செய்திகள் :

BB Tamil 9: "நான் போகும்போது கம்ருதீனுன் மட்டும் உள்ள இருந்தா.! - வார்னிங் கொடுத்த பிரஜின்

post image

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 89 நாள்களைக் கடந்துவிட்டது.

மொத்தம் 9 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் இருக்கின்றனர்.

நிகழ்ச்சி முடிய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க் நடந்தது.

BB Tamil 9
BB Tamil 9

அந்தவகையில் நேற்று கார் டாஸ்க் நடந்திருக்கிறது. அந்த ஒரு காரில் போட்டியாளர்கள் அனைவரும் அமர்ந்திருக்க வேண்டும்.

அப்போது சாண்ட்ராவிடம் வாக்குவாதம் செய்த பார்வதி, கம்ருதீன் இருவரும் ஒரு கட்டத்தில் சாண்ட்ராவை காரில் இருந்து வலுக்கட்டாயமாக கீழே தள்ளிவிடுகின்றனர்.

குறிப்பாக பார்வதி காலை வைத்து உதைத்து சாண்ட்ராவை கீழே தள்ளிவிடுகிறார்.

வலுக்கும் எதிர்ப்புகள்

இதனையடுத்து சாண்ட்ராவிற்கு மயக்கம் வர மருத்துவக்குழு வந்து அவருக்கு சிகிச்சை அளித்திருக்கிறது. இந்நிலையில் மோசமான முறையில் நடந்துகொண்ட பார்வதி, கம்ருதீனுக்கு எதிராக பழைய பிக் பாஸ் போட்டியாளர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் பார்வதி கம்ருதீன் இருவருக்கும் ரெட் கார்ட் கொடுக்க வேண்டும் என்று பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

BB Tamil 9
BB Tamil 9

வார்னிங் கொடுத்த பிரஜின்

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த சாண்ட்ராவின் கணவர் பிரஜின், " நான் பிக் பாஸ் செலபிரேஷன் ரவுண்ட்டுக்கு உள்ள போவேன். அப்படி நான் போகும்போது கம்ருதீன் உள்ள இருந்தா அது அவருக்கு பேட் டைம்.

அப்படி உள்ள இல்லன்னா அவருக்கு குட் டைம். நான் வார்னிங் கொடுக்குறேன். ஒரு ஆணும், ஆணும் மோதலாம், ஒரு பெண்ணும், பெண்ணும் மோதலாம், ஆனா ஒரு பெண்ணை கொச்சைப்படுத்தி தகாத வார்த்தைகளால் பேசிருக்காரு.

அவர்லாம் என்ன படிச்சிருக்காருன்னு தெரில. அவர் ஏன் இப்படி நடந்துக்குறாருன்னு தெரியல.

கம்ருதீன், பார்வதிக்கு நடந்த பிரச்னையில சாண்ட்ரா தான் கூட இருந்திருக்காங்க. ஆனா கம்ருதீன் அப்படி பேசும்போது பார்வதி ஏன் அவங்களை இப்படி பேசுறன்னு ஒரு வார்த்தை கூட கேட்கல" என்று பிரஜின் எச்சரித்திருக்கிறார்.

BB Tamil 9: "ஒருதர மட்டும்னா 'Unfair Red Card’ங்கிற பேச்சு வரும்" - எவிக்‌ஷனில் நீண்ட விவாதம்?

அடுத்த வாரத்துடன் நிறைவு பெறுகிறது, விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் தமிழ் சீசன் 9.வி.ஜே. பார்வதி, நந்தினி, வாட்டர்மெலன் திவாகர், பிரவீன் காந்தி, துஷார், பிரவீன், ஆதிரை உள்ளிட்ட இருபது பேருடன... மேலும் பார்க்க

BB Tamil 9: "தப்பு பண்ணிட்டேன்.!"- சாண்ட்ராவிடம் மன்னிப்பு கேட்ட பாரு; காலில் விழுந்த கம்ருதீன்

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 89 நாள்களைக் கடந்துவிட்டது. மொத்தம் 9 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் இருக்கின்றனர். நிகழ்ச்சி முடிய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க் நடந்தது.... மேலும் பார்க்க

BB Tamil 9: டபுள் எவிக்ஷன் இல்லை, முதல்முறையாக டபுள் ரெட் கார்டு! - கம்ருதீன், பார்வதி அவுட்!

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் தமிழ் சீசன் 9 கிளைமேக்ஸை நெருங்கி விட்டது.வி.ஜே. பார்வதி, நந்தினி, வாட்டர்மெலன் திவாகர், பிரவீன் காந்தி, துஷார், பிரவீன், ஆதிரை, உள்ளிட்ட இருபது பேருடன் அக்டோபர் முத... மேலும் பார்க்க

BB Tamil 9: "நீங்க ரெண்டு பேரும்.!"- பார்வதி, கம்ருதீனுக்கு ரெட் கார்டு காண்பித்த விஜய் சேதிபதி

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 89 நாள்களைக் கடந்துவிட்டது. மொத்தம் 9 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் இருக்கின்றனர். நிகழ்ச்சி முடிய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க் நடந்தது.... மேலும் பார்க்க

BB Tamil 9: "இதைப் பொறுத்துக்கொள்ள முடியாது" - விஜே பார்வதி, கம்ருதீனைச் சாடிய விஜய் சேதுபதி

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 89 நாள்களைக் கடந்துவிட்டது. மொத்தம் 9 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் இருக்கின்றனர். நிகழ்ச்சி முடிய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க் நடந்தது.... மேலும் பார்க்க

BB Tamil 9: "எல்லோரும் கார் டாஸ்க் சம்பவத்தை பெரிய விஷயமா பேசுறாங்க, ஆனா.!" - வியானா சொல்வது என்ன?