விஜய்யின் வேலூர் விசிட்; 25,000 பேர் திரளும் இடம் தேர்வு - தவெக சொல்வதென்ன?
திருமாவளவன் பேச்சுக்கு வலுக்கும் கண்டனங்கள்; தமிழ் மன்னர்கள் தொடர்பாக அவர் பேசியது என்ன?!
தமிழ் மன்னர்கள் தொடர்பாக வி.சி.க தலைவர் திருமாவளவன் பேசியது, சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது.
திருமாவளவனின் பேச்சுக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை, அமமுக தலைவர் டி.டி.வி.தினகரன் உள்ளிட்டவர்கள் கண்டனம் தெரிவித்திருக்கின்றனர்.
திருமாவளவன் தமிழ் மன்னர்கள் தொடர்பாக என்ன பேசினார்?
ஈழத்தமிழர்களுக்காகப் போராடி தன்னுயிர் நீத்த முத்துக்குமார் நினைவு தினக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய திருமாவளவன், "எனக்கு எந்த அரசன் மீதும் மதிப்பு கிடையாது. யாரையும் பெரிய சக்தியாகப் பார்க்கவில்லை.
அந்த மன்னர்கள் காலத்தில்தான் இந்த நாடு குட்டிச்சுவர் ஆனது. சம்ஸ்கிருத மயமானது, இந்துத்துவமயமானது.
ராஜ ராஜன் என்பது தமிழ் பெயரா?
கோயிலின் கருவறைக்குள்ளே இருந்த தமிழ் தூக்கி வெளியே வீசப்பட்டதெல்லாம் இந்த பாண்டிய மன்னர்கள், சோழ மன்னர்கள், சேர மன்னர்கள் காலத்தில்தான்.
வேள்வி நடத்தியவன் யாகம் நடத்தியவன் எல்லாம், தமிழ் பெயர்களை மாற்றி வடமொழிப் பெயர்களை தங்கள் பெயருக்குப் பின்னால் சூட்டிக்கொண்டார்கள். ராஜ ராஜன் என்பது தமிழ் பெயரா? ராஜேந்திரன் என்பது தமிழ் பெயரா? எல்லாம் வடமொழியிலேயே மயங்கிக் கிடந்தவர்கள்.
கலாசாரம் அழிவதற்கும் வழிவகுத்தவர்கள்
பார்ப்பனர்களின் வேள்வி, யாகங்களில் மயங்கிக் கிடந்தவர்கள். அவர்கள் எப்பேர்ப்பட்ட மன்னாதி மன்னர்களாக இருந்தாலும், என் தமிழ் அழிவதற்கும், கலாசாரம் அழிவதற்கும் வழிவகுத்தவர்கள்.
அதனால் ஆண்ட பரம்பரை என்று சொல்வதில் எந்த பெருமையும் இல்லை. உடன்பாடும் இல்லை" என்று விமர்சித்திருந்தார்.














