Union Budget 2026: 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஞாயிறுக்கிழமையில்.! - 9வது முறையாக தா...
VIT பல்கலைக்கழகம் முன்னெடுக்கும் உழவர் சங்கமம் 2026: மண்ணோடு அறிவு இணையும் விவசாயிகளுக்கான திருவிழா
விவசாயத்தில் புதிய தொழில்நுட்பம், இயற்கை முறைகள், மதிப்பு கூட்டிய தயாரிப்புகள், அரசு திட்டங்கள், சந்தை வாய்ப்புகள் - இவை அனைத்தையும் ஒரே இடத்தில் அறிந்து கொள்ளும் ஒரு அரிய வாய்ப்பு 'உழவர் சங்கமம் – 2026'.
இந்த மாபெரும் வேளாண் முயற்சியை, VIT பல்கலைக்கழகம் முன்னெடுத்து நடத்துகிறது. விவசாய அறிவை அனைவருக்கும் கொண்டு செல்லும் நோக்கில், அனைவருக்கும் அனுமதி இலவசம். பாரம்பரிய விவசாயத்தின் அனுபவமும், நவீன வேளாண் தொழில்நுட்பத்தின் முன்னேற்றமும் ஒரே மேடையில் சந்திக்கும் இந்த அறிவுத் திருவிழா:
இடம்: VIT பல்கலைக்கழக வளாகம், வேலூர்
தேதி: பிப்ரவரி 5 & 6, 2026
நேரம்: காலை 9.00 - மாலை 5.00

என்ன கற்றுக்கொள்ளலாம்?
உழவர்களுக்கான கருத்தரங்கம் மற்றும் வேளாண் கண்காட்சி என இரட்டை பயனுடன் நடைபெறும் இந்த நிகழ்வில்,
* புதிய பயிர் ரகங்கள்
* நீர் மேலாண்மை முறைகள்
* உயிர் உரங்கள் & இயற்கை விவசாயம்
* ட்ரோன் விவசாயம்
* நவீன வேளாண் இயந்திரங்கள்
போன்ற பல்வேறு தொழில்நுட்பங்களையும் நடைமுறை அனுபவங்களையும் நேரடியாக அறிந்துகொள்ளலாம்.

யாருக்கெல்லாம் பயன்?
இந்த உழவர் சங்கமத்தில்,
* விவசாயிகள்
* விவசாய மாணவர்கள்
* ஆராய்ச்சி நிறுவனங்கள்
* தோட்டக்கலை, கால்நடை, விதை துறைகள்
* தனியார் வேளாண் தொழில்நுட்ப நிறுவனங்கள்
* வேளாண் தொழில்முனைவோர்
என விவசாயம் தொடர்புடைய அனைவரும் கலந்து கொண்டு அறிவும் தெளிவும் பெறலாம்.

கண்காட்சியின் முக்கிய அம்சங்கள் :
* பாரம்பரிய விதைகள் & புதிய பயிர் வகைகள்
* நீர் மேலாண்மை தொழில்நுட்பங்கள்
* மண் & நீர் வள பாதுகாப்பு
* உயிர் உரங்கள்
* கால்நடை & கோழி வளர்ப்பு
* ஒருங்கிணைந்த பண்ணை முறை
* மதிப்பு கூட்டிய விவசாய தயாரிப்புகள்
* விவசாய கடன் & காப்பீடு தகவல்கள்
*விதை சான்றிதழ்
* மகளிர் சுய உதவி குழுக்கள்
* விவசாய வணிகம் & வர்த்தகம்
* ட்ரோன் தொழில்நுட்பம்
* காடு வளர்ப்பு & மரக்கன்றுகள்
* இயற்கை & அங்கீகரிக்கப்பட்ட விவசாய முறைகள்
* மலைப் பயிர்கள் & தோட்டக்கலை
* தேன், காளான் வளர்ப்பு போன்ற கூடுதல் வருமான வாய்ப்புகள்
* விவசாய உற்பத்தியாளர் நிறுவனங்கள்
* அரசின் விவசாயத் திட்டங்கள்
உள்ளிட்ட பல விவரங்களை அறிந்து கொள்ளலாம். அறிவை வளர்த்து, வருமானத்தை பெருக்க உழவர் சங்கமம் – 2026 , வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கத்தை தவறவிடாதீர்கள். கலந்து கொண்டு வளர்ந்து முன்னேறுங்கள்!















