Dindigul மாவட்ட தொகுதிகள்: பழனி, வேடசந்தூர், நிலக்கோட்டையில் யார் யார் போட்டி? |...
Union Budget 2026: 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஞாயிறுக்கிழமையில்.! - 9வது முறையாக தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன் |Live
27 ஆண்டுகளுக்குப் பிறகு!
27 ஆண்டுகளுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமையில் தாக்கல் செய்யப்படும் முதல் மத்திய பட்ஜெட்டாக இது உள்ளது.. இதற்கு முன்னதாக 1999-ம் ஆண்டு யஷ்வந்த் சின்கா பட்ஜெட் தாக்கல் செய்திருந்த நிலையில், நாளை (பிப்.1) 2026-27ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார்.
நாளை 'மத்திய பட்ஜெட் 2026'
நாளை (பிப்ரவரி 1, 2026) மத்திய பட்ஜெட் தினம்.
மத்திய பட்ஜெட்டை இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒன்பதாவது முறையாகத் தாக்கல் செய்கிறார்.
கடந்த ஆண்டு, புதிய வருமான வரிச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அது வருகிற ஏப்ரல் 1-ம் தேதியில் இருந்து அமலுக்கு வருகிறது. அதனால், இந்த ஆண்டின் பட்ஜெட் இன்னமும் முக்கியத்துவம் பெறுகிறது.

அமெரிக்கா இந்தியா மீது விதித்துள்ள 50 சதவிகித வரி... தற்போது கையெழுத்தாகி உள்ள இந்தியா - ஐரோப்ப ஒன்றிய ஒப்பந்தம்... உலக அளவில் நிலவும் நிலையற்ற தன்மை போன்றவை நிகழ்ந்துகொண்டிருக்கும் இந்த வேளையில் இதை சமாளிக்கும் வகையிலும்... இந்தியப் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும் என்னென்ன அறிவிப்புகள் இடம்பெறும் என்கிற எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.
விவசாயம், ஏ.ஐ, மூத்த குடிமக்களின் நலன், வருமான வரி போன்றவற்றில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாளை பட்ஜெட் தாக்கல் சுமார் 11 மணி அளவில் தொடங்கும்.!












