செய்திகள் :

'நாட் ரீச்சபிளில் இருப்பவர்கள் பற்றி கேட்காதீங்க' - விஜய் குறித்து செந்தில் பாலாஜி விமர்சனம்

post image

கோவை மாவட்டம், சிங்காநல்லூர் தொகுதியில் திமுக தேர்தல் அலுவலகம் ஏற்கனவே திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பொள்ளாச்சி மற்றும் தொண்டாமுத்தூர் தொகுதிகளில் இன்று தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சரும், திமுக மேற்கு மண்டல பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “சட்டமன்றத் தேர்தலில் கோவை மாவட்டத்தில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவதற்கு அனைத்து நிர்வாகிகளும் ஒன்றிணைந்து செயல்பட ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

 திமுக – காங்கிரஸ் கூட்டணியில் குழப்பம் ஏற்படும் என்று சிலர் நினைக்கிறார்கள். அந்த சிலரது ஆசைகள், எண்ணங்களை என்னிடம் கேள்வியாக கேட்கிறீர்கள். அவர்களின் ஆசைகளும், எண்ணங்களும் ஒருபோதும் நிறைவேறாது. திமுக - காங்கிரஸ் கூட்டணி மிகவும் உறுதியாக உள்ளது. 2021 தேர்தலில் எப்படி எங்களை தமிழக மக்கள் வெற்றி பெற வைத்தார்களோ, அதேபோல 2026 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் மகத்தான வெற்றியை தருவதற்கு வாக்காளர்கள் தயாராக உள்ளார்கள். நாங்கள் தேர்தல் பணியை தொடங்கி விட்டோம்.

ஊடகத்தினர் யாரும் தவெகவிடம் எந்த கேள்வியும் கேட்பதில்லை. செய்தி வேண்டும் என்பதற்காக ஊடகங்கள் ஒரு புறம் மட்டுமே கேள்வியை கேட்கிறார்கள். இருபுறமும் கேள்வியை கேட்டீர்கள் என்றால் அந்த கேள்வி நியாயமானதாக இருக்கும். சந்திக்கவே  முடியாமல் எல்லைக்கு அப்பாற்பட்டு நாட் ரீச்சபிளில் இருப்பவர்களை பற்றி கேள்வி கேட்டு எங்கள் நேரத்தை வீணடிக்க வேண்டாம். வருகிற சட்டமன்ற தேர்தலில் கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும்” என்றார்.

விஜய்யின் வேலூர் விசிட்; 25,000 பேர் திரளும் இடம் தேர்வு - தவெக சொல்வதென்ன?

வேலூரில், பிப்ரவரி 8-ம் தேதி த.வெ.க தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்புக் கூட்டம் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, வேலூர் அடுத்துள்ள அகரம்சேரியில் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையையொட்டி, பிரமாண்டமான வெ... மேலும் பார்க்க

திருமாவளவன் பேச்சுக்கு வலுக்கும் கண்டனங்கள்; தமிழ் மன்னர்கள் தொடர்பாக அவர் பேசியது என்ன?!

தமிழ் மன்னர்கள் தொடர்பாக வி.சி.க தலைவர் திருமாவளவன் பேசியது, சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது. திருமாவளவனின் பேச்சுக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை, அமமுக தலைவர் டி.ட... மேலும் பார்க்க

நாஞ்சிக்கோட்டை: பூட்டியே கிடக்கும் பொதுக் கழிவறை; அவதியுறும் மக்கள்- நடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி?

தஞ்சாவூர் மாவட்டம், நாஞ்சிக்கோட்டை சாலை முனியாண்டவர் காலனியில் உள்ள கழிவறை பயன்பாடு இன்றி பூட்டியே கிடப்பதால், அப்பகுதி மக்கள் தொடர்ந்து அவதியுற்று வருகின்றனர்.இது குறித்து நம்மிடம் பேசிய அந்த ஊர் மக்... மேலும் பார்க்க

திமுக - காங்கிரஸ் பஞ்சாயாத்து; அனல் தகிக்கும் மதுரை வடக்குத் தொகுதி - என்னதான் நடக்கிறது அங்கே?

திமுக, காங்கிரஸ் இடையேயான உறவில் ஏற்கெனவே புகைச்சல் ஏற்பட்டிருக்கிறது. இருதரப்பினரும் மாறி மாறி வசைபாடிக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், ஒரு கூட்டத்தில் எம்.எல்.ஏ கோ.தளபதி காங்கிரஸின் மாணிக்கம் தாகூ... மேலும் பார்க்க

`நீங்கள் வரத்தான் போகிறீர்கள்' - ப.சிதம்பரத்திடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் சூசகம்!

பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிவகங்கை மாவட்டத்திற்கு வந்திருந்தார். நலதிட்ட உதவிகளை தொடங்கி வைத்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் த... மேலும் பார்க்க