செய்திகள் :

"இறுதிக்கட்ட சவால்களைச் சமாளித்து வருகிறோம்" - 'துருவ நட்சத்திரம்' ரிலீஸ் தேதி குறித்து கெளதம் மேனன்

post image

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய 'மின்னலே' திரைப்படம் வெளியாகி இன்றுடன் 25 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது.

கௌதம் மேனனுக்கும் இது சினிமாவில் 25வது ஆண்டு. அதையொட்டி அவர் 'தி இந்து' ஊடகத்திற்குப் பேட்டியளித்திருக்கிறார்.

கெளதம் வாசுதேவ் மேனன், விக்ரம்
கெளதம் வாசுதேவ் மேனன், விக்ரம்

அந்தப் பேட்டியில் அவருடைய கரியரின் பல முக்கியமான விஷயங்கள் குறித்துப் பேசியவர், 'துருவ நட்சத்திரம்' திரைப்படத்தின் ரிலீஸ் குறித்தும் பேசியிருக்கிறார்.

நிதி சிக்கல்கள் போன்றவற்றால் இத்திரைப்படத்தின் ரிலீஸ் நீண்ட நாள்களாகத் தாமதமாகி வருகிறது.

அது குறித்து இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் பேசுகையில், "'துருவ நட்சத்திரம்' படத்தைத் தொடங்கி, அப்படத்தை விக்ரமை வைத்து எடுத்து முடித்தேன்.

தமிழ் சினிமாவில் அதிகமாக கிசுகிசுக்கப்படும் திரைப்படமாகவும் இது இருந்து வருகிறது.

நிதிச் சிக்கல்கள் காரணமாக இத்திரைப்படத்தின் ரிலீஸ் தாமதமானது. ஆனால், இப்போது இறுதிக் கட்ட சவால்களை எதிர்கொண்டு வருகிறோம்.

Gautham Menon
Gautham Menon

அத்தனை பிரச்னைகளைச் சமாளிக்க சில ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்போது கடைசிக் கட்ட சவால்களைச் சமாளித்து வருகிறேன்.

படத்தின் ரிலீஸ் தேதியை அடுத்த இரண்டு வாரங்களுக்குள் அறிவிக்க முடியும் என நம்பிக்கையுடன் இருக்கிறேன்.

வேறு படங்களைச் செய்வதற்கு எனக்கு வாய்ப்புகள் இருந்தன. ஆனால், அவை எனக்கு சுவாரஸ்யமாகத் தெரியவில்லை. இந்தப் படம் வெளியாக வேண்டும் என்பதால், வேறு படங்களை இயக்கவில்லை" எனக் கூறியிருக்கிறார்.

Thalaivar 173: "இவன் தலைவர் படம் பண்றானானு சிலருக்குப் பதற்றம் இருக்கு" - சிபி சக்ரவர்த்தி

அறிமுக இயக்குநர் மதன் இயக்கத்தில் 'டூரிஸ்ட் ஃபேமிலி' படத்தின் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் கதாநாயகனாக நடித்திருக்கும் 'வித் லவ்' திரைப்படம் பிப்ரவரி 6-ம் தேதி திரைக்கு வருகிறது. இப்படத்தில் மலையாள நடிகை ... மேலும் பார்க்க

With Love: "புருஷனாகி ஃபேமஸ் ஆனதுதான் அதிகம்!" - 'Tourist Family' இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் கலகல

அறிமுக இயக்குநர் மதன் இயக்கத்தில் 'டூரிஸ்ட் ஃபேமிலி' படத்தின் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் கதாநாயகனாக நடித்திருக்கும் 'வித் லவ்' திரைப்படம் பிப்ரவரி 6-ம் தேதி திரைக்கு வருகிறது. இப்படத்தில் மலையாள நடிகை ... மேலும் பார்க்க

State Awards: "ஜூரி மெம்பர்ஸ் இந்தப் படங்களை பார்க்கிறாங்களானு தெரில!" - குழந்தை நட்சத்திரம் அஸ்வத்

2016-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரைக்கான தமிழக அரசின் மாநில விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. தமிழக அரசுக்கு, திரைப்பிரபலங்கள் பலரும் நன்றி தெரிவித்து பதிவிட்டு வருகின்றனர். Ashwath Child Artistஇ... மேலும் பார்க்க

"அஜித் என்னிடம் சொன்ன அந்த 6 மாதங்களில் உருவானப் படம்தான் அது!" - ரவி கே சந்திரன் ஷேரிங்க்ஸ்

இந்திய சினிமாவின் சீனியர் ஒளிப்பதிவாளர்களில் முக்கியமானவர் ரவி கே. சந்திரன். 'கண்ணத்தில் முத்தமிட்டாள்', 'ஆய்த எழுத்து', 'தில் ஜாதா ஹை', 'கஜினி (இந்தி ரீமேக்)' உள்ளிட்ட பல ஹிட் படைப்புகளின் ஃபிலிம்களோ... மேலும் பார்க்க

"நான் 'crippling anxiety'-யால் அவதிப்பட்டேன்"- இடைவெளி எடுத்துக்கொண்டது குறித்து ஸ்ருதி ஹாசன்

நடிகை ஸ்ருதி ஹாசன் 'ஆகாசம்லோ ஒக தாரா' என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். துல்கர் சல்மான் ஹீரோவாக நடிக்கிறார். இந்தப் படத்தை சாதினேனி இயக்குகிறார். இந்நிலையில் ஸ்ருதி ஹாசன் சமீபத்தில் நேர்காணல் ... மேலும் பார்க்க

TTT: ``கிடா வெட்டி இந்தப் படம் வெற்றி அடையும் என்று வாழ்த்தினார்கள்" - நெகிழ்ந்து பேசிய நடிகர் ஜீவா!

மலையாளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'பேலிமி' படத்தின் இயக்குநர் நிதிஷ் சகாதேவ் இயக்கத்தில் தமிழில் வெளியான படம்தான், 'தலைவர் தம்பி தலைமையில்'. இப்படத்தில் ஜீவாவுடன் தம்பி ராமையா, இளவரசு, பிரார்த்தனா ... மேலும் பார்க்க