செய்திகள் :

காதல் விவகாரத்தில் சிறுமியின் தாயார் வெட்டிக் கொலை: அப்பா, அண்ணன் படுகாயம்; இளைஞர் வெறிச்செயல்!

post image

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள முதலூரைச் சேர்ந்தவர் முத்துக்கிருஷ்ணன். இவரது மனைவி மேரி விஜிலா. இவர்களுக்கு இரண்டு மகள்களும், பிளஸெட் ராஜா என்ற மகனும் உள்ளனர். முத்துக்கிருஷ்ணனின் மூத்த மகள் அருகிலுள்ள ஆனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த புரோட்டா மாஸ்டரான ஞானப்பிரகாஷ் என்பவரைக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்தக் காதல் விவகாரம் அச்சிறுமியின் குடும்பத்தினருக்குத் தெரியவந்ததைத் தொடர்ந்து, அவர்கள் கண்டித்துள்ளனர். இதனால் அச்சிறுமி ஞானப்பிரகாஷிடம் பேசுவதை தவிர்த்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த ஞானப்பிரகாஷ், நேற்று நள்ளிரவு மின்சாரம் துண்டிக்கப்பட்டு லேசான மழை பெய்துகொண்டிருந்த நேரத்தில், முத்துக்கிருஷ்ணனின் வீட்டிற்குப் பின்வாசல் வழியாகச் சென்றுள்ளார்.

Police

அப்போது வீட்டிற்குள் வந்த நபரைப் பார்த்து நீ யார்? என்று அச்சிறுமி சத்தமிட்டுள்ளார். இதையடுத்து அங்கிருந்த முத்துக்கிருஷ்ணனை, ஞானப்பிரகாஷ், தான் கையில் வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் முத்துக்கிருஷ்ணனுக்குப் பலத்தக் காயம் ஏற்பட்டது. இதைக் கண்டு தடுக்கச் சென்ற முத்துக்கிருஷ்ணனின் மனைவி மேரி விஜிலாவுக்கும் கழுத்தில் அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், சத்தம் போட்ட முத்துக்கிருஷ்ணனின் மகன் பிளஸெட் ராஜாவுக்கும் கழுத்தில் வெட்டுக் காயம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, வீட்டில் இருந்த இரண்டு மகள்களையும் ஞானப்பிரகாஷ் மிரட்டி தனது இருசக்கர வாகனத்தில் ஏற்றிச் சென்றுள்ளார். அப்போது, தன்னுடன் வராவிட்டால் அவர்களையும் வெட்டிவிடுவதாக மிரட்டியதாகக் கூறப்படுகிறது. பின்னர், தனது சொந்த ஊரான ஆனந்தபுரத்தில் உள்ள வீட்டிற்கு இருவரையும் அழைத்துச் சென்று அடைத்து வைத்துள்ளார்.

இதற்கிடையே, இன்று காலை சம்பவம் குறித்து தகவல் அறிந்த தட்டார்மடம் காவல் நிலைய போலீஸார், விசாரணை மேற்கொண்டனர். அப்போது, முத்துக்கிருஷ்ணனின் மூத்த மகளை செல்போனில் தொடர்புகொண்டு போலீஸார் விசாரித்தபோது, ஆனந்தபுரத்தைச் சேர்ந்த ஞானப்பிரகாஷ் தங்களை அழைத்துச் சென்று வீட்டில் அடைத்து வைத்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து போலீஸார் உடனடியாக ஆனந்தபுரத்திற்குச் சென்று,

Police

அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு பெண் குழந்தைகளையும் மீட்டனர். தொடர்ந்து விசாரணை நடத்திய போலீஸார், காதல் விவகாரத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் புரோட்டா மாஸ்டர் ஞானப்பிரகாஷை ஆனந்தபுரம் காட்டு பகுதியில் கைதுசெய்தனர். இந்தச் சம்பவம் முதலூர் மற்றும் ஆனந்தபுரம் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தூத்துக்குடி: "தாய் கொலை; கடத்தப்பட்ட மகள்கள்; மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்" - அன்புமணி

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தை அடுத்த முதலூரைச் சேர்ந்த தம்பதி முத்துக்கிருஷ்ணன் - மேரி ரெஜிலா. இந்தத் தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள் ஓர் ஆண் குழந்தை என 3 குழந்தைகள் இருக்கின்றனர். இந்... மேலும் பார்க்க

போதைபொருள் விற்பனை: கேரள போலீஸில் கூட்டாக சிக்கிய தவெக, திமுக மாவட்ட நிர்வாகிகள்! என்ன நடந்தது?

கேரள மாநில காவல்துறையின் போதைப்பொருள் தடுப்பு சிறப்பு பிரிவு மற்றும் மாவட்ட ஆன்டி-நார்கோடிக்ஸ் ஸ்குவாட் ஆகியவை இணைந்து 'ஆபரேஷன் தூஃபான்' என்ற பெயரில் அண்டை மாநிலங்களுக்கு இடையேயான போதைப்பொருள் விநியோக... மேலும் பார்க்க

காதலனை மாடியிலிருந்து தள்ளி கொன்றாரா சோசியல் மீடியா பிரபலம்? மும்பை மாபியாவில் தஞ்சமான பின்னணி

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்தவர் ஸ்ரத்தா துபே. சோசியல் மீடியா பிரபலமான இவர் மேக்அப் கலைஞராகவும் இருக்கிறார். இவரது காதலன் சிவா சர்மா. இவர் பல்வேறு இடங்களில் உணவகங்கள் நடத்தி வந்தார். கடந்த ச... மேலும் பார்க்க

நாகை: சுற்றுலா வந்த இடத்தில் 2 சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை; 2 கேரள இளைஞர்கள் போக்சோவில் கைது

கேரளாவில் இருந்து 15 பேர் கொண்ட குழுவினர் ஒன்றாக வேளாங்கண்ணிக்குச் சுற்றுலா வந்துள்ளனர். அந்தக் குழுவில் 26 வயதுடைய அஜய், 23 வயதுடைய விஷால் ஆகிய இரண்டு இளைஞர்களும் வந்திருந்தனர். வெளிமாவட்டத்தைச் சேர்... மேலும் பார்க்க

கோவை: சாதிய வன்கொடுமையால் மாணவர் தற்கொலை வழக்கு; பள்ளி ஆசிரியர் கைது

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த அசோக்குமார் – கெளசல்யா தேவி தம்பதியினரின் மகன் அகிலன் (16), கே.கே.நாயுடு மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில் அகிலன் நேற்று வீட்டில் தூக்கு போ... மேலும் பார்க்க

'எங்க மகளை மும்பை கோயிலை பார்த்துவிட்டு வரலாம் என்று அழைத்து சென்றனர்' - கைதான பெண்களின் பின்னணி

மும்பையில் கடந்த வாரம் பாலிவுட் நடிகர் டைகர் ஷெராப் துப்பாக்கியால் சுடப்பட்டதில் டைகர் ஷெராப் கார் ஓட்டுனர் உட்பட இரண்டு பேர் காயம் அடைந்தனர். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு தேவையான ஆயுதத்தை குற்... மேலும் பார்க்க