வெனிசுவேலா மீது அமெரிக்காவின் தாக்குதல் — இலக்கு போதைப்பொருள் கடத்தலா, எண்ணெய் ...
'வெற்றிகரமான தாக்குதல்; அதிபரை வெளியேற்றிவிட்டோம்' - வெனிசுலாவை குறிவைத்த ட்ரம்ப்
தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் நிக்கோலஸ் மதுரோ அதிபராக பதவியேற்றதில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.
இந்த நிலையில், இன்று வெனிசுலா மீது வான்வழித் தாக்குதல் நடத்தியது அமெரிக்கா. இதையடுத்து வெனிசுலாவில் 'தேசிய அவசரநிலை' அமல்படுத்தப்பட்டது.
தற்போது நிக்கோலஸ் மதுரோ நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டிருக்கிறார்.
இதுகுறித்து தனது ட்ரூத் பக்கத்தில் ட்ரம்ப் பதிவிட்டிருப்பதாவது...
"வெனிசுலா மீது அமெரிக்கா வெற்றிகரமாக தாக்குதலை நடத்தி முடித்துள்ளது.

வெனிசுலாவின் அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி பிடிக்கப்பட்டு, நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டிருக்கின்றனர். இந்த நடவடிக்கை அமெரிக்க சட்ட அமலாக்கத்துடன் இணைந்து செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தகவல்கள் இன்று காலை (அமெரிக்க நேரப்படி) 11 மணிக்கு நடக்கும் செய்தியாளர்கள் சந்திப்பில் தரப்படும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதுவரை பல நாடுகளில் அமைதியை நிலைநாட்டினேன் என்று கூறி வந்த ட்ரம்ப், தற்போது வெனிசுலா மீது அவரே தாக்குதலை நடத்தி உள்ளார்.

















