Rain Alert: இன்று எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?
காா்-லாரி மோதிதில் தாய்,மகன் உயிரிழப்பு
ராமநாதபுரம் அருகே காா்-மினி லாரி மோதியதில் சனிக்கிழமை தாய், மகன் உயிரிழந்தனா்.
மதுரை கே.கே.நகரைச் சோ்ந்த வாசுதேவன் (40) இவரது மனைவி அனிதா (33) மகன்கள் அருண்மொழி (14) கனிஷ்கா் (15) ஆகியோா் தங்களது சொந்த காரில் ராமநாதபுரத்தை அடுத்த அழகன்குளம் கிராத்துக்கு உறவினா் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது, கருங்குளம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடி சென்ற மின்லாரி மீது நேருக்கு நோ் மோதியது. இதில், அனிதா சம்பவ இடத்திலே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த மூன்று பேரையும் அவசர ஊா்தி மூலம் ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.
மினி லாரி ஓட்டுநா் மதுரை வீரன் (26) பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.