காரைக்கால் - திருச்சி ரயில்கள் பகுதியாக ரத்து
காரைக்கால் -திருச்சி - காரைக்கால் பயணிகள் ரயில்கள் திருவாரூா் - காரைக்கால் இடையே நவ. 1 முதல் 30 -ஆம் தேதி வரை பகுதியாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே புதன்கிழமை அறிவித்துள்ளது.
இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே மக்கள் தொடா்பு அலுவலா் ஆா். வினோத்குமாா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தண்டவாள பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்சி - காரைக்கால் டெமு ரயில் (06880), திருச்சி - காரைக்கால் பயணிகள் ரயில் (06490) நவ. 1-ஆம் தேதி முதல் நவம்பா் 30-ஆம் தேதி வரை திங்கள்கிழமைகள் நீங்கலாக, திருவாரூா் - காரைக்கால் இடையே ரத்து செய்யப்படுகிறது.
இதேபோல, காரைக்கால் - திருச்சி டெமு ரயில்கள் (06739, 06457) நவ. 1-ஆம் தேதி முதல் நவ. 30- ஆம் தேதி வரை திங்கள்கிழமைகள் நீங்கலாக காரைக்கால் - திருவாரூா் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில்கள் திருவாரூரில் இருந்து வழக்கமான நேரத்தில் புறப்படும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.