செய்திகள் :

காரின் மேல் தொங்கியபடி சென்று குட்கா கும்பலைப் பிடித்த போலீஸ்; முதல்வர் நேரில் அழைத்து பாராட்டு

post image

கடந்த 27ம் தேதியன்று கோவை மாவட்டம் கோவில்பாளையம் காவல் துறையினர், வழக்கமான வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது கர்நாடக மாநிலத்தில் இருந்து வந்த சொகுசு கார் ஒன்றைச் சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனையிட்டனர். காரின் பின்புறத்தில் மூட்டை மூட்டையாக பொருட்கள் இருப்பதைப் பார்த்த உதவி ஆய்வாளர் விக்னேஷ், அவற்றை சோதனையிட முயன்றார்.

அப்போது காரில் இருந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 3 பேர், போலீஸாரைத் தள்ளிவிட்டு காரின் கதவுகளை மூடி, திடீரென காரை அதிவேகமாக ஓட்டிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

காரில் தொங்கியபடி சென்ற போலீஸ்
காரில் தொங்கியபடி சென்ற போலீஸ்

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த தலைமை காவலர் வேல்முருகன், உடனடியாக ஓடும் காரின் மேற்கூரையில் பாய்ந்து பிடித்துக் கொண்டார். ஆனால், காரின் மீது போலீஸ் இருப்பதையும் பொருட்படுத்தாமல் கடத்தல்காரர்கள் காரைத் தொடர்ந்து வேகமாக ஓட்டிச் சென்றனர்.

கடத்தல்காரர்கள் சுமார் 40 கி.மீ. தூரம் சென்ற நிலையில், அவிநாசி பகுதியில் ஆம்புலன்ஸ்கள் மற்றும் போலீஸ் வாகனங்கள் காரைச் சுற்றிவளைத்து மடக்கிப் பிடித்தனர்.

முதலமைச்சர் விஜய் பாராட்டு
முதலமைச்சர் விஜய் பாராட்டு

விசாரணையில், கைது செய்யப்பட்டவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பாபு தாரா, ராஜேஷ், சுரேஷ் என்பதும், பெங்களூருவில் இருந்து 233 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களைக் கடத்தி வந்தததும் தெரியவந்தது.

இதற்கிடையே, காரின் மேற்கூரையில் தலைமைக் காவலர் வேல்முருகன் ஆபத்தான நிலையில் தொங்கியபடி சென்ற காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. தலைமைக் காவலர் வேல்முருகனுக்குப் பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் துணிச்சலாகச் செயல்பட்ட தலைமைக் காவலர் வேல்முருகனை நேரில் வரவழைத்து, தமிழ்நாடு முதலமச்சர் ஜோசப் விஜய் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

`அடையாளம் காட்டிய ஸ்கூல் பேக்' - யூடியூப்பர் மதுமிதாவின் நகை கொள்ளையில் எஸ்.பி சொல்வது என்ன?

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வி.ஐ.பி கார்டனில் வசித்துவரும் யூடியூப்பர் மதுமிதா வீட்டில் கடந்த 24-ம் தேதி இரவு வீட்டின் பின் கதவை கட்டர் மெஷின் மூலம் உடைத்து சுமார் 118 சவரன் தங்க நகைகள் கொள்ளையட... மேலும் பார்க்க

சென்னை: திருமண ஆசையை காட்டி இளம்பெண்ணிடம் நகை, பணம் பறித்த இளைஞர் - சிக்கியது எப்படி?

சென்னை, அயனாவரம், புதுநகர் பகுதியில் வசித்து வரும் 32 வயது பெண் ஒருவர் அழகுக்கலை நிபுணராக வேலை செய்து வருகிறார். இவர் தன்னுடைய முதல் கணவரை பிரிந்து, குழந்தைகளுடன் தாய் வீட்டில் வசித்து வருகிறார். இந்த... மேலும் பார்க்க

சென்னை: தாயின் கண்முன் மகன் கொலை - நடந்தது என்ன?

சென்னை: ஐஸ் ஹவுஸ் பகுதியைச் சேர்ந்தவர் சரசு. இவரின் மகன் அஜித் (28). இவர் வீட்டின் வாசலில் அமர்ந்து அம்மாவுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அஜித்தை சுற்றி வளைத்த ஒரு கும்பல் அவரை சரமாரியாக வெட்டியது.... மேலும் பார்க்க

நெல்லையில் `இரட்டைக் கொலை' - கார் நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறில் சகோதரர்கள் கொல்லப்பட்ட சோகம்

வணிக முக்கத்துவம் வாய்ந்த நெல்லை டவுன் பகுதியில் இன்று இரட்டைக் கொலை நடந்ததால், அந்தப் பகுதியே பரபரப்புக்கு உள்ளாகியது. உடனடியாக அந்தப் பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டனர். அத்துடன், நெல்லை மாநகர காவல... மேலும் பார்க்க

நாகர்கோவில் யூடியூப்பர் வீட்டில் கொள்ளை; "வீடியோ பார்த்து ஸ்கெட்ச் போட்டனர்" - போலீஸ் சொல்வது என்ன?

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வி.ஐ.பி கார்டனில் வசித்துவரும் யூடியூப்பர் மதுமிதா வீட்டில் கடந்த 24-ம் தேதி இரவு வீட்டின் பின் கதவை கட்டர் மெஷின் மூலம் உடைத்து சுமார் 118 சவரன் தங்க நகைகள் கொள்ளையட... மேலும் பார்க்க

பரமக்குடி: ஆட்டோ டிரைவர்கள் மோதலைத் தடுத்த பெண் போலீஸ்; தள்ளிவிடப்பட்டதால் பலியான சோகம்

பரமக்குடி சரக போலீஸ் உட்கோட்டத்தில் உள்ள பார்த்திபனூர் காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றுபவர் கண்ணகி (35). இவருக்கு ஓர் ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளன. நேற்று, பரமக்குடி மாவட்ட தலைமை அரசு மருத்... மேலும் பார்க்க