செய்திகள் :

”காளை மாடுகூட கன்று போடலாம்; ஆனால், பா.ஜ.க தமிழகத்தில் காலூன்றாது” - கருணாஸ் காட்டம்

post image

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ள வெம்பக்கோட்டையில் முக்குலத்தோர் புலிப்படை சார்பில் சமத்துவம் பழகு என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “விஜய் ஒரு நடிகர் என்பதால் எல்லோருக்கும் பிடிக்கும், கூட்டங்களில் திரைப்பட வசனத்தை மேற்கோள்காட்டி பேசி, கட்சி ஆரம்பித்த குறுகிய காலத்தில் முதலமைச்சராகதான் வருவேன் என அவர் பேசுவது அவரது பேராசையை காட்டுகிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை தலைவர்களில் ஒருவராக ஏன் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை ஏற்றுக் கொள்ளவில்லை?

கருணாஸ்

அவரை சாதியை வட்டத்துக்குள் சுருக்கிப் பார்க்கிறார்கள். ஊழல் செய்ய மாட்டேன் என சொல்லும் விஜய், தான் வாங்கிய வெளிநாட்டு காருக்கே வருமான வரி காட்டவில்லை. அவருக்கு எதிராக நடந்த நீதிமன்ற வழக்கை தமிழகம் மறக்கவில்லை. அதையெல்லாம் அவர் நினைவில் வைத்துப் பேசினால் நன்றாக இருக்கும். விசிலை வாயில் வைத்து ஊதத்தான் முடியும். ஆனால், ஓட்டப்பந்தயத்தில் ஓடுவதற்கு வீரர் ஒருவர் வேண்டும். ஓடி வெற்றி பெற வேண்டும், அரசியல் அது தேர்தல் களத்தில்தான் தெரியும்.

பா.ஜ.கவின் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தின் வலையில் விழுந்ததன் விளைவாக ஓ.பி.எஸ் தற்போது எந்த நிலைமையில் இருக்கிறார் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். பா.ஜ.கட்சியை நம்பி தர்ம யுத்தத்தை நடத்தியவர் ஒ.பி.எஸ். எடப்பாடி பழனிசாமி எப்படி சசிகலாவிற்கு துரோகம் செய்தாரோ , அதேபோல் ஓ.பி.எஸ்-யிடம் இருந்த பலரும் இ.பி.எஸிடம் சென்று விட்டார்கள். முழுக்க முழுக்க பாஜக ஓ.பி.எஸ்-ஐ நம்ப வைத்து கழுத்தை அறுத்திருக்கிறது.

கருணாஸ்

ஒ.பி.எஸின் நிலைமை இன்றைக்கு மிகவும் கவலைக் குறியதாகவும், வருத்தம் அடையக் கூடியதாகவும் இருக்கிறது. முக்குலத்தோர் சமுதாயத்தை பா.ஜ.க பிளவுபடுத்தி, டி.டி.வி தினகரனை சிறையிலடைத்து, கூட்டணியில் இருந்து  வெளிநடப்பு செய்த அவரை இன்று மீண்டும் கூட்டணில் சேர்க்கப்படுகிறது என்றால், முழுக்க முழுக்க பா.ஜ.கவின் மோசடி வேலை என உலகமே உற்று நோக்குகிறது.

10 நாட்களுக்கு முன் இ.பி.எஸ் பற்றியும், பா.ஜ.கவை பற்றியும் தினகரன் என்னவெல்லாம்  விமர்சனம் செய்தார் என்பதை மக்கள் உடனடியாக மறக்க மாட்டார்கள். இ.பி.எஸ் மீது எவ்வளவோ குற்றச்சாட்டை சொல்லி அவரை ஆட்சிக்கு வர விட மாட்டேன். எனக் கூறி வந்த  டி.டி.வி தினகரன் இன்றைக்கு ஒன்றுமே இல்லை என்று சந்தர்ப்பத்திற்காகவும், சூழ்நிலைக்காகவும், சூழ்நிலை கைதியாக பங்காளி சண்டை என கூறுவது மிகவும் வேடிக்கையாக உள்ளது.

