செய்திகள் :

`கருணாநிதியும், ஸ்டாலினும் தமிழ் பெயர்களா?' - திருமாவளவன் பேச்சுக்கு நயினார், டிடிவி கண்டனம்!

post image

விசிக தலைவர் தொல்.திருமாவளவன், ஈழத்தமிழர்களுக்காகப் போராடி தன்னுயிர் நீத்த முத்துக்குமார் நினைவு தினக்கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தார்.

ராஜ ராஜன் என்பது தமிழ் பெயரா?

அந்தக் கூட்டத்தில் பேசிய அவர், "எனக்கு எந்த அரசன் மீதும் மதிப்பு கிடையாது. யாரையும் பெரிய சக்தியாகப் பார்க்கவில்லை. அந்த மன்னர்கள் காலத்தில்தான் நாடு குட்டிச்சுவர் ஆனது. சம்ஸ்கிருத மயமானது. கோயிலின் கருவறைக்குள் இருந்த தமிழ் தூக்கி எறியப்பட்டது.

 தொல். திருமாவளவன்
தொல். திருமாவளவன்

ராஜ ராஜன் என்பது தமிழ் பெயரா? ராஜேந்திரன் என்பது தமிழ் பெயரா? எல்லாம் வடமொழியிலேயே மயங்கிக் கிடந்தவர்கள்.

பார்ப்பனர்களின் வேள்வி, யாகங்களில் மயங்கிக் கிடந்தவர்கள். அவர்கள் எப்பேர்ப்பட்ட மன்னாதி மன்னர்களாக இருந்தாலும், என் தமிழ் அழிவதற்கும், கலாசாரம் அழிவதற்கும் வழிவகுத்தவர்கள்.

அதனால் ஆண்ட பரம்பரை என்று சொல்வதில் எந்த பெருமையும் இல்லை. உடன்பாடும் இல்லை" என்று விமர்சித்துப் பேசியிருந்தார். இது சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது.

மிகுந்த கண்டனத்திற்குரியது!- நயினார் நாகேந்திரன்

தொல்.திருமாவளவனின் இந்தப் பேச்சுக்கு எதிராக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருந்தார்.

"தமிழ் அழிவதற்கும் தமிழ்க் கலாச்சாரம் அழிவதற்கும் சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்கள் காரணமானவர்கள் என விசிக தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திரு. தொல். திருமாவளவன், அவர்கள் கொச்சையாகப் பேசியிருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது.

கடல் கடந்து சென்று ஸ்ரீவிஜயத்தையும் கங்கையையும் தமிழரின் ஆளுகையின் கீழ் கொண்டு வந்து தமிழ்க் கலாச்சாரத்தை நிலைநாட்டிய தமிழ் மன்னர்களைத் தமிழர்களுக்கு எதிரானவர்கள் போல சித்தரிப்பதை என்றும் தமிழகம் ஏற்றுக் கொள்ளாது.

நயினார் நாகேந்திரன்
நயினார் நாகேந்திரன்

யார் தமிழின விரோதிகள் என்று தெரியவில்லையா ?

ஒருபுறம் சோழப் பேரரசர் இராஜராஜனுக்கும், மாமன்னர் இராஜேந்திரனுக்கும் நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திரமோடி அவர்கள் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு சிலையெழுப்பி, அவர்களது புகழை மேன்மேலும் பரவச் செய்கிறது.

மறுபுறம் இண்டி கூட்டணியினரோ அம்மாமன்னர்களைத் தமிழின எதிரிகளைப் போல சித்தரிக்கின்றனர். இதிலிருந்தே தெரியவில்லையா, யார் தமிழின விரோதிகள் என்று?

தேர்தல் சீட்டு கணக்குகளுக்காகச் சேரக்கூடாத இடம் சென்று சேர்ந்து, தான் கெடுவதோடு நில்லாமல், பழம்பெருமைமிக்க மன்னர்களின் புகழையும் கெடுத்து அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கும் கொடிய முயற்சியை சகோதரர் திரு. திருமாவளவன் அவர்கள் இத்தோடு நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" என்று கண்டனம் தெரிவித்திருந்தார்.

தமிழ் நில மன்னர்கள் தான் காரணமா?

இந்நிலையில் தற்போது அமமுக தலைவர் டிடிவி தினகரனும் திருமாவளவனுக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

அவர் வெளியிட்டிற்கும் பதிவில், " தமிழும், தமிழ் கலாச்சாரமும் அழிய தமிழ் நில மன்னர்கள் தான் காரணமா? – விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திரு தொல்.திருமாவளவன் அவர்களின் பேச்சு கடும் கண்டனத்திற்குரியது. தமிழ் அழிவதற்கும், தமிழ் கலாச்சாரம் அழிவதற்கும் வழிவகுத்தவர்கள் சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்கள் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் சகோதரர் திரு தொல்.திருமாவளவன் அவர்கள் பேசியிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் வருத்தமளிக்கிறது.

