செய்திகள் :

காவிரி விவகாரம்: "தவெக மட்டும் இதை செய்தால், அதுதான் நேஷனல் செய்தி!" - அன்புமணி ராமதாஸ்

post image

பாமக தலைவர் அன்புமணி சென்னையில் இன்று (ஆகஸ்ட்.14) செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.

"தமிழ்நாடு என்பது பொதுவானது. முதலமைச்சர் என்பவர் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் பெற்றவர். சமீபத்தில் கூட தமிழக முதலமைச்சர் கர்நாடக போவாரா? இல்லையா? பேச்சுவார்த்தை நடத்துவாரா? என்று தெரியவில்லை.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

இதில் மறைப்பதற்கு என்ன வேண்டியிருக்கிறது. வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும். உண்மையாக என்ன நடக்கிறது என்பதைத் தெரியப்படுத்த வேண்டும். அதுதான் ஜனநாயக முறை.

சட்டமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்றிவிட்டால் கர்நாடக தண்ணீர் கொடுத்துவிடுமா?. நான் கடந்த இரண்டு மாதங்களில் 100 முறை சொல்லி இருக்கிறேன். தயவு செய்து அனைத்துக்கட்சி கூட்டத்தைக் கூட்டுங்கள் என்று...

ஒரு மனதாக இந்தப் பிரச்னையை அணுக வேண்டும். ஏன்னென்றால் இது தமிழ்நாட்டின் பொதுப்பிரச்னை. அவர்களுக்கு (தவெக) அனுபவம் கிடையாது. நீங்கள் மட்டுமே இந்தப் பிரச்னையை தீர்க்க முடியாது. அனுபவமிக்க நிறையக் கட்சிகள் இங்கு இருக்கின்றன. அவர்களிடம் ஆலோசனை கேட்டு செயல்பட வேண்டும்.

அன்புமணி ராமதாஸ்
அன்புமணி ராமதாஸ்

முதல்வர் எல்லா கட்சித் தலைவர்களுடன் சென்று பிரதமரை சந்தித்தால் அதுதான் நேஷனல் செய்தி. அரசியல் அழுத்தம் கொடுக்காமல் இந்தப் பிரச்னையைத் தீர்க்க முடியாது" என்று தவெக அரசை அன்புமணி குற்றம் சாட்டியிருக்கிறார்.

Eye Scan: வடகிழக்கு மக்களின் சவால்; நகைச்சுவையாக நாகாலாந்து அமைச்சர் சுட்டிக்காட்டிய முக்கிய பிரச்னை

வடகிழக்கு இந்திய மக்கள் எதிர்கொள்ளும் சவால்களைத் தனது நகைச்சுவையான பதிவுகள் மூலம் வெளிச்சத்திற்குக் கொண்டுவருவதில் நாகாலாந்து சுற்றுலா மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் தெம்ஜென் இம்னா அலங் புகழ்பெற்றவர... மேலும் பார்க்க

தூய்மைப்படுத்தும் சடங்கு: ``என்னை அவமானப்படுத்த முயன்றுள்ளீர்கள்" - மல்லிகார்ஜுன கார்கே உருக்கம்!

கடந்த ஆகஸ்ட் 8-ஆம் தேதி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உத்தரகாண்ட் மாநிலம் ஹலத்வானி ராம்லீலா மைதானத்தில் பேரணி நடத்தி உரையாற்றினார். இதைத் தொடர்ந்து, இரண்டு நாட்களுக்குப் பிறகு (ஆகஸ்ட் 10) 'ஸ்ரீ... மேலும் பார்க்க

'எங்களை விட்டுருங்க' - 3 பில்லியன் டாலர், 2 டன் தங்கத்தை வழங்கி ஈரானைச் சமானப்படுத்திய UAE

இஸ்ரேலும், அமெரிக்காவும் இணைந்து கடந்த பிப்ரவரியில் இருந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தின. இத்தாக்குதலைத் தொடர்ந்து வளைகுடாவில் உள்ள ஜோர்டான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா போன்ற நாடுகளில் உள்ள ... மேலும் பார்க்க

`இணைந்தும் செயல்பட மாட்டோம்; விட்டும் செல்ல மாட்டோம்'- எடப்பாடிக்கு எதிராக சி.வி சண்முகம் தரப்பு!

அதிமுக-வில் எடப்பாடி பழனிசாமி தலைமைக்கு எதிரான அதிருப்தி மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் தரப்பினர் நேற்று நான்கு மணி நேரத்துக்கும் மேலாக ஆலோசனை நடத்தி முக்கிய ... மேலும் பார்க்க

"முக்கிய பங்குள்ள பத்திரிகையாளர்களை ஏன் அனுமதிக்கவில்லை?" - முதலீட்டாளர்கள் மாநாடு குறித்து TRB ராஜா

இன்று தவெக அரசின் முதல் முதலீட்டாளர்கள் மாநாடு நடந்தது. இந்த மாநாட்டிற்கு செய்தியாளர்கள் அழைக்கப்படாதது பேசுபொருளானது. இதையடுத்து முன்னாள் தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவ... மேலும் பார்க்க