செய்திகள் :

கான்ஃபெரன்ஸ் காலில் நடந்த பேச்சுவார்த்தையில் சமரசம்: உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்ட மனோஜ் ஜராங்கே

post image

மகாராஷ்டிராவில் பெரும்பான்மையாக வாழும் மராத்தா சமுதாய மக்களுக்கு இட ஒதுக்கீடு கோரி அடிக்கடி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வரும் மனோஜ் ஜராங்கே, மீண்டும் கடந்த 20 நாள்களாக உண்ணாவிரதம் இருந்து வந்தார். மாநில அரசு இட ஒதுக்கீடு தொடர்பான பெரும்பாலான கோரிக்கைகளை நிறைவேறிவிட்ட நிலையில், சில கோரிக்கைகள் மட்டும் சட்டச் சிக்கல் காரணமாக நிறைவேறாமல் இருந்தது.

இதற்காக மும்பை வந்து ஆசாத் மைதானத்தில் போராட்டம் நடத்தப் போவதாக மனோஜ் ஜராங்கே குறிப்பிட்டு இருந்தார். அதோடு தனது ஆதரவாளர்கள் சிலருடன் மும்பை நோக்கி வந்து கொண்டிருந்தார். தற்போது மும்பையில் விநாயகர் சதுர்த்தி விழா நடப்பதால் மும்பையில் போராட்டம் நடத்த போலீஸார் அனுமதி கொடுக்க முடியாது என்று கூறிவிட்டனர். ஆனாலும் மனோஜ் ஜராங்கே மும்பை வந்து கொண்டிருந்தார்.

இந்நிலையில் சர்வதேச விண்வெளி மாநாட்டில் பங்கேற்பதற்காக பாரிஸ் சென்றிருந்த மகாராஷ்டிர தொழில்துறை அமைச்சர் உதய் சாமந்த், முதல்வர், துணை முதல்வர் மற்றும் ஜராங்கே பாட்டீலின் கூட்டாளிகளுக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. போன் மூலம் பல சுற்று பேச்சுவார்த்தை நடந்தது. அமைச்சர் உதய் சாமந்த், முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ஆகியோருடன் 7 முறை பேசினார். அதைத் தொடர்ந்து முதல்வர், அமைச்சர் ராதாகிருஷ்ண விகே பாட்டீல் மற்றும் பாஜக தலைவர் பிரசாத் லாட் ஆகியோரை உள்ளடக்கிய கான்ஃபெரன்ஸ் போன் கால் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இதில் ஜராங்கே பாட்டீலின் நிலுவையில் உள்ள கோரிக்கைகள், அத்தகைய எதிர்ப்பை எதிர்கொள்வதற்கான எதிர்கால உத்தி மற்றும் நிலவும் சூழ்நிலையை எவ்வாறு அமைதியாக கையாள்வது என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. ஜராங்கே பாட்டீலின் நெருங்கிய கூட்டாளிகளுடனும் அரசாங்கம் நேரடித் தொடர்பை ஏற்படுத்தியது. இந்த உரையாடலின் போது நிலுவையில் உள்ள கோரிக்கைகள் குறித்து சாதகமான முடிவுகள் எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து 20 நாள்களாக மேற்கொண்டு வந்த உண்ணாவிரதப் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக மனோஜ் ஜராங்கே அறிவித்தார்.

`விவசாயிகள் ஏற்றுமதியாளராக மாற வேண்டும்’ - மாம்பழங்களை மதிப்புக்கூட்ட வேலூர் கலெக்டர் வலியுறுத்தல்

வேலூர் மாவட்டத்தில் சுமார் 5,924 ஹெக்டர் பரப்பளவில் `மா’ பயிர்ச் சாகுபடி செய்யப்படுகிறது. மகசூல் அதிகமான காலங்களில் விளைப் பொருள்களின் விலை ஏற்றத்தாழ்வால் விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள். இந்த நிலையி... மேலும் பார்க்க

'அடக்கி வாசிங்க; திமுகவின் ஆதரவால்தான் காங், விசிக, முஸ்லிம் லீக் வெற்றி பெற்றது' - அன்புமணி

பெரியார் பிறந்தநாளையொட்டி, தைலாபுரம் தோட்டத்தில் உள்ள பெரியார் சிலைக்கு பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அன்ப... மேலும் பார்க்க

US Fed வங்கியின் வட்டி விகித உயர்வை விரும்பாத ட்ரம்ப்; Upset-ல் பிற நாடுகளை குற்றம்சாட்டுவது என்ன?

நேற்று அமெரிக்காவின் மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் 0.25% வட்டி விகித உயர்வை அறிவித்தது. இந்த வட்டி விகித உயர்வு வட்டியை 3.75-4% ரேஞ்சிற்குள் கொண்டுள்ளது. ஆனால், இந்த வரி விகித உயர்வு அமெரிக்க அதிபர்... மேலும் பார்க்க

``இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பதை உரிய நேரத்தில் அறிவிப்போம்" - ஜி.கே.வாசன்

"தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலில் ஆதரவு யாருக்கு என்பதை நிர்வாகிகளுடன் ஆலோசித்து உரிய நேரத்தில் அறிவிக்கப்படும்" என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். இடைத்தேர்தல்தருமப... மேலும் பார்க்க

`பெரியாரின் கடவுள் மறுப்பு கொள்கையை ஏற்கவில்லை என தைரியமாக சொன்னவர் எங்கள் தலைவர்!'- அமைச்சர் ரமேஷ்

தந்தை பெரியாரின் பிறந்த தினத்தையொட்டி மதுரை அவுட்போஸ்ட் பகுதியில் உள்ள பெரியாரின் சிலைக்கு அறநிலையத்துறைஅமைச்சர் ரமேஷ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.தொடர்ந்து அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் செய்தி... மேலும் பார்க்க

'முதல்வர் விஜய்யின் லண்டன் பயணமும் கேள்விக்குறியான வெளிப்படைத்தன்மையும்!'

முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றிருந்தார். ஒரு வார பயணத்தை முடித்துவிட்டு இன்று சென்னை திரும்பியிருக்கிறார். இந்தப் பயணத்தில் கிட்டத்தட்ட 15,000 கோடி அளவுக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்... மேலும் பார்க்க