செய்திகள் :

காமன்வெல்த் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற ராஜா முத்துப்பாண்டி; ஊக்கத்தொகை அறிவித்த முதல்வர் விஜய்!

post image

கிளாஸ்கோவில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில், ஆடவர் 65 கிலோ பளுதூக்குதல் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார் தமிழகத்தைச் சேர்ந்த ராஜா முத்துப்பாண்டி.

நேற்று நடைபெற்ற ஆடவர் 65 கிலோ பளுதூக்குதல் பிரிவு போட்டியில் பங்கேற்ற தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ராஜா முத்துப்பாண்டி, மொத்தமாக 286 கிலோவைத் தூக்கி வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியிருக்கிறார்.

 ராஜா முத்துப்பாண்டி
ராஜா முத்துப்பாண்டி

கடந்த 2018-ல் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் 62 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்ற அவர், மொத்தமாக 266 கிலோ தூக்கி ஆறாம் இடம் பிடித்தார்.

அதன் பின்னர் காயம், அதற்கான சிகிச்சை உள்ளிட்ட காரணத்தால் சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கு கொள்ள முடியாமல் இருந்தார்.

இந்நிலையில், கடந்த ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் மூலம் சர்வதேச களத்துக்குத் திரும்பி தற்போது வெள்ளி வென்றிருக்கிறார்.

பலரும் அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வரும் நிலையில், தமிழக முதல்வர் விஜய்யும் தனது வாழ்த்தைத் தெரிவித்து, ஊக்கத்தொகையை அறிவித்திருக்கிறார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், " ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வரும் 23-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், ஆண்களுக்கான 65 கிலோ பளுதூக்கும் எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த வீரர் திரு. ராஜா முத்துப்பாண்டி அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள்.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

திரு. ராஜா முத்துப்பாண்டி அவர்களின் சாதனையைப் பாராட்டி தமிழ்நாடு அரசின் சார்பில் உயரிய ஊக்கத்தொகையாக 30 இலட்சம் ரூபாய் வழங்கப்படும்.

அவரது வெற்றி, இளைஞர்களுக்கு புதிய உத்வேகத்தையும் நம்பிக்கையையும் அளிக்கட்டும். அவர், மேலும் பல சாதனைகள் படைத்து இந்திய திருநாட்டிற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்க்க எனது வாழ்த்துகள்!" என்று பாராட்டியிருக்கிறார்.

மீண்டும் சர்வதேச டென்னிஸ் மேடையாகும் சென்னை... நவம்பரில் தொடங்குகிறது WTA 250!

சென்னை நுங்கம்பாக்கம் எஸ்.டி.ஏ.டி., டென்னிஸ் மைதானத்தில், வரும் நவம்பர் 2 முதல் 8-ம் தேதி வரை WTA 250 சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டி நடைபெறவுள்ளது. தொடர்ந்து இரண்டாவது ஆண்டாகவும், மொத்தத்தில் மூன்... மேலும் பார்க்க

சேலம் விறகு வியாபாரியின் மகள் காமன்வெல்த் வாள்வீச்சில் வரலாற்றுச் சாதனை! யார் இந்த கனகலட்சுமி?

சேலம் மாவட்டம் வாழப்பாடியைச் சேர்ந்தவர் பரஞ்சோதி. விறகு வியாபாரியான இவரின் மகள் கனகலட்சுமி வாள்வீச்சில் திறமை வாய்ந்த வீராங்கனையாக சிறு வயது முதலே களமாடி வருகிறார். தமிழ்நாடு அளவில் நடைபெற்ற வாள்வீச்ச... மேலும் பார்க்க

சீறிப்பாய்ந்த குதிரைகள்; அசரவைத்த போட்டியாளர்கள் - ஈரோட்டில் கவனம் ஈர்த்த குதிரையேற்றப் போட்டி!

ஈரோடு, திண்டலில் உள்ள ஹார்ஸ் ரைடிங் கிளப்பில் ஆகஸ்ட் 9, 10 ஆகிய இரண்டு நாள்கள் அகில இந்திய அளவிலான குதிரையேற்றப் போட்டி வெகு சிறப்பாக நடைபெற்றது.ஈரோட்டில் முதன்முறையாக நடைபெற்ற இப்போட்டியில், ஊட்டி, ம... மேலும் பார்க்க

"`நரேந்திர' என்ற பெயர் பிடிக்கலை..!" - குத்துச்சண்டை வீரர் பகிர்ந்த சம்பவம்; உரக்கச் சிரித்த மோடி

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய குத்துச்சண்டை வீரர் நரேந்தர் பெர்வால், பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தபோது தனக்கு நடந்த ஒரு வேடிக்கையான சம்பவத்தைப் பகிர்ந்து கொண்... மேலும் பார்க்க

ஈரோட்டில் குதிரையேற்றபோட்டி - சாகசம் செய்த வீரர்கள்

ஈரோடு குதிரையேற்ற போட்டி ஈரோடு குதிரையேற்ற போட்டி ஈரோடு குதிரையேற்ற போட்டி ஈரோடு குதிரையேற்ற போட்டி ஈரோடு குதிரையேற்ற போட்டி ஈரோடு குதிரையேற்ற போட்டி ஈரோடு குதிரையேற்ற போட்டி ஈரோடு குதிரையேற்ற போட்டி ... மேலும் பார்க்க

ஜார்ஜியாவில் தங்க வேட்டை – சாதனை புரிந்த திண்டுக்கல் மாணவி ரேஷ்மிக்கு உற்சாக வரவேற்பு!

மாணவி ரேஷ்மிக்கு உற்சாக வரவேற்புமாணவி ரேஷ்மிக்கு உற்சாக வரவேற்புமாணவி ரேஷ்மிக்கு உற்சாக வரவேற்புமாணவி ரேஷ்மிக்கு உற்சாக வரவேற்புமாணவி ரேஷ்மிக்கு உற்சாக வரவேற்புமாணவி ரேஷ்மிக்கு உற்சாக வரவேற்புமாணவி ரே... மேலும் பார்க்க