செய்திகள் :

காவிரி: `` தண்ணீர் தர மாட்டேன் என்கிற கட்சியுடன் எப்படி கூட்டணி வைக்க முடிகிறது?"- சீமான் காட்டம்

post image

மைசூரில் நடந்த அரசு விழாவில் கர்நாடக முதல்வர் டி.கே சிவக்குமார் பிரதமர் மோடி முன்னிலையில், `காவிரி அணையை நீங்கள் இப்போதுதான் பார்த்தீர்கள். மேக்கேதாட்டு அணை கர்நாடகாவில் கட்டப்பட வேண்டும் என்றும், அதை யாராலும் தடுக்க முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் தெளிவான தீர்ப்பை வழங்கியுள்ளது. மத்திய அரசு எங்களுக்கு உதவ வேண்டும்" எனப் பேசியிருந்தார்.

இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, மேகதாது விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.

குழந்தைகள் தினம்
குழந்தைகள் தினம்

அதற்குப் பதிலளித்த அவர், ``அந்த முதல்வரின் உறுதியான முடிவு குறித்து இந்த மாநில முதல்வரிடம் கேள்வி கேளுங்கள். அதே காங்கிரஸ் கட்சியை கூட்டணியில் இணைத்து ஆட்சி நடத்துவது யார்? தண்ணீர் தரவே மாட்டேன் என்கிற கட்சியுடன் உங்களால் எப்படி கூட்டு வைக்க முடிகிறது?

உரிமையைப் பறிக்கும் கட்சியுடன் கூட்டணி வைத்து இங்கு எதைக் காப்பாற்றப்போகிறீர்கள்? நியாயமாக யோசித்தால், காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் மாநிலம் இதுவா? அதுவா? அப்படியென்றால் அவர்கள் யாருடன் இருப்பார்கள்? எனவே, இதெல்லாம் என்னிடம் கேட்காதீர்கள் நான் ஜீரோ.... ஹீரோவிடம் கேளுங்கள்.

எல்லாவற்றையும் செயலில் காட்டுவோம் என்கிறார்கள். காணாமல் போன ஒரு குழந்தையை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. ஆட்சியருக்கு ஆபாச மெசேஜ் அனுப்பியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் அரசின் நிலைபாடு என்ன?

மாவட்ட ஆட்சியர் பொய் சொல்கிறார்களா? மாபெரும் சட்டமன்றத்தை வழிநடத்தும் பொருப்பாளர் துணை சபாநாயகர் ஒருவரை எப்படி நடத்தினார் என்பதை ஊர் அறியும். ஆனால், இதுவரை அவரை இந்தப் பொறுப்புக்குத் தகுதியற்றவர் என பொறுப்பிலிருந்துகூட நீக்கவில்லை என்றால் இது என்னமாதிரியான தூய சக்தி?

கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ்
கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ்

பலரையும் தகுதி நீக்கம் செய்யும் சபாநாயகர் இவரை அருள் விக்னேஷை ஏன் தகுதி நீக்கம் செய்யவில்லை? அந்தத் தொகுதியில் மீண்டும் தேர்தலில் மக்களைத் தைரியமாகச் சந்திக்க வேண்டியதுதானே? ஏன் பயம்? பெரும்பான்மை இல்லாமல் கலைஞர் ஆட்சி நடத்தினாரே? எனவே, நேர்மையும், உண்மையும்தான் இங்கு முக்கியமே தவிர பெரும்பான்மையல்ல.

குழந்தைகள் தின வாழ்த்து அட்டையில் நேரு மாமாவின் புகைப்படம் இல்லை என்றால் என்ன அதான் பொட்டுமாமாவின் புகைப்படம் இருக்கிறதே.... அதுபோதாதா?" எனக் காட்டமாக விமர்சித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

ஆபாச மெசேஜ் விவகாரம்: "மாவட்ட ஆட்சியர் மௌனம் கலைக்க வேண்டும்" - டாக்டர் கிருஷ்ணசாமி

"அதிகாரங்களை கையில் வைத்துக் கொண்டு கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் மௌனம் சாதிப்பது, தேவையற்ற விமர்சனங்களுக்கும் விவாதங்களுக்கும் வழிவகுக்கிறது" என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி த... மேலும் பார்க்க

`எஃப்ஸ்டீனை, ஜெம் வீரமணியை பாவம் என விடமுடியுமா?" - மாணிக்கம் தாகூருக்கு செல்வப்பெருந்தகை பதில்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் மறைந்த ஜவஹர்லால் நேரு பிறந்தநாளை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான செல்வப்பெருந்தகை மலர் அஞ்சலி செலுத்தினார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவ... மேலும் பார்க்க

மேகதாது விவகாரம்: ``தமிழ்நாட்டின் நீருரிமைக்கே அச்சுறுத்தல்; தவெக அரசு மௌனம் காக்கிறது!" - TRB ராஜா

கர்நாடக மாநிலம் மைசூரில் நடந்த அரசு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, கர்நாடகா முதல்வர் டி.கே.சிவக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி முன்னிலையில் பேசிய அம்மாநில முதல்வர் டி.கே.... மேலும் பார்க்க

மேகதாது: 'உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்'- முதல்வருக்கு ஸ்டாலின் கடிதம்

மேகதாது அணை விவகாரத்தில் உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்ட வலியுறுத்தி, திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று (14-11-2026) முதல்வர் விஜய்க்கு கடிதம் எழுதியிருக்கிறார். அந்தக் கட... மேலும் பார்க்க

"மர்மமான வெளிநாட்டு நபர்" - சோனியா காந்தி குறித்து அவதூறாக பதிவிட்ட நடிகை கங்கனா மீது வழக்கு

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி குறித்து பாலிவுட் நடிகையும், ஹிமாச்சல் பிரதேச மாநிலம் மாண்டி தொகுதி மக்களவை உறுப்பினருமான கங்கனா ரனாவத் சர்ச்சைக்குறிய வகையில் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அவர்... மேலும் பார்க்க

தீக்குளித்து காவல் நிலையம் நுழைந்த பெண்: ``என்ன நடக்கிறது தமிழ்நாட்டில்?" - தமிழிசை சௌந்தரராஜன்

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் லட்சாதிபதி. இவருக்கும் உரையூர் ஊராட்சி செயலாளருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அதனால், ஊராட்சி செயலாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். ... மேலும் பார்க்க