`2029-ல் அமித் ஷா காலியாகிவிடுவார்' - சொல்கிறார் அமைச்சர் ஐ.பெரியசாமி
வெனிசுலா அதிபர் சிறைப்பிடிப்பு: கண்டனமும் பேச்சுவார்த்தை அழைப்புகளும்; உலக நாடுகள் சொல்வது என்ன?
வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மாதுரோவை அமெரிக்கா சிறைப்பிடித்ததற்கு அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்குப் பல நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
ரஷ்யா - "வாஷிங்டனின் இந்த முடிவு கண்டனத்திற்குரியது. வாஷிங்டன் கூறும் காரணம் அவர்கள் செய்த காரியத்தை நியாயப்படுத்தாது.
நடைமுறைக்குச் சாத்தியமான விஷயத்தைத் தாண்டி இதில் அரசியல் வெறுப்புணர்வுதான் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது. மதுரோ மற்றும் அவரது மனைவி வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டது குறித்து அமெரிக்கா உடனடியாக விளக்கம் வழங்க வேண்டும்".

ஈரான் - "வெனிசுலா மீதான அமெரிக்காவின் ராணுவ தாக்குதல் கடுமையான கண்டனத்திற்குரியது. இது அந்த நாட்டின் தேசிய இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை அப்பட்டமாக மீறுவது ஆகும்".
கொலம்பியா அதிபர் குஸ்டாவோ பெட்ரோ - "இது லத்தீன் அமெரிக்காவின் இறையாண்மை மீதான தாக்குதல். ஏற்கெனவே இடம்பெயர்வு போன்ற அழுத்தங்களால் பாதிக்கப்பட்டிருக்கும் வெனிசுலாவின் அண்டை நாடுகள் இந்தத் தாக்குதலால் மிகப்பெரிய மனிதநேய பிரச்னைகளைச் சந்திக்கும்".
ஸ்பெயின் - "இருதரப்பினர் இடையேயும் ஓர் அமைதியான முடிவை எடுக்க பேச்சுவார்த்தை நடத்தத் தயார்".
இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மர் - "நான் அமெரிக்க அதிபர் ட்ரம்பிடம் பேச வேண்டும். எங்களுக்கு இந்த விஷயத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பது எனக்கு தெளிவாகப் புரிகிறது. ஆனால், எப்போதுமே சர்வதேச சட்டங்களைக் காக்க வேண்டும் என்பதில் நான் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளேன்".













