செய்திகள் :

BB Tamil 9: `2 பேருக்கு ரெட் கார்டு' சாண்ட்ராவை உதைத்து தள்ளிய பாரு, கம்ருதீன்; வலுக்கும் எதிர்ப்பு

post image

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 89 நாள்களைக் கடந்துவிட்டது.

மொத்தம் 9 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் இருக்கின்றனர்.

நிகழ்ச்சி முடிய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க் நடக்கிறது.

BB Tamil 9
BB Tamil 9

அந்தவகையில் நேற்று கார் டாஸ்க் நடந்திருக்கிறது. அந்த ஒரு காரில் போட்டியாளர்கள் அனைவரும் அமர்ந்திருக்க வேண்டும்.

அப்போது சாண்ட்ராவிடம் வாக்குவாதம் செய்த பார்வதி, கம்ருதீன் இருவரும் ஒரு கட்டத்தில் சாண்ட்ராவை காரில் இருந்து வலுக்கட்டாயமாக கீழே தள்ளிவிடுகின்றனர்.

குறிப்பாக பார்வதி காலை வைத்து உதைத்து சாண்ட்ராவை கீழே தள்ளிவிடுகிறார்.

இதனையடுத்து சாண்ட்ராவிற்கு மயக்கம் வர மருத்துவக்குழு வந்து அவருக்கு சிகிச்சை அளித்திருக்கிறது. இந்நிலையில் மோசமான முறையில் நடந்துகொண்ட பார்வதி, கம்ருதீனுக்கு எதிராக பழைய பிக் பாஸ் போட்டியாளர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில் முன்னாள் போட்டியாளரான ஷிவின் வெளியிட்டிருக்கும் இன்ஸ்டா பதிவில், "இரண்டு பேரும் மிக மோசமாக நடந்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற செயல்களை என்டர்டெயின்ட்மென்ட்டாக எடுத்துக்கொள்ள முடியாது" என்று பதிவிட்டிருக்கிறார்.

 சிவின் பதிவு
சிவின் பதிவு

இதனைத்தொடர்ந்து சௌந்தர்யா பகிர்ந்திருக்கும் பதிவில், " ஒருவரை காலை வைத்து மிதித்து கீழே தள்ளுவது பலம் கிடையாது. அது ஒரு மோசமான செயல்" என்று தெரிவித்திருக்கிறார்.

தவிர ஜாக்குலின் வெளியிட்டிருக்கும் பதிவில், " இந்த வாரம் இரண்டு பேருக்கு ரெட் கார்டு கிடைக்கும். அப்படி நடந்தால் பிக் பாஸில் அது ஒரு சிறந்த தருணமாக இருக்கும்" என்று பதிவிட்டிருக்கிறார்.

BB Tamil 9: "நான் போகும்போது கம்ருதீனுன் மட்டும் உள்ள இருந்தா.! - வார்னிங் கொடுத்த பிரஜின்

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 89 நாள்களைக் கடந்துவிட்டது. மொத்தம் 9 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் இருக்கின்றனர். நிகழ்ச்சி முடிய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க் நடந்தது.... மேலும் பார்க்க

Irfan: 13 வருட இடைவெளி, 12 கிலோ எடை குறைப்பு - சீரியலுக்குத் திரும்பிய 'சரவணன் மீனாட்சி' இர்ஃபான்!

ஜி தமிழ் சேனலில் புதிதாக ஒளிபரப்பாக இருக்கிற 'வாகை சூட வா' சீரியல் மூலம் 13 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் டிவிக்குத் திரும்பியிருக்கிறார் நடிகர் இர்ஃபான்.'கனா காணும் காலங்கள்' சீரியல் மூலம் பிரபலமானவர... மேலும் பார்க்க

BB TAMIL 9 DAY 88: வார்த்தையை விட்ட கம்ருதீன்; கடுப்பு காட்டிய பாரு - 88 நாளில் நடந்தது என்ன?

TTF6 - கில்லர் காயின் போங்காட்டமாக நடந்து முடிந்தது. கூடையில் கோழியை அமுக்கிப் போடுவதைப் போல நடந்து முடிந்த இந்த ஆட்டம் சுவாரசியமில்லை.‘இப்படியொரு ஆட்டத்தில பங்கேற்க எனக்கு விருப்பமில்லை’ என்று சொன்ன ... மேலும் பார்க்க

"ஜீ தமிழின் பதிலைப் பொறுத்தே அடுத்த மூவ்" - தமிழ் நடிகர்களுக்கு வாய்ப்புக் கோரும் டிவி நடிகர் சங்கம்

தமிழில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் தமிழகத்தைச் சேர்ந்த நடிகர், நடிகைகளுக்கு அதிக வாய்ப்புகள் வழங்க வேண்டி ஜீ தமிழ் சேனலுக்குக் கடிதம் தந்துள்ளது சின்னத்திரை நடிகர் சங்கம்.கடந்த சில மாதங்களுக்கு மு... மேலும் பார்க்க

BB TAMIL 9 DAY 87: விக்ரம் - திவ்யா மோதல்; மீண்டும் பாரு - கம்மு ரொமான்ஸ் - 87வது நாளின் ஹைலைட்ஸ்

சர்ச்சையும் சண்டையும் இல்லாமல் ஸ்போர்டிவ்வாக விளையாடி பாரு அடைந்த வெற்றி ஒன்று உண்டென்றால் அது TTF5 மட்டுமே. அதற்காக பல இடிகளைத் தாங்க வேண்டியிருந்தது. வெல்டன்.அத்தனை அசிங்கமான சண்டைகளுக்குப் பிறகும் ... மேலும் பார்க்க