செய்திகள் :

"நான் 'crippling anxiety'-யால் அவதிப்பட்டேன்"- இடைவெளி எடுத்துக்கொண்டது குறித்து ஸ்ருதி ஹாசன்

post image

நடிகை ஸ்ருதி ஹாசன் 'ஆகாசம்லோ ஒக தாரா' என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். துல்கர் சல்மான் ஹீரோவாக நடிக்கிறார். இந்தப் படத்தை சாதினேனி இயக்குகிறார்.

இந்நிலையில் ஸ்ருதி ஹாசன் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டிருக்கிறார்.

'ஆகாசம்லோ ஒக தாரா'
'ஆகாசம்லோ ஒக தாரா'

அந்த நேர்காணலில் 2018-ல் நடிப்​பிலிருந்து சில காலம் இடைவெளி எடுத்​துக் கொண்​டது குறித்து ஸ்ருதி ஹாசன் பகிர்ந்திருக்கிறார்.

"அந்த இடைவெளியில் என்னை நானே மறுமதிப்பீடு செய்துகொண்டேன். சில மனநலப் பிரச்னைகளுக்காக நான் அந்த இடைவெளியை எடுத்துகொண்டேன்.

கடுமை​யானப் பதற்​றத்​தால் அவதிப்​பட்​டேன்!

நான் பல ஆண்​டு​களாகக் கடுமை​யானப் பதற்​றத்​தால் (crippling anxiety)அவதிப்​பட்​டேன்.

அந்த பதற்​றத்​தால் என்னுடைய அன்​றாட வேலைகளை செய்ய முடியவில்லை. நான் எதைத் தேடு​கிறேன், நான் யார் என்​ப​தில் எனக்​குத் தெளி​வில்​லை.

அந்த இடைவெளி​யில், லண்​டனில் இருந்​தேன். அங்கு இசை​யின் மூலம் என்னை நான் மீண்​டும் கண்​டறிந்​தேன்.

ஸ்ருதி ஹாசன்
ஸ்ருதி ஹாசன்

என்னை நானே மீட்டெடுத்தேன்...

தின​மும் என் உடைகளை நானே துவைப்​பது, எனக்​கான உணவை நானே சமைப்​பது, மெட்ரோ ரயி​லில் பயணிப்​பது, திரும்பி வந்து புதி​தாக எழுதப் பயிற்சி செய்​வது, புதிய புதிய இசைகளை உருவாக்குவது என என்னை நானே மீட்டெடுத்தேன்.

எப்​போதும் ஒரு கலைஞ​ராக இருப்​பதையே நான் மிக​வும் விரும்​பு​கிறேன். அது எனக்கு மகிழ்ச்சியைத் தரு​கிறது.

வழக்​க​மான கதா​பாத்​திரங்​களை விடுத்து சவாலான வேடங்​களில் நடிக்​க​வும் ஆர்​வ​மாக இருக்​கிறேன்" என்று தெரிவித்திருக்கிறார்.

"அஜித் என்னிடம் சொன்ன அந்த 6 மாதங்களில் உருவானப் படம்தான் அது!" - ரவி கே சந்திரன் ஷேரிங்க்ஸ்

இந்திய சினிமாவின் சீனியர் ஒளிப்பதிவாளர்களில் முக்கியமானவர் ரவி கே. சந்திரன். 'கண்ணத்தில் முத்தமிட்டாள்', 'ஆய்த எழுத்து', 'தில் ஜாதா ஹை', 'கஜினி (இந்தி ரீமேக்)' உள்ளிட்ட பல ஹிட் படைப்புகளின் ஃபிலிம்களோ... மேலும் பார்க்க

TTT: ``கிடா வெட்டி இந்தப் படம் வெற்றி அடையும் என்று வாழ்த்தினார்கள்" - நெகிழ்ந்து பேசிய நடிகர் ஜீவா!

மலையாளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'பேலிமி' படத்தின் இயக்குநர் நிதிஷ் சகாதேவ் இயக்கத்தில் தமிழில் வெளியான படம்தான், 'தலைவர் தம்பி தலைமையில்'. இப்படத்தில் ஜீவாவுடன் தம்பி ராமையா, இளவரசு, பிரார்த்தனா ... மேலும் பார்க்க

TTT: ``ஜீவா ஹீரோவா? அவனுக்குப் படம் ஓடாது என்பார் சௌத்ரி" - நடிகர் இளவரசு ஓப்பன் டாக்!

மலையாளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'பேலிமி' படத்தின் இயக்குநர் நிதிஷ் சகாதேவ் இயக்கத்தில் தமிழில் வெளியான படம்தான், 'தலைவர் தம்பி தலைமையில்'. இப்படத்தில் ஜீவாவுடன் தம்பி ராமையா, இளவரசு, பிரார்த்தனா ... மேலும் பார்க்க

TTT: ``படத்தின் ரிலீஸ் தேதியை மும்பையிலோ, அமெரிக்காவிலோ முடிவு செய்யும் சூழல்!" - ஆர்.கே செல்வமணி!

மலையாளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'பேலிமி' படத்தின் இயக்குநர் நிதிஷ் சகாதேவ் இயக்கத்தில் தமிழில் உருவாகியிருக்கும் படம்தான், 'தலைவர் தம்பி தலைமையில்'. இப்படத்தில் ஜீவாவுடன் தம்பி ராமையா, இளவரசு, பி... மேலும் பார்க்க

TTT: ``என்னைதான் எல்லாரும் தலைவர் தம்பினு சொல்வாங்க.!" - வெற்றி விழாவில் சீமான்

மலையாளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'பேலிமி' படத்தின் இயக்குநர் நிதிஷ் சகாதேவ் இயக்கத்தில் தமிழில் வெளியான படம்தான், 'தலைவர் தம்பி தலைமையில்'. இப்படத்தில் ஜீவாவுடன் தம்பி ராமையா, இளவரசு, பிரார்த்தனா ... மேலும் பார்க்க