காஞ்சிபுரம் கயிலாசநாதர் கோயில்: போரை நிறுத்திய பொக்கிஷம்; இந்த ஈசனை சுற்றி வந்தா...
Parasakthi Audio Launch: "டைட்டில் மாதிரியே படமும் பவர்புல்தான்!" - சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயனின் 25வது திரைப்படமான 'பராசக்தி' திரைப்படம் வருகிற 10-ம் தேதி திரைக்கு வருகிறது.
சுதா கொங்கரா இயக்கியிருக்கும் இப்படத்தில் ரவி மோகன் வில்லனாக நடித்திருக்கிறார்.
ஶ்ரீலீலா, அதர்வா ஆகியோரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். ஜீ.வி. பிரகாஷ் இசையமைக்கும் 100-வது திரைப்படம் இது.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாய்ராம் கல்லூரியில் பிரமாண்டமான முறையில் நடைபெற்று வருகிறது.
படக்குழுவினர், சிறப்பு விருந்தினர்கள் எனப் பலரும் இந்த நிகழ்வில் பங்கேற்றிருக்கிறார்கள்.
விழாவில் சிவகார்த்திகியன் "முதல்ல 'பராசக்தி' பெயரே பவர்ஃபுலான பெயர். அது எப்படி பவர்ஃபுலாக இருக்கோ, அதே மாதிரி படமும் பவர்ஃபுல் தான்.
உங்க எல்லாரையும் 1960களுக்கு டைம் டிராவல் பண்ணி கூட்டிட்டு போறது தான் இந்த படம். மாணவர்களும், இளைஞர்களும் எப்போதும் பவர்ஃபுல்னு காட்டுற படம்தான் பராசக்தி.
இது யாருக்கும் எதிரான படமோ, யாரையோ தப்பா காட்டுற படம் இல்ல. ஆனா இந்த மண்ணுக்காக போராடிய தியாக செம்மல்கள் பற்றின படம்.

இதுக்கு மேல படம் பேசும்! அருண் விஷ்வா ப்ரோவுக்கு ஸ்கிரிப்ட் படிக்குறதுக்கு முன்னாடியே போன் பண்ணி ‘இந்த படம் பண்ணுறதுக்கு ஒரே காரணம் சுதா மேடம் தான்’னு சொன்னேன். அவங்களோட எனக்கு பழக்கம் இல்ல.
ஆனா, அவங்க எப்படி வொர்க் பண்ணுவாங்கன்னு தெரியும். ஸ்கிரிப்ட் படிச்சு முடிச்சதும் கதை ரொம்ப ரொம்ப பிடிச்சிருந்தது.
சுதா மேடம் ஷூட்டிங்லையும் இங்கிலீஷ்லதான் எக்ஸ்ப்ளெயின் பண்ணுவாங்க. இங்கிலீஷ்னா சாதாரண இங்கிலீஷ் இல்ல, அது ஷேக்ஸ்பியர் இங்கிலீஷ்!
நான் கௌதம் மேனன் சார்கூட படம் பண்ணிருந்தா எனக்கு எக்ஸ்பீரியன்ஸ் இருந்திருக்கும். அதுனால எனக்கு அவங்க பேசுறது புரியல. இந்த படம் நிச்சயமா வெற்றி பெறும்னு நம்பிக்கை இருக்கு.
ஆனா உங்க (சுதா கொங்கரா) உழைப்புக்காக கண்டிப்பா இது ஓடும் மேம். காலேஜ்ல சில டீச்சர்கள் ஸ்ட்ரிக்ட்னு சொல்வாங்க. ஆனா, காலேஜ் முடியும்போது ரொம்ப ஃப்ரெண்ட்லியா இருப்பாங்க. அப்படிதான் இப்ப மேடமும் எனக்கும் இருக்குற ரிலேஷன்ஷிப்.
காலேஜ் படிக்கும்போது ‘எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி’ படம் பார்த்துட்டு, படத்துல ரவி மோகன் சார் போட்டிருந்த காஸ்ட்யூம்ஸ் எல்லாம் தேடித் தேடி போய் வாங்கி போட்டிருக்கோம். ஸ்க்ரீன்ல உங்கள ரொம்ப ரசிச்சிருக்கேன். கூட வொர்க் பண்ணும்போது ரொம்ப ரசிச்சேன் சார். தேங்க் யூ சார்!
அதர்வா ப்ரதருடைய கதாபாத்திரத்தைப் பற்றி நான் படிக்கும் போது ‘இந்த கேரக்டர் யாருக்கு கிடைக்குதோ, அவங்க ரொம்ப லக்கி’னு நினைச்சேன். அது அதர்வா ப்ரதருக்கு கிடைச்சது ரொம்ப சந்தோஷம். இந்த இண்டஸ்ட்ரில எனக்கு கொஞ்சம் நண்பர்கள் தான் இருக்காங்க.
அதர்வா ப்ரதர் எனக்கு ஒரு பிரதர். நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து ஜாலியா ஒரு படம் பண்ணுவோம். இந்த படத்துல உங்க ரோல் எல்லாருக்கும் பிடிக்கும். உங்க அப்பாவ ரொம்ப பெருமைப்படுத்தும்!
ஸ்ரீலீலாவோட டான்ஸ் எல்லோருக்கும் ரொம்ப பிடிக்கும். அவங்க டான்ஸ் எப்படி பிடிச்சதோ, அதே மாதிரி உங்க ரோல் இந்த படத்துல எல்லாருக்கும் பிடிக்கும். சுதா மேடம் படத்துல எல்லா ஹீரோயின் ரோலும் பவர்ஃபுலாக இருக்கும். ஆல் தி பெஸ்ட் உங்களுக்கும்!" எனப் பேசினார்.



