கருணாஸ்

டி.டி.வி தினகரன் அன்று ஒன்று பேசுகிறார், இன்று ஒன்று பேசுகிறார், நாளை ஒன்று பேசுவார். பா.ஜ.கவின் அரசியல் தீர்மானமே அண்டைய மாநிலங்களில் உள்ள அரசியல் கட்சிகளை பலவீனப்படுத்தி  துண்டாக்குவதுதான். அதே முயற்சியைத்தான்  தமிழகத்திலும் எடுக்கிறார்கள். படர்தாமரை உடம்புக்கு நாசம், ஆகாயத்தாமரை குளத்திற்கு நாசம், பா.ஜ.கவின் தாமரை நாட்டுக்கு நாசம். வரும் காலங்களில் காளை மாடு கூட கன்று போடலாம் ஆனால் பா.ஜ.க தமிழகத்தில் காலூன்றாது.” என்றார்.  

'அவர்' மீது எங்களுக்கு எவ்வளவு கோபம், எவ்வளவு ஆசை, எவ்வளவு வியப்பு இருக்கிறது தெரியுமா? - சு.வெ

ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் விழாவில், பெருந்தமிழர் விருது பெற்ற எஸ்.வி.ராஜதுறை குறித்து சு.வெங்கடேசன் எம்.பி பேசுகையில், "விகடனுடைய 'பெருந்தமிழர்' விருது பெறுகிற தோழர் எஸ்.வி.ஆர்., நம் சமகாலத்தின... மேலும் பார்க்க

``தோப்புக்கரணம் போடு என்றால், நான்-ஸ்டாப்பாக பல்டி அடிப்பார் பழனிசாமி’’ - ஸ்டாலின் கடும் தாக்கு

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை மண்டலவாடியில், தி.மு.க வடக்கு மண்டலத்துக்குட்பட்ட 47 சட்டமன்றத் தொகுதிகளின் வாக்குச்சாவடிக் குழுவினருக்கான பயிற்சி மாநாடு இன்று மாலை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில்... மேலும் பார்க்க

'த்ரிஷா குறித்து நயினார் நாகேந்திரன் பேசியது வருத்தம்' - வானதி சீனிவாசன்

கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவும், பாஜக தேசிய மகளிரணி தலைவருமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “மகளிர் உரிமைத் தொகையை பாஜக தடுக்க பார்க்கிறது என்று திமுகவினர் முட்டாள்தனமான பேசுகிறார்கள். ... மேலும் பார்க்க

'புதுச்சேரி நிதியில் ரூ.15,000 கோடி ஊழல் செய்தவர் நாராயணசாமி!' – காரைக்காலில் கடுகடுத்த அமித் ஷா

``தொன்மையான தமிழ் மொழியில் பேச முடியாததற்கு மன்னிப்பு கேட்கிறேன்...”புதுச்சேரி, காரைக்கால் பிராந்தியத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷ... மேலும் பார்க்க

`அமித் ஷா உள்ளிட்டோர் அடிக்கடி தமிழ்நாட்டுக்கு வர வேண்டும்; அப்படி வந்தால்தான்...' - அன்பில் மகேஸ்

திருச்சி, திருவெறும்பூரில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "எதிரணியினருக்குதான் தேர்தல் பயம். மக்களுக்கான நலத்திட்டங்களை சூழ்ச்சி செய்து யா... மேலும் பார்க்க

அண்ணா அறியாலயத்தில் ஒருபக்கம் ரெய்டு; மறுப்பக்கம் கூட்டணி பேச்சு! - காங்கிரஸ் ஆடிய அரசியல் ஆடுபுலி

`ஆட்சியில் பங்கு'அரசியல் ஆடுபுலி 05ஆட்சியில் பங்கு வேண்டும் என்கிற கோரிக்கையோடு, அதிமுக கூட்டணியில் பாஜகவும், திமுக கூட்டணியில் காங்கிரசும், 2026 சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான கூட்டணிப் பேச்சினைத் தொடங்... மேலும் பார்க்க