிரபா பள்ளிவிளை பகுதியில் உள்ளவர்களிடம் தான் சென்னை குற்றப்பிரிவில் சப் இன்ஸ்பெக்டராக இருப்பதாகவும், விரைவில் கன்னியாகுமரி  மாவட்டத்துக்கு பணி மாறுதலாகி வர உள்ளதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து அப்பகுதி இளைஞர்கள் அபி பிரபாவுடன் நின்று செல்ஃபி எடுத்து ஸ்டேட்டஸ் வைத்தனர்.

கைதுசெய்யப்பட்ட போலி எஸ்.ஐ அபி பிரபா

அபி பிரபா போட்டிருந்த யூனிஃபாமில் வலது பக்கம் வைக்க வேண்டிய பெயரை இடது பக்கம் வைத்திருந்தார். ஸ்டார்கள் இடம் மாற்றி வைத்திருந்தார். அவர் தப்புத் தப்பாக யூனிஃபாம் அணிந்திருந்ததை வைத்தே அவர் போலி எஸ்.ஐ என்பதை கண்டறிந்தோம். இப்போது அவரை கைது செய்து விசாரித்து வருகிறோம். எஸ்.ஐ எனக்கூறி பணம் வசூல் செய்துள்ளாரா அல்லது வேறு மோசடிகளில் ஈடுபட்டுள்ளாரா என்பது குறித்து விசாரணை நடத்திவருகிறோம்" என்றனர்.

ஆன்லைனில் லாரன்ஸ் பிஷ்னோய், தாவூத் படங்கள் அச்சிட்ட டி-சர்ட் விற்பனை; வெப்சைட்கள் மீது வழக்கு!

குஜராத் சிறையில் இருக்கும் லாரன்ஸ் பிஷ்னோய் புகைப்படம் அச்சிட்ட டி-சர்ட்கள் சமீபத்தில் ஆன்லைனில் விற்பனை செய்யப்பட்டது. மீஷோ மற்றும் பிளிப்கார்ட் போன்ற இகாமர்ஸ் வெப்சைட்களில் அவை விற்பனை செய்யப்படுவதா... மேலும் பார்க்க

ஆம்பூர்: தலை இல்லாமல் கிடந்த மாடு; மண் திருட்டு குறித்து புகாரளித்ததால் அட்டூழியமா? போலீஸ் விசாரணை

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகேயுள்ள ரெட்டிமாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் யுவராஜ். தற்போது இவர் சென்னையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.ஆம்பூர் அருகேயுள்ள வடபுதுப்பட்டு கிராமத்தி... மேலும் பார்க்க

திருமணத்தை மீறிய உறவு... கணவரை கொலை செய்து நாடகமாடிய மனைவி.. ஆண் நண்பருடன் சிக்கிய பின்னணி!

சென்னை கொளத்தூர் நியூ ரெட்டேரி சந்திப்பு பவானி நகரைச் சேர்ந்தவர் ராஜா பாஸ்கர் (45). இவர் டிப்பர் லாரி டிரைவராக வேலைப்பார்த்து வந்தார். இவரின் மனைவி சித்ரா (43). கடந்த தீபாவளி தினத்தன்று மதுவாங்கிக் கொ... மேலும் பார்க்க

அரக்கோணம்: இரு தரப்பினர் மோதலில் ஒருவர் மரணம்... 2-வது நாள் சாலை மறியலால் பதற்றம்!

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகேயுள்ள பாராஞ்சி கிராமத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் ராபர்ட் என்கிற ராஜ்குமார் (47).இவரின் மனைவி பூங்கொடி, மகன்கள் கார்த்திக், ஆகாஷ். இந்த நிலையில், பூங்கொடிக்கு நேற்... மேலும் பார்க்க

காதலிப்பதாகக் கூறி நர்ஸை கர்ப்பமாக்கி ஏமாற்றிய டாக்டர் கைது..!

சென்னை அண்ணாநகர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் தனியார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் நர்ஸாக வேலை செய்யும் 26 வயதுடைய இளம்பெண் ஒருவர் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்த... மேலும் பார்க்க

சாத்தூர்: பஸ் மீது லோடு ஆட்டோ மோதி விபத்து; கடப்பாக்கல் விழுந்ததில் சிறுவன் பலி!

சாத்தூர் அருகே கடப்பா கல் ஏற்றிச் சென்ற ஆட்டோ, பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானதில் நான்கு வயது சிறுவன் பலியானான். இந்த சோக சம்பவம் குறித்து போலீஸிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், "வ... மேலும் பார்க்க