தமிழர்களின் பாரம்பரியத்தையும், பண்பாட்டுக் கலாச்சாரத்தையும் போற்றிப் பாதுகாத்து, வீரத்தின் விளைநிலமாக தமிழகத்தை மாற்றி இன்றளவும் தெய்வங்களுக்கு இணையாகப் போற்றப்படும் தமிழ்நில மன்னர்கள் குறித்த திரு.தொல்.திருமாவளவன் அவர்களின் அரைவேக்காட்டுத்தனமான பேச்சு கடும் கண்டனத்திற்குரியது.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் டிடிவி தினகரன்
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் டிடிவி தினகரன்

கருணாநிதியும், ஸ்டாலினும் தமிழ் பெயர்களா?

ராஜராஜன் தமிழ்ப் பெயரா? ராஜேந்திரன் தமிழ்ப் பெயரா? என பொதுவெளியில் கேள்வி எழுப்பும் திரு தொல்.திருமாவளவன் அவர்கள், முன்னாள் முதலமைச்சர் திரு.கருணாநிதி மற்றும் தற்போதைய முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் ஆகியோரின் பெயர்கள் தமிழ்ப்பெயரா? என கேட்கும் தைரியமும், துணிச்சலும் இருக்கிறதா? என்ற கேள்வி தமிழர்கள் அனைவரின் மத்தியிலும் இந்நேரத்தில் எழுந்திருக்கிறது.

எனவே, திமுகவையும், அதன் தலைவர்களையும் திருப்திப்படுத்துவதற்காக வரலாற்றுச் சிறப்புமிக்க தமிழ்நில மன்னர்கள் மீது அவதூறுகளை அள்ளிவீசுவதை இதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திரு தொல்.திருமாவளவன் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்" என்று கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

`நீங்கள் வரத்தான் போகிறீர்கள்' - ப.சிதம்பரத்திடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் சூசகம்!

பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிவகங்கை மாவட்டத்திற்கு வந்திருந்தார். நலதிட்ட உதவிகளை தொடங்கி வைத்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் த... மேலும் பார்க்க

Union Budget 2026: 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஞாயிறுக்கிழமையில்.! - 9வது முறையாக தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன் |Live

27 ஆண்டுகளுக்குப் பிறகு!27 ஆண்டுகளுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமையில் தாக்கல் செய்யப்படும் முதல் மத்திய பட்ஜெட்டாக இது உள்ளது.. இதற்கு முன்னதாக 1999-ம் ஆண்டு யஷ்வந்த் சின்கா பட்ஜெட் தாக்கல் செய்திருந்த ... மேலும் பார்க்க

`விசுவாசத்தின் விலை துரோகமா?' - ஜி ஜின்பிங்கின் 'நிழல்' ஜாங் யூக்ஸியா வீழ்ந்தது எப்படி?

வரலாற்றின் பக்கங்கள் எப்போதுமே அதிகாரத்தின் உச்சியில் இருப்பவர்களை போலவே, அந்த உச்சியிலிருந்து கீழே தள்ளப்பட்டவர்களை பற்றியும் அதிகம் பேசுகின்றன. எந்த ஒரு பேரரசின் வீழ்ச்சியும் அதன் அடித்தளத்திலிருந்த... மேலும் பார்க்க

நெல்லை: `எங்களை கொல்லப் பார்க்கிறார்கள்'- அரசின் காலை உணவை குப்பையில் கொட்டிய தூய்மைப் பணியாளர்கள்!

தமிழகத்தில் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்குக் காலை உணவு வழங்கவதற்கு சமீபத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்படி நெல்லை மாநகராட்சியிலும் கடந்த ஒரு மாதமாக தூய்மைப் பணியாளர்களுக்கு காலை உண... மேலும் பார்க்க

MSME: US வரியால் பெரும் பாதிப்பு; வேறு சந்தைகளை தேட 'இந்த' அறிவிப்புகள் வேண்டும்|மத்திய பட்ஜெட் 2026

இந்தியப் பொருளாதாரத்தில் மிக முக்கிய பங்காற்றும் துறைகளில் ஒன்று - சிறு, குறு, நடுத்தரத் தொழில்துறை. இந்தத் துறைக்கான அறிவிப்பு எதிர்பார்ப்புகள் என்ன என்பதை விளக்குகிறார் See Change நிறுவனத்தின் தலைவர... மேலும் பார்க்க