செய்திகள் :

நெல்லை: `எங்களை கொல்லப் பார்க்கிறார்கள்'- அரசின் காலை உணவை குப்பையில் கொட்டிய தூய்மைப் பணியாளர்கள்!

post image

தமிழகத்தில் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்குக் காலை உணவு வழங்கவதற்கு சமீபத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்படி நெல்லை மாநகராட்சியிலும் கடந்த ஒரு மாதமாக தூய்மைப் பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. நெல்லை மாநகராட்சியில் உள்ள 4 மண்டலங்களிலும் 750 தூய்மைப் பணியாளர்களுக்குக் காலை நேரத்தில் உப்புமா, இட்லி, பொங்கல் வழங்கப்படுகிறது. இந்த திட்டம் தொடங்கிய சில நாள்கள் மட்டும் உணவு தரம் நன்றாக இருந்தாதகவும், அதன் பிறகு வழங்கப்படும் உணவு சாப்பிட முடியாத நிலையில் இருந்து வருவதாகவும் தூய்மைப் பணியாளர்கள் புகார் தெரிவித்து வந்தனர். 

காலை உணவாக வழங்கப்பட்ட பொங்கல்

இந்த நிலையில் நெல்லை மாநகராட்சி தச்சநல்லூர் மண்டல பகுதியில் தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட காலை உணவு தரமற்றதாக இருந்ததாகக் கூறி, அதனை பணியாளர்கள் சாப்பிடாமல் குப்பைத் தொட்டியில் வீசினார்கள். இதே போல் சில நாள்களாகச் சாப்பிட முடியாமல் உணவை குப்பைத் தொட்டியில் போடுவதாகக் கூறினார்கள். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இது குறித்து தூய்மைப் பணியாளர்கள் கூறுகையில், "இந்தக் காலை உணவு திட்டம் தொடங்கிய 10 நாள்கள் மட்டுமே உணவு தரமாகவும், சுவையாகவும் இருந்தது. ஆனால், நாள்கள் செல்லச் செல்ல தரம் இல்லை. இட்லி கல் போலவும், சாம்பார் தண்ணீர் போலவும் இருக்கிறது, உப்புமா மற்றும் பொங்கலில் தண்ணீர் அதிகமாக உள்ளது. உப்புமாவா பொங்கலா எனத் தெரியவில்லை. இதைச் சாப்பிட்டு எங்களில் பலருக்கும் வயிற்றுப் போக்கு ஏற்பட்டுள்ளது. எங்களை கொல்லப் பார்க்கிறார்கள். இதுகுறித்து மாநகராட்சியில் புகார் செய்தால், `உணவு தருவது மாநகராட்சி நிர்வாகத்தின் கடமை.

தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்

அதைச் சாப்ப்பிடுவதும் வீணடிப்பதும் உங்களது விருப்பம்' என அலட்சியமாகப் பேசுகிறார்கள் அதிகாரிகள். சம்பளம் கூடுதலாகக் கேட்டு போராட்டம் நடத்தியதற்கு காலை உணவு தருகிறோம் என்கிறது அரசு. ஒரு நாளுக்கு வழங்கப்படும் ரூ.540 ஊதியத்தை ரூ.800 வரை உயர்த்தி வழங்க வேண்டும். காலை உணவுக்காக ஒதுக்கப்படும் தொகையை சம்பளத்துடன் சேர்த்து வழங்கிட வேண்டும்" என்றனர்.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில் விசாரித்தோம், “தூய்மைப் பணியாளர்கள் கூறும் புகார் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.  

Union Budget 2026: 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஞாயிறுக்கிழமையில்.! - 9வது முறையாக தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன் |Live

27 ஆண்டுகளுக்குப் பிறகு!27 ஆண்டுகளுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமையில் தாக்கல் செய்யப்படும் முதல் மத்திய பட்ஜெட்டாக இது உள்ளது.. இதற்கு முன்னதாக 1999-ம் ஆண்டு யஷ்வந்த் சின்கா பட்ஜெட் தாக்கல் செய்திருந்த ... மேலும் பார்க்க

`விசுவாசத்தின் விலை துரோகமா?' - ஜி ஜின்பிங்கின் 'நிழல்' ஜாங் யூக்ஸியா வீழ்ந்தது எப்படி?

வரலாற்றின் பக்கங்கள் எப்போதுமே அதிகாரத்தின் உச்சியில் இருப்பவர்களை போலவே, அந்த உச்சியிலிருந்து கீழே தள்ளப்பட்டவர்களை பற்றியும் அதிகம் பேசுகின்றன. எந்த ஒரு பேரரசின் வீழ்ச்சியும் அதன் அடித்தளத்திலிருந்த... மேலும் பார்க்க

MSME: US வரியால் பெரும் பாதிப்பு; வேறு சந்தைகளை தேட 'இந்த' அறிவிப்புகள் வேண்டும்|மத்திய பட்ஜெட் 2026

இந்தியப் பொருளாதாரத்தில் மிக முக்கிய பங்காற்றும் துறைகளில் ஒன்று - சிறு, குறு, நடுத்தரத் தொழில்துறை. இந்தத் துறைக்கான அறிவிப்பு எதிர்பார்ப்புகள் என்ன என்பதை விளக்குகிறார் See Change நிறுவனத்தின் தலைவர... மேலும் பார்க்க

"மொழி டாக்ஸிக் ஆக மாறக்கூடாது; எங்கள் மீது எதையும் திணிக்காதீர்கள்.!"- கமல்ஹாசன்

நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் NDTV நடத்திய தமிழ்நாடு கருத்தரங்கம் நிகழ்ச்சியில் நேற்று (ஜன.30) கலந்துகொண்டிருக்கிறார். இந்த கருத்தரங்கில் மொழி குறித்து பேசிய அவர், " அன்பு ஒரு ப... மேலும் பார்க்க

`அவர்களுக்கு உரிமை இருக்கிறது; சுனேத்ரா துணை முதல்வராவது பற்றி எனக்கு தெரியாது'- சரத் பவார்

மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் தனது சொந்த ஊரான பாராமதியில் நடந்த விமான விபத்தில் கடந்த சில நாள்களுக்கு முன்பு மரணம் அடைந்தார். அவரது மரணத்தைத் தொடர்ந்து அஜித் பவார் தலைமை வகித்த தேசியவாத காங்கி... மேலும் பார்க்க

2001: தேர்தலில் போட்டியிடாமல் முதல்வர்; `கிங் மேக்கர்' TTV; OPS எனும் நான்.! | அரசியல் ஆடுபுலி 03

2001அரசியல் ஆடுபுலி 03விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டத்தின் அக்கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் பேசும்போது, ``நான்கு தொகுதிகளில் விஜய் போட்டியிடுவார்" என்றார். அதெப்படி நான்கு தொகுத... மேலும் பார்க்க