Budget 2026: இனி 'இதற்கு' வரி இல்லை, குறையும் TCS, புதிய சட்டம் அமல்; வரி அறிவிப...
Budget 2026: தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் - தேர்தல் மாநிலங்களுக்கு அறிவிப்புகள் என்னென்ன?
இந்த ஆண்டு பட்ஜெட்டில் பெரிய அறிவிப்புகள் எதுவும் இல்லை.
2026-ம் ஆண்டு தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய மாநிலங்களுக்கு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்த மாநிலங்களுக்கு என்னென்ன அறிவிப்புகள் வெளியாகி உள்ளன என்பதைப் பார்ப்போம்.

1. தமிழ்நாடு
> 2025-ம் ஆண்டு, அரிய பூமி நிரந்தர காந்தங்கள் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் கீழ், கனிம வளங்கள் மிகுந்த மாநிலங்களான ஒடிசா, கேரளா, ஆந்திர பிரதேசம், தமிழ்நாட்டில் 'அரிய கனிமவள வழித்தடங்கள்' நிறுவப்படும்.
> மேற்குத் தொடர்ச்சி மலைகளில் பொதிகை மலையில் மலைப்பாதைகள் அமைக்கப்படும்.
> தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள பழவேற்காடு ஏரியில் பறவைகளைப் பார்வையிடும் பாதைகள் அமைக்கப்படும்.
> ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட 15 தொல்லியல் பகுதிகளில் கலாசார செழுமையை விளக்கும் வகையில் மையம் உருவாக்கப்படும்.
> ஐதராபாத் - சென்னை, சென்னை - பெங்களூரு இடையே அதிவேக ரயில் பாதைகள் உருவாக்கப்படும்.
2. கேரளா
> கேரளாவில் 'அரிய கனிமவள வழித்தடங்கள்' நிறுவப்படும்.
> அங்கு ஆமைப்பாதை அமைக்கப்படும்.
> தேங்காய் உற்பத்தியில் போட்டித்தன்மையை மேலும் அதிகரிக்க, பல்வேறு தலையீடுகள் மூலம் உற்பத்தியை அதிகரிக்கவும் உற்பத்தித்திறனை அதிகரிக்கவும் 'தேங்காய் ஊக்குவிப்புத் திட்டம்'.
இதன் மூலம் பழைய, காய்க்காத மரங்கள் மாற்றப்படும்.

3. மேற்கு வங்கம்
> மேற்கு வங்காளத்தின் டான்குனியிலிருந்து குஜராத்தின் சூரத் வரை புதிய பிரத்யேக சரக்கு வழித்தடம் அமைக்கப்படும்.
> பூர்வோதயாவின் கீழ், கிழக்கு கடற்கரைத் தொழில்துறை வழித்தடத்தின் கீழ் நன்கு இணைக்கப்பட்ட முனையாக துர்காபூர் அடையாளம் காணப்பட்டுள்ளது.
> வாரணாசி - சிலிகுரி இடையே அதிவேக ரயில் பாதை அமைக்கப்படும்.
4. அசாம்
> புத்த மத சுற்றுலா மேம்பாட்டுக்கான ஒரு திட்டம்.
> அகர் மரங்களின் வளர்ப்பு ஊக்குவிக்கப்படும்.
> தேஜ்பூரில் மனநல நிறுவனம் நிறுவப்படும்.
> பூர்வோதாய திட்டத்தின் கீழ் வளர்ச்சி ஊக்குவிக்கப்படும்.
5. புதுச்சேரி
புதுச்சேரிக்கு எனப் பிரத்யேக அறிவிப்புகள் எதுவும் இடம்பெறவில்லை. ஆனால், பொதுவான திட்டத்தின் கீழ், புதுச்சேரி பலனடையும்.















